1/18/2009

உதறிவிட்ட உறவு

...................................................

கருங்கல் பாறையை நெஞ்சுக்குள் சுமந்து

கனத்திடும் அக்கினி நீரை கண்களுக்குள் விட்டு

ஊசலாடும் தூக்கணாம் குருவிக் கூட்டை வாழ்க்கையாக்கி

காந்தகக்காற்றினை உயிர் வரை சுவாசித்து

நரம்புகள் மட்டும் நடமாட

பிணமாகவோ உயிராகவோ

அலைகிறது கறை படிந்த தார் றோட்டில்

யாருக்கும் சொந்தமில்லை இவ்வுலகில் இப்பொருள்

வாழ்க்கை சூட்சுமமதில் சுழண்டடித்த பின்னர்

கடவுள் வரை சென்றுவிட்டேன்

மன்னிப்பும் கேட்டுவிட்டேன்

இதுவரைக்கும் வெடிக்கவில்லை

இறுகியிருந்த இதயப்பாறை.

...................................................

2 comments:

kumari.rukmani said...

தேடுகிறேன் சிலவரிகளாவது இருக்குமென்று நட்பைப் பற்றி ....???

நிலாமதி said...

கல்லுக்குள்ளும் ஈரம் உண்டு சில நெஞ்சங்கள் ஏனோ இளகுவதில்லை.......உண்மை அன்பின் ஆழம் புரியாமல் . நல்ல கவி வரிகள் ரசித்தேன். நிலாமதி அக்கா