
நெருப்புக்குள் கண்வைத்தேன் என்
நெஞ்சுக்குள் சொல்வைத்தேன்
கண்முன் நடப்பவற்றை
கடவுளுக்கே சொல்லிவைப்பேன்
* * *
மார்பிலே பாலுமில்லை
வந்தாலும் பிள்ளையில்லை
பானையில் சோறுமில்லை
இருந்தாலும் கொடுக்க ஆக்களில்லை
* * *
ஊரக்கு போவதாற்காய்
எத்தனை நாள் ஏங்கிநின்றேன்
முள் வேலியைத்தாண்டுவதற்கு
எத்தனைநாள் மூச்சுவிட்டேன்
* * *
குளிப்பதற்கு இடமுமில்லை
குளித்துஉடைமாற்ற மறைவுமில்லை
குடிப்பதற்கே தண்ணீர் இல்லை
குந்திவிட்டு கழுவ எங்கேபோவோன்
* * *
பத்தடியில் வீடுதந்தார் அதற்குள்
பத்தபேரைத்தங்கவைத்தார்
படிப்பதற்கும் வசதியில்லை
படிக்கச்செல்ல பிள்ளையில்லை
***
செத்தவர்களை சொல்லவில்லை-அவர்கள்
செத்தனரா தெரியவில்லை
கைதானவர்கள் எங்கு இருப்பர்-அதில்
என் பிள்ளையுண்டா தெரியவில்லை
நெஞ்சுக்குள் சொல்வைத்தேன்
கண்முன் நடப்பவற்றை
கடவுளுக்கே சொல்லிவைப்பேன்
* * *
மார்பிலே பாலுமில்லை
வந்தாலும் பிள்ளையில்லை
பானையில் சோறுமில்லை
இருந்தாலும் கொடுக்க ஆக்களில்லை
* * *
ஊரக்கு போவதாற்காய்
எத்தனை நாள் ஏங்கிநின்றேன்
முள் வேலியைத்தாண்டுவதற்கு
எத்தனைநாள் மூச்சுவிட்டேன்
* * *
குளிப்பதற்கு இடமுமில்லை
குளித்துஉடைமாற்ற மறைவுமில்லை
குடிப்பதற்கே தண்ணீர் இல்லை
குந்திவிட்டு கழுவ எங்கேபோவோன்
* * *
பத்தடியில் வீடுதந்தார் அதற்குள்
பத்தபேரைத்தங்கவைத்தார்
படிப்பதற்கும் வசதியில்லை
படிக்கச்செல்ல பிள்ளையில்லை
***
செத்தவர்களை சொல்லவில்லை-அவர்கள்
செத்தனரா தெரியவில்லை
கைதானவர்கள் எங்கு இருப்பர்-அதில்
என் பிள்ளையுண்டா தெரியவில்லை
Tweet | |||||
14 comments:
யாதவன்,ஒப்பாரியும் ஓலமும் கேட்டுக் கேட்டு சில சமயங்கள் மனம் கல்லாகி இதுதான் வாழ்க்கை.
வாழ்வோம் என்றாகி,கண் கூடக் கலங்க மாட்டேன் என்கிறது எனக்கு.
கற்பனைகூட செய்துபார்க்க முடியவில்லை நம்மால். ஆனால் நாளும் அதுவே வாழ்க்கையாகிப் போனவர்களுக்கு எப்படியிருக்க்கும். மனசு ரொம்ப வலிக்குதுங்க!
மனிதரில் இத்தனை நிறங்களா? அவர் வலிகளில் இத்தனை வகைகளா?
நெஞ்சுருகுது
நேரில் கண்ட காட்சிகள் மனதில் ஊறி உணர்வுகலர்கி இப்பொழுதுதான் கவிதையாக வருகிறது
நன்றி நண்பர்களே உங்கள் ...............
நெஞ்சம் வெடிக்கிறது எழுத வார்த்தையில்லை நம் முகாம் உறவுகளை நினைக்கையிலே .கடவுளுக்கும் கண் இல்லை , காண்பதற்கு.
ஒரு தாயின் கதறல் ...
நெஞ்சத்தை பிழிகிறது....
கவிதையைப் படித்து முடித்தேன்
என் மனம்
என்னிடம் இல்லை!!!
எங்கு சென்றது என்பதும்
தெரியவில்லை!!
அழகான பதிவு இத்தனை நாள்
இப்பதிவைப் பார்காமல்
எப்படிச் சென்றேன்
என்னும் ஏக்கம்!!!!!
நிலாமதி சி. கருணாகரசு முனைவர்.இரா.குணசீலன் நன்றி உங்களைபோல் தமிழ் வல்லுனர்கள் கிடைப்பது நான் குடுதுவைத்த நபர்
//செத்தவர்களை சொல்லவில்லை-அவர்கள்
செத்தனரா தெரியவில்லை
கைதானவர்கள் எங்கு இருப்பர்-அதில்
என் பிள்ளையுண்டா தெரியவில்லை//
என்ன சொல்ல இழந்தவை யாவையும் ஒவ்வொன்றாய் நினைத்துச் சாகத்தான் முடிகிறது.
சாந்தி
வலிக்கிறது தோழா..! முலையில் நின்று ஒப்பாரி வைக்கும் முடவர்கள் ஆகிவிட்டோமே!
Ovvoru Vaarthaium
En Ethayaththai Thulaiththadu
Nari suba unkal thedalukku
Post a Comment