9/22/2010

நான் பித்து பிடித்து திரிகின்றேன்


சின்ன மழைத்துளி
யன்னலில் முட்டிமோதி
நெஞ்சத்தை தொட்டுப்பார்க்க

ஒற்றை உருவத்தில்
இரு விழிகள்
ஓராமாய் எட்டிப்பார்க்க

மெல்ல நடையில்
குடைபிடித்து
இடை அசைத்து போறாள்

சொல்ல வரியின்றி
சொர்க்க வரிகளை
தேடுகின்றேன்

வெல்ல வழியிருந்தும்
பித்து பிடித்து
திரிகின்றேன்

15 comments:

அன்பரசன் said...

நல்லா இருக்குங்க.

வினோ said...

/ ஒற்றை உருவத்தில்
இரு விழிகள்
ஓராமாய் எட்டிப்பார்க்க /

அருமை நண்பரே..

ஹேமா said...

சரிதான்...சித்தன் பித்தனாயிட்டார்.
காதல் படுத்தும் பாடு யாதவன் !

நிலாமதி said...

காதல் படுத்தும் பாடு

Anonymous said...

ஆஹா ஆஹா என்னே காதல் படுத்தும் பாடு...

Lakshman said...

ஓர் அன்ன நடை மெல்லிடை யால் மங்கையால்
மொத்தத்தில் அண்ணா பைத்தியம் ஆயிட்டார்.
ஒ இதுதான் காதலோ?

கவி அழகன் said...

அன்பரசன், வினோ,ஹேமா,நிலாமதி,தமிழரசி,Lakshman
நன்றி நல்ல உள்ளங்களே உங்களின் கருத்துக்களால் என் கவிதை வாழ்கின்றது

Thenammai Lakshmanan said...

ஹாஹாஹ்ா ஹேமா சொன்னதுதான்.. யாதவன்.. பித்தனாயிட்டார்..

Sriakila said...

இப்பத்தான் ஜோடி சேர்ந்து வாழப்போறேன்னு சொன்னீங்க, அதுக்குள்ள பித்துப்பிடித்து திரிய ஆரம்பிச்சாச்சா...

எப்படியோ நல்லா இருந்தா சரி!

Unknown said...

இன்றைய கவிதை அசத்தல் ...

சௌந்தர் said...

அருமையான வரிகள்

கவி அழகன் said...

தேனம்மை லெக்ஷ்மணன்,Sriakila ,கே.ஆர்.பி.செந்தில்,சௌந்தர்

நன்றி நல்ல உள்ளங்களே உங்களின் கருத்துக்களால் என் கவிதை வாழ்கின்றது

சிந்தையின் சிதறல்கள் said...

அருமை நண்பா

Priya said...

அருமையான கவிதை!

ம.தி.சுதா said...

ஃஃ..சொர்க்க வரிகளை
தேடுகின்றேன்..ஃஃ
அருமை இப்படியுமொரு வரியிருக்கா எனக்கும் கடன் தாருங்கள்..