12/04/2011

கஷ்டத்தின் பின் சிரிப்பு


நிலம் உடைத்து
முளை வெடித்து
துளிர் எழுப்பும்
பயிர்கள்

கன மழையை
சுடு வெயிலை
தாங்கி வளரும்
இலைகள்

நீர் இறைக்க
மண் பதப்படுத்த
பயன் தரும்
விளைச்சல்

பட்ட துன்பம்
கடந்த நேரம்
மறந்து போகும்
முகத்தில்

22 comments:

இராஜராஜேஸ்வரி said...

பட்ட துன்பம்
கடந்த நேரம்
மறந்து போகும்
முகத்தில்

உழைத்த முகத்தில் பெருமிதம் பொங்கும் திருப்பதி..

அருமையான பகிர்வு.. பாராட்டுக்கள்..

வே.சுப்ரமணியன். said...

உழைப்பின் மேன்மையை அழகாக பதிவு செய்திருக்கிறீர்கள், பதிவுக்கு நன்றி!

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

பட்ட துன்பம்
கடந்த நேரம்
மறந்து போகும்
முகத்தில்

அருமையான கவிதை யாதவன்..

kavithai (kovaikkavi) said...

அரிவி வெட்டின் ஆனந்தம் பற்றிய கவிதை. சிறப்பு. 2 வார இடைவெளியோடு , என் வருகை இடைவெளியும் நீண்டு விட்டது. தொடர்வேன் வாழ்த்துகள்.
வேதா. இலங்காதிலகம்.
http://www.kovaikkavi.wordpress.com

Lakshmi said...

உழைப்பின் பெருமையை நல்லா சொல்லி இருக்கீங்க. வாழ்த்துக்கள்.

கவிதை வீதி... // சௌந்தர் // said...

ஒரு விவசாயின் வாழ்க்கை கவிதையில்...

வாழ்த்துக்கள்..

முனைவர்.இரா.குணசீலன் said...

மண்வாசம் நுகர்ந்து சென்றென் கவிஞரே..

விமலன் said...

அதெல்ல்லாம் சரி சார். விளைவித்த பொருளுக்கு தகுந்த விளைகிடைக்கும் போது பட்டதுன்பம் மட்டுமெல்லை எல்லா வலிகளும் மறந்து போகும்தானே?அது உறுதிப்படுகிற வறை பட்டதுன்பம் பட்டதுன்பமாகவும்,சமயத்தில் அதை விட கூடுதலாகவும்/

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

அருமை.

ஹேமா said...

பாடுகள் தீர்ந்து பலன் எடுக்கும் நேரத்தை அதை வார்த்தைகளுக்குள் அடக்கிவிட்டீர்கள் கவிக்கிழவரே !

சி.கருணாகரசு said...

கவிதை கலக்கல்.... உணர்வா இருக்குங்க.

Rathnavel said...

அருமை.

துஷ்யந்தன் said...

ரெம்ப நல்லா இருக்கு பாஸ்

அம்பாளடியாள் said...

மிகவும் அருமையாகச் சொன்னீர்கள் சகோ .பாராட்டுக்கள் .
மிக்க நன்றி பகிர்வுக்கு ....

திண்டுக்கல் தனபாலன் said...

அருமையான வரிகள் நண்பரே!
நம்ம தளத்தில்:
"அறிந்ததா? தெரிந்ததா? புரிந்ததா? - பகுதி 1"

rishvan said...

பட்ட துன்பம்
கடந்த நேரம்
மறந்து போகும்

... nice... www.rishvan.com

♔ம.தி.சுதா♔ said...

///நீர் இறைக்க
மண் பதப்படுத்த
பயன் தரும்
விளைச்சல்////


கட்டாயம் அது இன்றி விளைச்சல் இல்லையே...

ரிஷபன் said...

பலன் கிட்டும் நேரம் பொங்கும் மகிழ்ச்சி அழகாய் வரிகளில்

மாலதி said...

மிகச் சிறந்த ஆக்கம் அதாவது உழைத்து பாடுபட்டு அதன் மகிழ்வை அடையும் நாள் விளைச்சல் நாள்தான் சிறப்பு பாராட்டுக்கள்

சி.பி.செந்தில்குமார் said...

sorry for delayed visit.

உழைப்பின் பெருமை அதன் அறுவடையில்

சந்திரகௌரி said...

சில வரிகளில் மனம் பாதிக்கும் கவிதை: வாழ்த்துகள்

சிவகுமாரன் said...

பட்ட துன்பம் மறைந்தால் சரிதான்.