இதயம் விதைத்தோம் ஈழம் பிறக்க
கனவை வளர்த்தோம் காலம் முழுக்க
புயலாய் எழுந்தோம் புருவம் உயர்த்த
புழுதியில் விழுந்தோம் துரோகம் ஜெகிக்க
மூச்சை இழந்தோம் முதுகில் குத்த
பேச்சை இழந்தோம் சிறையில் அடைக்க
சாக துடித்தோம் மண்ணை அணைக்க
சாபம் பெற்றோம் தமிழ் மண்ணை இழக்க
வேள்வி செய்த்தோம் வெற்றி எடுக்க
வெட்ட வீழ்ந்தோம் காட்டி கொடுக்க
நம்பி இருந்தோம் உதவி கிடைக்க
நாயாய் அலைந்தோம் அவர் கையை விரிக்க
இனமாய் அழிந்தோம் மானம் காக்க
பிணமாய் வீழ்ந்தோம் மண்ணை மீட்க
நினைவாய் சுமக்கிறோம் ஈழம் வெல்ல
எழுந்து நிப்போம் வெற்றி பிறக்க
Tweet | |||||
15 comments:
இன்குலாப் ஜிந்தாபாத்
வேதனையான கவிதை.
ஒருமித்த குரலோடு ஒன்று சேர்வோம்.நல்லதே நடக்க அவர் வழி தொடர்வோம்.மரணித்த அத்தனை உயிர்களுக்கும் வீரவணக்கங்கள் !
எழுந்து நிப்போம் வெற்றி பிறக்க
அப்படியே ஆகட்டும்!
அருமையான தன்னம்பிக்கைப் பதிவு
இறுதி வரிகள் நெஞ்சைநிமிரச் செய்து போகிறது
தொடர வாழ்த்துக்கள் த.ம 4
அருமையா சொன்னீங்க.
பகிர்வுக்கு நன்றி .
வாழ்த்துக்கள்.
ஒருமித்த குரலில் ஒன்று சேர்வோம் அவர்களை வாழ்த்தவாவது....
மனசு கனக்கும் கவிதை நண்பா..
அருமை அருமை நன்றி நண்பரே!
எழுந்து நிற்போம்.
தமிழ் ஈழம் மலர்ந்தே தீரும்...இவ்வினத்தின் கவலைகள் அனைத்தும் தீரும்...
விடுதலைக்கு உயிர் தந்த அனைத்து மாவீரர்களுக்கும் என் சிரம் தாழ்ந்த வீர வணக்கம் ...
Arumai Sago.
TM 9.
தமிழ் ஈழம் மலra வாழ்த்துகள்
வணக்கம் பொஸ்,
காலத்தின் கவிதையாக இக் கவியைப் படைத்திருக்கிறீங்க.
இன்னல்களின் மத்தியிலும் இலட்சிய உறுதி குன்றாது நாம் எமக்கான தேசத்தினை உருவாக்க வேண்டும் என்பதனை மீண்டும் மீண்டும் நினைவுபடுத்துகிறது இக் கவிதை.
இன்று கனவு கூட தொலைத்தோமே சகோதரா...
Post a Comment