இலக்குடைந்த
பயணங்கள்
பாதை தோறும்
பள்ளங்கள்
இடர் நிறைந்த
வாழக்கையில்
இலட்சியம் என்பது
வேசங்கள்
பசி நிறைந்த
மேனியில்
உயிர் பிழைக்கும்
மூச்சுக்கள்
உடல் களைத்து
உழைத்தாலும்
சொற்பமாக வரும்
காசுகள்
உடல் விரும்பி
உளம் விரும்பி
துணை விரும்பி
குழந்தைகள் - அவர்
மனம்விரும்பி
நடப்பதற்கு
மரணத்தை தொடும்
வேலைகள்
உலகை படைத்தான்
உயிரை படைத்தான் - ஏன்
வறுமை படைத்தான்
இறைவன் - அந்த
விடையை தேடி
ஓடி ஓடி
உயிரை மாய்க்கும்
ஏழைகள்
Tweet | |||||
20 comments:
கொடுமை கொடுமை வறுமை கொடுமை...!!!!
அருமை அருமை
பாரதி கொண்ட அதே கோபம்
உங்கள் கவிதையிலும்...
தொடர வாழ்த்துக்கள்
த.ம 2
உலகை படைத்தான்
உயிரை படைத்தான் - ஏன்
வறுமை படைத்தான்
இறைவன் - அந்த
விடையை தேடி
ஓடி ஓடி
உயிரை மாய்க்கும்
ஏழைகள்
என்ன அழுத்தமான வரிகள்.
விடையை தேடி
ஓடி ஓடி
உயிரை மாய்க்கும்
ஏழைகள் //
ஆதங்க வரிகள்...
நல்லாயிருந்தது...
உலகை படைத்தான்
உயிரை படைத்தான் - ஏன்
வறுமை படைத்தான்
இறைவன் //
நியாயக் கேள்வி இரக்கமுள்ள அனைவர் உள்ளத்திலும் எழும் கேள்வி
த.ம 4
உலகம் தோன்றி
உயிரும் தோன்றி
தனி மனித
சுயநலம் தோன்றி
பிறந்து வந்தது
வறுமை...
அதை புரிய வைப்பது நம்
கடமை
ஊரில் இருக்கும்போது புரியாத அல்லது தோன்றாத விஷயங்கள் நாட்டைவிட்டு வெளியேறினபிறகுதான் யோசிக்க வருது யாதவன்.எனக்கும்தான் !
உலகை படைத்தான்
உயிரை படைத்தான் - ஏன்
வறுமை படைத்தான்
இறைவன் -
கனமான கேள்வி!???
அருமையான கவிதை.
மனப்பூர்வ வாழ்த்துகள்.
Nice kavithai. and also nice blog
நல்ல கவிதை.வாழ்த்துக்கள்.நிறைய எழுதுங்கள்
Kavithai azhagu.
TM 9.
கவி அழகனின் கோபம்கூட அழகாகத்தான் இருக்கிறது
ஏழைகளிடம் இல்லாதது பணம் பணக்காரரிடம் இல்லாதது மனம்............இதனால் உலகில் வறுமை.
காதல் பாதை மாறி
தத்துவ பாதை ஏறி
ஓதல்கவிதை கண்டேன்
உள்ளதிலுவகை கொண்டேன்
புலவர் சா இராமாநுசம்
///உலகை படைத்தான்
உயிரை படைத்தான் - ஏன்
வறுமை படைத்தான்
இறைவன் - அந்த
விடையை தேடி
ஓடி ஓடி
உயிரை மாய்க்கும்
ஏழைகள்///
இதயத்தை ஊடுருவிச் சென்ற வரிகள்..!!
உங்கள் கவிதைகள் ஒவ்வொன்றும் உயர்வாய் இருக்கிறது.. உவகையுடன்
உங்கள்,
தங்கம்பழனி
வறுமையைப் பற்றி அருமையான கவிதை...
உலகை படைத்தான்
உயிரை படைத்தான் - ஏன்
வறுமை படைத்தான்
இறைவன் /
ஏழ்மையைப் படைத்தவன்
இறைவன் என்றால்
இறைவன் என்பது எதற்காக?? எதற்காக??
கவிதை காட்டும் கோபம் கொப்பளிக்கிறது வரிகளில்.
''...ஏன்
வறுமை படைத்தான்
இறைவன்...''
இதை இறைவன் படைத்தானா? மனிதன் உருவாக்கினானா என்று நான் யோசிக்கிறேன்....வாழ்த்துகள் கவிஅழகன்.
வேதா. இலங்காதிலகம்.
http://www.kovaikkavi.wordpress.com
Post a Comment