5/27/2012

சொல்லிடத்தானே துடிப்பேன்

உருவான காதல்

தெரியாமல் நானும்

பலகாலம் வாழ்ந்தேன்

மண்ணில்


சிலநேரம் நெஞ்சில்

வந்தாடும் உணர்வால்

தடுமாறிப்போனேன்

என்னுள்


ஒவ்வொருநாளும் உன்னை

பார்க்கின்ற போது

எனை மறந்தாடி போனேன்

உண்மை


இருந்தாலும் என்னை

சுதாரித்து கொண்டு

சிறு சிரிப்போடு கடப்பேன்

உன்னை


தனியாக நானும்

இருக்கின்ற வேளை

உனை நினைக்காமல்

இருக்க மாட்டேன்


இது எதற்காக என்று

தெரியாமல் நானே

விசராக்கி திரிந்தேன்

கண்ணே

இரவோடு இரவாக

கனவோடு கனவாக

உனை மட்டும் காண்பேன்

அன்பே


இதை உன்முன்னே வந்து

உன் கண் முன்னேநின்று

சொல்லிடத்தானே

துடிப்பேன்

10 comments:

Rathnavel Natarajan said...

அருமை.

தனிமரம் said...

கவிதை அருமை நினைவுகள் மனதில் வாழும் காதல்!கனவோடு கனவாக உன்னை மட்டும்`!ம்ம்ம் அற்புதம் கவிக்கிழவா வாழ்த்துக்கள்!

ஹேமா said...

கனவில்தான் வீரம் வரும் காதலுக்கு !

Jawid Raiz said...

அருமை, வாழ்த்துக்கள் கவி அழகன்

kovaikkavi said...

''...இருந்தாலும் என்னை

சுதாரித்து கொண்டு

சிறு சிரிப்போடு கடப்பேன் ...''


இபபடி இருந்தால் வாழ்வை வெல்லலாம். உயர, சிகரம் எட்ட நல்வாழ்த்து கவிஅழகன்.
வேதா. இலங்காதிலகம்.

kovaikkavi said...

''...இருந்தாலும் என்னை

சுதாரித்து கொண்டு

சிறு சிரிப்போடு கடப்பேன் ...''


இபபடி இருந்தால் வாழ்வை வெல்லலாம். உயர, சிகரம் எட்ட நல்வாழ்த்து கவிஅழகன்.
வேதா. இலங்காதிலகம்.

ரெவெரி said...

கவிதை அருமை கவி அழகன் ...

nadarasa sritharan said...

like it.....

Swapna 2v said...

hii.. Nice Post

Thanks for sharing

More Entertainment

For latest stills videos visit ..

.

Athisaya said...

இப்படி எத்தனையோ காதல்கள் கவிதையோடும் கனனவுகளின் பின்னும் ஒளிந்து கொள்கின்றன...அருமை சொந;தமே வாழ்த்துக்கள்