9/29/2009

இறப்பதற்கு யாருமே இல்லை


நான் இறந்தால்


தூக்குவதற்கு

நாலுபேர் இல்லை

நான் இறந்தால்

கவலைப்பட

மூன்றுபேர் இல்லை

நான் இறந்தால்

அழுவதற்கு


இரண்டுபேர் இல்லை

நான் இறந்தால்

கொள்ளிவைக்க

ஒருமகன் இல்லை

நான் இறந்தபின்

இறப்பதற்கு குடும்பத்தில்

யாருமே இல்லை

9 comments:

சந்ரு said...

பலரின் ஏக்கம் உங்கள் கவி வரியாக...
நல்ல வரிகள்...

நிலாமதி said...

தனிமையும் விரக்தியின் வலியும் தெரிகிறது ....நமது முகாம் களில் வாடும் மக்களின் ஒலமாக் இருக்கிறது. எனக்கென்று யாரு இருக்கிறார்கள் ?

பிரியமுடன்...வசந்த் said...

ayyo..

yaazhavan...

pls stop....

we are .... solla mudiyala....

கதிர் - ஈரோடு said...

அய்யோ

கதிர் - ஈரோடு said...

//நிலாமதி said...
எனக்கென்று யாரு இருக்கிறார்கள் ?//

என்ன சமாதானம் சொல்ல முடியும். மன்னியுங்கள்

கவிக்கிழவன் said...

சந்ரு நிலாமதிபிரியமுடன்...வசந்த் கதிர் - ஈரோடு நன்றி நண்பர்களே
எமது நிலை
இவற்றை நாம் ஆவணபடுத்தது விட்டால் நாளைய தலைமுறைக்கு தெரியாமலே போய் விடும்

இறக்குவானை நிர்ஷன் said...

தனிமையின் வலிகளை வரிகளாக்கியிருக்கிறீங்க.
நல்லாயிருக்கு.

எழுத்து தொடரட்டும்.

ஜெஸ்வந்தி said...

மறக்கவோ ,மறைக்கவோ முடியாத யதார்த்தம் யாதவன். இது என்ன சாபக் கேடு?

அன்புடன் மலிக்கா said...

கவிபடித்து முடிக்கும்முன்
கண்களில் நீர்
ஏனென்றுத்தெரியவில்லை
இதயமும் அடைக்கிறது..