9/18/2009

யார் நாம்


யாருக்குமுன் யார்போவார்

யார் இருப்பார் யார் அழைப்பார்


யாருக்கும் சொந்தமில்லா உலகில்


யாருடன் யார் இருப்பார்யாருக்கும் உதவாத உடலை


யாரையோ பெறுவதற்கு


யாதகம் பார்த்து


யாருக்கோ கட்டிவைப்பார்யாருடனும் யாருமில்லை

யாருக்கும் யாருமில்லை

யாரும் உதவிக்கில்லை-நாம்


யாரென்றும் தெரியவில்லை


17 comments:

கவிக்கிழவன் said...

மன்னிக்க வும் ஹேமா. முடியவில்லை
நான் இருப்பது இலங்கையில்

anto said...

சூன்யத்தில் ஒலிப்பதாய் உள்ளன உங்கள் வார்த்தைகள்....

Anonymous said...

பிரசவ வலி பின்வாங்கும் இந்த வார்த்தைகளின் வலியில்.....

க.பாலாஜி said...

//யாருக்கும் உதவாத உடலை
யாரையோ பெறுவதற்கு
யாதகம் பார்த்து
யாருக்கோ கட்டிவைப்பார்//

வேதனை மிகுந்த வரிகள்...நெஞ்சில் தைக்கிறது...

சந்ரு said...

நல்ல வரிகள். நல்ல கோர்ப்பு...

ஹேமா said...

யாதவன் மனம் சோர்ந்து போகவேண்ட்டாம்.
வெல்வோம் வாழ்வோம்.
நம்பிக்கையோடு முயல்வோம்.

புலவன் புலிகேசி said...

நல்ல அருமையான வரிகள். நெஜ்ஜம் வலிக்கிறது....

பிரியமுடன்...வசந்த் said...

ப்ச்...வலிகள்....

ஜெஸ்வந்தி said...

நம்பிக்கையுடன் இருங்கள். நிச்சயம் வழி பிறக்கும்.

Anonymous said...

naabare!
sollamal mounathai mattume pathilaaki, en siram thaazthi ungal paathangalili mannippu kettu veelzkiren en kaiyaagalatha thanatai enni

velji said...

உணர்வற்ற அரசியல் உறவுகளைக் கொன்றொழித்தால்...யாருக்குத்தான் யாரிருக்க!

நிலாமதி said...

யாருக்குமே எதுவும் சொந்தமில்லை..........

சுப.நற்குணன் said...

யாரோ..
யாருக்கு இங்கு யாரோ..
யாரோடு இங்கு யார் வருவாரோ..
யாரோடு யார் எங்கு போவாரோ..

கவிக்கிழவருக்குப் பாராட்டு!

கவிக்கிழவன் said...

anto தமிழரசி க.பாலாஜி சந்ரு ஹேமா புலவன் புலிகேசி பிரியமுடன்...வசந்த் ஜெஸ்வந்தி velji நிலாமதி சுப.நற்குணன்
வாழ்வதற்காக சாவதும் வாழ்ந்து கொண்டே சாவதும் தமிழ் இனம் ஒன்றுதான்

யாழினி said...

அற்புதமான கவிவரிகள்! வேதனையின் வலிகளை மனதில் உறைய வைக்கின்றன. வாழ்த்துக்கள் கவிக்கிழவன்!

இய‌ற்கை said...

:-(வலிக்கிறது:-(

Dr.எம்.கே.முருகானந்தன் said...

"யாருக்கும் உதவாத உடலை
யாரையோ பெறுவதற்கு
யாதகம் பார்த்து
யாருக்கோ கட்டிவைப்பார்"
அருமையான வரிகள். நன்கு ரசித்தேன்.