
பனி படர் இரவினில்
தனித்திடும் கற்பனை
காதலில் விழுந்தவர்
கண்களில் ஏது நித்திரை
சிரித்திடும் இதழ்களில்
காதலின் சொற்சுவை
மூச்சுக்கு ஒருமுறை
அவள் நாமம் அர்ச்சனை
நெஞ்சுடன் அணைத்திட
வேண்டும் ஒரு தலையணை
நித்தமும் கொடுத்திடும்
முத்தம் தான் எத்தனை
நிலவுடன் கதைதிடும்
கவிஞனின் சிந்தனை
காதலில் விழுந்திட
யார் செய்தார் செய்வினை
Tweet | |||||
36 comments:
////நித்தமும் கொடுத்திடும்
முத்தம் தான் எத்தனை////
தலையணைக்குத் தானே...
அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
மனித நேயம் கொண்ட தமிழரே எம் பாவம் தீர்ப்போம் வாருங்கள்
மிகச் சரியாக கற்பனை செய்திருக்கிறீர்கள்
நிஜமாகவே காதலிப்பவர்கள் எல்லாம்
செய்வினை செய்ய்யப்பட்டவர்கள் போலத்தான்
தானாக சிரிக்கிறார்கள் தானாக பேசிக்கொள்கிறார்கள்
அதிகமாக செய்வினை செய்யப்பட்டவர்கள்தான்
நல்ல கற்பனைவளம் உள்ள கவிதைகளும் தருகிறார்கள்
வாழ்க வளர்க காதல் செய்வினை
//////
காதலில் விழுந்தவர்
கண்களில் ஏது நித்திரை ///////
அதுதான் காதல் செய்யும் மந்திரம்..
////
நிலவுடன் கதைதிடும்
கவிஞனின் சிந்தனை
காதலில் விழுந்திட
யார் செய்தார் செய்வினை ////
இது சுகமான செய்வினை..
இங்கே மௌனங்களும் பேசும்..
காயங்களும் சுகமே...
யாரும் செய்வினை செய்யவில்லை. காதலர்களே தமக்குத் தாம் செய்த செய்வினையது. கல்யாணம் செய்த பின் இத்தனை அவஸ்தை இருக்காது என்றுதான் நினைக்கிறேன்.
வரிகள் கனகச்சிதம் பாஸ் ...
/நிலவுடன் கதைதிடும்
கவிஞனின் சிந்தனை
காதலில் விழுந்திட
யார் செய்தார் செய்வினை/
aalakiya kavitha
valththukkal............sako/
///நெஞ்சுடன் அணைத்திட
வேண்டும் ஒரு தலையணை
நித்தமும் கொடுத்திடும்
முத்தம் தான் எத்தனை/// இல்லாதோர்க்கு தலையணை இருப்பவர்க்கு எதற்கு தலையணை ஹிஹிஹி
பாஸ்... confirm ஆயிடுச்சு... உங்க கவித அவ்ளோ உணர்வுபூர்வமா இருக்கு..(இது எப்படி உனக்கு தெரியும்’னு கேக்க கூடாது)
நெஞ்சுடன் அணைத்திட
வேண்டும் ஒரு தலையணை
நித்தமும் கொடுத்திடும்
முத்தம் தான் எத்தனை//very nice boss..always u r rocks..
செய்வினை நாமளா வெச்சிக்கறதுதான் ஹா ஹா
காதலில் விழுந்திட
யார் செய்தார் செய்வினை ரெம்ப நல்லா சாப்பிட்டு சந்தோசமா இருந்தா ஹார்மோன்கள் சூனியம் வைக்கும் கவி அழகா....
Vetha.Elangathilakam.
http://kovaikkavi.wordpress.com
இணைவோம் தோழரே..
சிவயசிவ
http://sivaayasivaa.blogspot.com
நல்ல வரிகள்...
அசத்தலான கவிதை..
அருமையான வரிகள்..
எல்லாருமே சொல்லிவிட்டார்கள்.இது எங்களுக்கு நாங்களே வச்சுக்கொள்கிற சூனியம் !
//
சிரித்திடும் இதழ்களில்
காதலின் சொற்சுவை
மூச்சுக்கு ஒருமுறை
அவள் நாமம் அர்ச்சனை
//
அருமையான , அழகான வரிகள்
வலைசரத்தில் நான் ..
வாங்க வசமா மாட்டிகிட்டிங்களா ?
நிலவுடன் கதைதிடும்
கவிஞனின் சிந்தனை
காதலில் விழுந்திட
யார் செய்தார் செய்வினை super anna, vaalga valarga
நெஞ்சுடன் அணைத்திட
வேண்டும் ஒரு தலையணை
நித்தமும் கொடுத்திடும்
முத்தம் தான் எத்தனை
தம்பீ நான் தெரியம தான் கேக்கிறேன்
அண்ணன் இப்பிடி கேக்க- கூடாதுதான் ஆன
கேக்க வைச்சிட்டியே
ஆமா, எத்தனை எத்தனை கேட்டியே
அது வாங்கனதா கொடுத்ததா
எப்படியோ செம்புலப் பயல் நீர்போல
அன்புடை நெஞ்சம் கலந்தா சரி
காதல் வளர கவிதை வளரும் வாழ்க
புலவர் சா இராமாநுசம்
நிலவுடன் கதைதிடும்
கவிஞனின் சிந்தனை
காதலில் விழுந்திட
யார் செய்தார் செய்வினை . . .
