9/18/2009

பரம்பரையே ??????

வேரறுத்து குடும்பங்களை

ஊரைவிட்டு ஓடவைத்தார்

பாரினிலே யாவருக்கும்


உரிமையில்லை என்றுரைத்தார்வீடிளந்த எம்மரை வெறும்

வெட்டையிலே தங்கவைத்தார்


காடறுத் செய்த இடம்

வெள்ளத்தில் மூள்கினதோசோறுமில்லை யாருமில்லை

சொந்தம் கொள்ள பெயருமில்லை


நாடிலந்து நிற்கும்நிலை

நாயைவிட கேவலம்தான்வேளாமை செய்துவைத்தோம்
- பெரும்

பேராண்மை கொண்டுநின்றோம்


ஏலாமல் வந்தவனை


விருந்தோம்பி ஏற்றிவைத்தோம்பாலாறு பசுக்களையும்


சோராத வயல் குளங்களையும்


பரம்பரைக்கே சேர்த்துவைததோம்

இன்று பரம்பரையே இல்லையென்றோம்10 comments:

ஹேமா said...

யாதவன்,ஒவ்வொரு கவிதையிலும் அழ வைக்க வேண்டாம்.கொஞ்சம் மனதைத் திசை திருப்ப மாறுதலாய் ஏதாவது !

கவிக்கிழவன் said...

ஹேமா
நேரே அனுபவித்து கண்ணால் பார்த்து கேட்டது அனுபவித்தது மனதுக்குள் பதிந்து இப்பொழுதுதான் கவிதைகளாக வருகின்றது
திங்கட்கிழமை 21.09.09 திருகோணமலை புல்மோட்டை அகதிகள் முகாமுக்கு செல இருக்கிறேன் நிச்சயம்
எனக்குள்
என் மகளின் வேதனைகள்
உட்புகுந்து கொள்ளும்,
என்னையும் கொல்லும்
அது ஒருநாள் கவிதையாகும்,
கண்கலங்கும்

ஹேமா முயச்சிகிறேன் நான் 5 6 வருடங்களுக்கு முன் எழுதிவைத்த கவிதையை பிரசுரிக்க

நிலாமதி said...

என்ன சொல்லி அழுதாலும் தீராது இந்த துயரம். உயிர் சுமந்த கூடுகளாக தான் நம் இனம் வாழ்கிறது ஒருஇனத்தின் சோகம். பதிவுக்கு நன்றி .

கதிர் - ஈரோடு said...

//இன்று பரம்பரையே இல்லையென்றோம்//

அய்யோ!

தமிழரண் said...

தமிழ் ஈழம் மலரும். நம் தமிழ்ப்பரம்பரை நிச்சயம் தொடரும். வெறும் நம்பிக்கை அல்ல இது! வெல்லப்போகும் உண்மை இது. நன்றி.

கவிக்கிழவன் said...

நிலாமதி கதிர் - ஈரோடு தமிழரண்

வாழ்வதற்காக சாவதும் வாழ்ந்து கொண்டே சாவதும் தமிழ் இனம் ஒன்றுதான்

தியாவின் பேனா said...

வாழ்க்கையே போர்க்களம் ......................

velji said...

எழுதுபவர்களுக்கு நடப்பதை உலகிற்கு சொல்லும் கடமை இருக்கிறது!தொடர்ந்து எழுதுங்கள்...எஞ்சியவர்களுக்காவது விடியும் என்ற நம்பிக்கையில்!

thenammailakshmanan said...

கவிக் கிழவன் உங்கள் கவிதைகள்
மனமெங்கும் இரணமும் வலியும் உண்டாக்குகின்றன
நிஜங்களின் தரிசனம் அதிர்ச்சி தருவதாய் இருக்கிறது
என்னுடைய வலையில் நாம் தமிழர் எனும் தலைப்பில்
என் மனதில் தோன்றிய வருத்தங்களைப் பகிர்ந்து
கொண்டிருக்கின்றேன்

பிரியமுடன்...வசந்த் said...

வலிகள் நிறைந்த வரிகள் யாதவன்