9/28/2009

உடன்நிகழ்காலம்

உடன்நிகழ்காலம் உருக்குலைந்துவிட்டது

உண்மைகள் எல்லாம் தலைகுனிந்துவிட்டது

உணர்வுகள் இப்போ வரையருக்கப்பட்டது

உணர்ச்சிகள் எல்லாம் நிலைகுலைந்துவிட்டதுஉங்களுக்கென்றுதான் நிதி திரட்டப்பட்டது

உண்மையில் அது சூரையாடப்பட்டது

உயிரனங்கள் எல்லாம் ஊனமாக்கப்பட்டது

உள்ளங்களின் வேதனைவடுக்கள் புதைக்கப்பட்டதுஉச்சக்கட்டத்தில் உயிர்கள் கொல்லப்பட்டது

உத்தமர்கள்போல் ஊடகங்கள் காட்டிக்கொண்டது

உருவாகமுன்னே சிசுக்கலைப்பு நடந்தேறியது

உறவுகள் மூச்சுவிட முடியாது நசிக்கப்பட்டதுஉயிருடனே உடல்கள் எரிக்கப்பட்டது

உண்ணாநிலைகூட மறுக்கப்பட்டது

உரிமைகள் எல்லாம் பறிக்கப்பட்டது -இப்போ

உலகமே தமிழரை கைவிட்டுவிட்டது


5 comments:

பிரியமுடன்...வசந்த் said...

:(

வெட்கி தலை குனிய வேண்ட்யிருக்கிறது

சந்ரு said...

நம் உறவுகளின் நிலையினை கவிதையாய் அழகாகச் சொல்லி இருக்கின்றீர்கள் அத்தனை வரிகளுக்கு அருமை

ஹேமா said...

நிகழ்காலமே உருக்குலைந்துவிட்டது.
உண்மைகள் அரசியல் சாக்கடைக்குள்.
உணர்வுகள் கம்பிகளுக்கிடையில்.
தமிழன்...
புத்தனின் போதனைகளைத் தேடியபடி.

கவிக்கிழவன் said...

நன்றி நண்பர்கள் பிரியமுடன்...வசந்த சந்ரு ஹேமா

நிலாமதி said...

உள்ளத்து உணர்வுகளை எல்லாம் கவிதையாக்கி கொட்டி தீர்த்து இருக்கிறீர்கள். உண்மைகள் உறங்கி விட்டது .நியாயங்கள் அரசியலாக்க பட்டது மக்களின் உணர்வுகளை முட்கம்பிகளுக்குள் சமாதியாக்கி விடார்கள். மனிதம் உயிருக்கு ஊசலாடிக்கொண்டு இருக்கிறது .............தமிழனை உலகம் மறந்து விட்டதா ?