உண்மை தான் காதலும் செய்வினைப் பயன் தான். . . அருமையான கவிதை. . .
காதல் பிழியும் வரிகள்
காதலிக்காதவர்களுக்கும் காதல் ஆசை வரும்
உங்கள் கவி படித்தால்.
//பனி படர் இரவினில்
தனித்திடும் கற்பனை
காதலில் விழுந்தவர்
கண்களில் ஏது நித்திரை//
நானும் தூக்கம் தொலைத்து
இதை அனுபவித்து இருக்குறேன் நண்பா
உங்களுக்கும் அனுபவம்தான் கவிதை ஆகி இருக்கோ
யார் செய்தார் செய்வினை//
அழகான செய்வினை.
தாமதமான வணக்கம் பாஸ்
காதலில் விழுந்திட யார் செய்தார் செய்வினை//
ஆஹா..நம்ம கவிக்கிழவருக்கும் இந்த வைரஸ் தொத்திடுச்சா...
யாரும் செய்வினை வைக்கவில்லை, அவளின் ஓர விழிப் பார்வை தான் சூனியம் வைத்திருக்கும்;-))
பனி படர் இரவினில்
தனித்திடும் கற்பனை
காதலில் விழுந்தவர்
கண்களில் ஏது நித்திரை//
ஆஹா....ஆளுக்கு காதல் முத்திப் போச்சு(((;
காதலில் விழுந்தால், உறக்கம் தொலையும் என்பது உண்மை தான் பாஸ், அதனைத் தத்ரூபமாகப் பதிவு செய்திருக்கிறீங்க.
சிரித்திடும் இதழ்களில்
காதலின் சொற்சுவை
மூச்சுக்கு ஒருமுறை
அவள் நாமம் அர்ச்சனை//
வேறு யாரும் பெயர் சொல்லி அழைத்தாலும், அவள் கூப்பிடுவது போல இருக்குமே.....
இதுக்கு ஒரே மருந்து, பழைய நிர்வாக சேவைக்கு போற வழியில் கிளிநொச்சியில் இருக்கும் கிளினிக்கிற்கு சென்று மருந்து எடுப்பது தான்..
ஹா...
ஹா...
நெஞ்சுடன் அணைத்திட
வேண்டும் ஒரு தலையணை
நித்தமும் கொடுத்திடும்
முத்தம் தான் எத்தனை//
ஆஹா...தலையணைக்கு முத்தமா...
சீக்கிரமே உங்களுக்கு கலியாணம் ஆக இறைவனை வேண்டுகிறேன்.
நிலவுடன் கதைதிடும்
கவிஞனின் சிந்தனை
காதலில் விழுந்திட
யார் செய்தார் செய்வினை//
சான்ஸே இல்லை பாஸ்,
காதலில் விழுந்தோருக்கு ஏற்படும் உணர்வுகளை அற்புதமாகப் படைத்திருக்கிறீங்க...
நிலவுடன் பேசுதல், மரஞ் செடி கொடிகளுடன் பேசுதல் காதலில் விழுந்தோருக்குச் சகஜம் என்று அனுபவசாலிகள் சொல்கின்றார்கள் பாஸ்.
காதலில் விழுந்திட யார் செய்தார் செய்வினை//
காதலில் விழுந்த ஒருவனின் உள்ளத்து உணர்வுகளை,
ஒருவன் காதல் கொண்ட பின்னர் அவனுள் ஏற்படும் மாற்றங்களைத் தாங்கி வந்திருக்கிறது.
இதயத்தை ...
பிழிந்தெடுத்து
அதை
உங்களின்
எழுத்தானியில்
நிறப்பி
பாவரிகலாய்
அறிமுகம்
செய்கிறீர் .
படிக்கும்
எமக்கலாவா
கண்களில்
இரத்தம்
சிந்துகிறது
நிலவுடன் கதைதிடும்
கவிஞனின் சிந்தனை
காதலில் விழுந்திட
யார் செய்தார் செய்வினை யாரும் செய்வினை வைக்கவில்லை, அவளின் ஓர விழிப் பார்வை தான் சூனியம் ?வைத்திருக்கும்?
இதுக்கு பேர்தான் சொந்த செலவில் சூனியம் வைக்குறது பாஸ்
அருமையான கவி வரிகள்
காதல் செய்வினை :)
நல்லாத்தான் இருக்கையா ஆனால் இப்படியான கவிதைகளை ஒரு பதினைந்து வருடத்திற்கு முன்னர் கேட்டிருந்தால் என்ர காதலிக்கு கொப்பி பேஸ் செய்திருப்போமில்ல காட்டானுக்கு எப்போதுமே காலங் கடந்த ஞானம்தான்..?
//மூச்சுக்கு ஒருமுறை
அவள் நாமம் அர்ச்சனை//
ஆஹா என்ன ஒரு கற்பனை !
அருமை ....
அனால் கல்யாணத்துக்கு பிறகு வேற மாதிரி அர்ச்சனை பண்ணுவாங்க. ஹா ஹா ...
Post a Comment