6/15/2012

வெற்றிகொள்ளும் என் பிழைகள்


நினைவை தொட நினைக்கும் கனவு

கனவை தொலைத்து விட்ட இரவு

உயிரை பறிக்கும் உன் உறவு

உருகித்தவிக்கும் என் உலகு


உணர்வை கொடுக்கும் உன் ஸ்பரிசம்

உடம்பு முழுக்க உன் இரத்தம்

நரம்பை முறுக்கும் உன் பார்வை - என்

இரத்த நாளங்களில் வேர்வை


நெளிந்து வளையும் உன் உடம்பு

அதில் ஒடிந்து விழும் என் அன்பு

இமையால் வருடும் என் காதல்

உலகை மறக்கும் உன் ஊடல்


இடையின் வளைவில் என் படைகள்

பத்து விரல்களும் புது கணைகள்

வெட்கம் போடும் பல தடைகள் - அதை

வெற்றிகொள்ளும் என் பிழைகள்

8 comments:

தனிமரம் said...

காதல் கவிதையில் கவிக்கிழவன் விடும் ஊடல் சிலிக்கின்றது!

தனிமரம் said...

உயிரைப்பறிப்பதும் உருகுவதும் காதலின் நிலையோஓஓஓஓஓஓஓஒ

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை ! நன்றி !

ஆதிரா said...

காதலின் புதிய அத்தியாயமா,,

இடையின் வளைவில் என் படைகள்

பத்து விரல்களும் புது கணைகள்
இதுவரை எங்கும் பார்க்காத உவமை

kovaikkavi said...

கவி அழகன் அருமையாக எழுதியுள்ளீர் நல்வாழ்த்து. பணி தொடரட்டும். வாழ்க!
வேதா. இலங்காதிலகம்.

மாலதி said...

இடையின் வளைவில் என் படைகள்

பத்து விரல்களும் புது கணைகள்

வெட்கம் போடும் பல தடைகள் - அதை

வெற்றிகொள்ளும் என் பிழைகள் //அருமைபணி தொடரட்டும்

...αηαη∂.... said...

வாவ் சூப்பர் நண்பா..,

Athisaya said...

நினைவை தொட நினைக்கும் கனவு

கனவை தொலைத்து விட்ட இரவு

உயிரை பறிக்கும் உன் உறவு

உருகித்தவிக்கும் என் உலகு.ஃஃஃஃஃஃஃ
இவ்வரிகளே மனதைத்தொட்டு விட்டது.