5/22/2012

இருக்கிறான் எண்டதே எனக்கு போதும்

இனி என்ன செய்ய முடியும்

செய்வதற்கு என்ன இருக்கு

இருந்ததே ஒரே ஒருத்தன்

இப்பொழுது

எங்கே என்று தெரியாது

சேர்ந்து திரிந்தவர்கள்

இருக்கிறான் என்கிறார்கள்

புயலையும் கிளிதெறிந்தவன்

கடலையும் கரைத்து குடித்தவன்

என் கைக்குள்ளேயே வளர்ந்தவன்

என்னையே வளர்த்து விட்டவன்

சீருடை களட்டமுன்னே

சோறு கேட்பவன்

புத்தப்பையை தூக்கி எறிந்தவன்

குடும்ப சுமையை ஏற்று வாழ்ந்தவன்

நேற்று இரவு வீடு வரவில்லை

அவனது

மட்காட் இல்லா சைக்கிளையும்

வார் அறுந்த செருப்பினையும்

காக்கா கடை சந்தியில

கண்டதா சொல்லியினம்

ஒரு எட்டு போய்

பார்த்திட்டு உறுதிசெஞ்சன்

ஒரு கிழைமையாச்சு

ஒரு மாசமாச்சு

ஒரு செய்தியும் இல்லை

விடியப்புரம் ஆறு மணிக்கு

நாய் குலைக்குது எண்டு

எட்டி பார்த்தன்

படலேக்க ஒருபெடியன்

பதுங்கினான்

நேற்று தான்

வெளியாள விட்டவங்களாம்

என்டமகன் தப்பியோடி

வெளியாள நிக்கிரானாம்

உயிர் எழுந்து

விளி சுரந்து

வந்ததுபோல உணர்வு

இன்னுமும் உயிரோட

இருக்கிறான் எண்டதே

எனக்கு போதும்

நான் தலைவாரி

சீலை சுத்தி

நெஞ்சை நிமிர்த்தி நடப்பதட்க்கு

10 comments:

Unknown said...

azha vaitha varikal aazhamaana varikal :(

நிரூபன் said...

அந் நாளின் அவலங்களை அழுகையுற வைத்து நினைக்க வைக்கும் வரிகள்..

இராஜராஜேஸ்வரி said...

இன்னுமும் உயிரோட

இருக்கிறான் எண்டதே

எனக்கு போதும்

நான் தலைவாரி

சீலை சுத்தி

நெஞ்சை நிமிர்த்தி நடப்பதட்க்கு

ஹேமா said...

ஈழத்தில் இப்படி எத்தனை அம்மாக்கள் இப்படிக் காத்துக்கிடக்கிறார்கள் மனநிலை குறைந்தபடி !

Unknown said...

நெஞ்சில் ஒரு முள்!

கவிதை.

புலவர் சா இராமாநுசம்

arasan said...

ஈட்டியாய் ஒரு கவிதை ...
வலிக்க வைக்கின்றது தோழரே...

அருணா செல்வம் said...

வலிகளை வார்த்தையாக்கி
வடித்திருக்கிறீர்கள்...
படிப்பவரின் கண்களும்
வடிக்கிறது.

Anonymous said...

வேதனை தீராத வேதனை...
வேதா. இலங்காதிலகம்.

Unknown said...

வேதனைகள் புலப்புடகிறது. ம்ம்ம்ம்ம் அழகான வரிகள்..

Swapna 2v said...

hii.. Nice Post

Thanks for sharing

More Entertainment

For latest stills videos visit ..

.