11/17/2011

சேர்ந்திட துடிப்பது காதல் இதயம்


உயிருக்குள் உயிரான உறவே - என்
உறவுக்குள் தாயான அமுதே
நிலவுக்குள் ஒளியான அழகே - நீ
நினைக்கின்ற காதல் இனிதே

பிறக்கின்ற போது நீ குழந்தை - காதல்
பிறந்திட்ட போது நீ குமரி
கலக்கின்ற போது என் மனைவி
கடைசிவரை நீயே என் துணைவி

தொடங்கிட்ட போது காதல் இளமை
தொடர்கின்ற போது காதல் இனிமை
புரிகின்ற போது காதல் வாழ்க்கை
புன்னகையே நீ காதல் சேர்க்கை

அருகினில் இருப்பது என்றும் அன்பு
அடிக்கடி நினைப்பது இரண்டும் மனசு
சேர்ந்திட துடிப்பது காதல் இதயம் - கை
கோர்த்திட வேண்டும் என் தெய்வம்

19 comments:

rajamelaiyur said...

//தொடங்கிட்ட போது காதல் இளமை
தொடர்கின்ற போது காதல் இனிமை
புரிகின்ற போது காதல் வாழ்க்கை
புன்னகையே நீ காதல் சேர்க்கை


//
அழகிய வரிகள்

rajamelaiyur said...

இன்று என் வலையில்

அஜித் : THE REAL HERO

rajamelaiyur said...

முதல் ரசிகன்

இராஜராஜேஸ்வரி said...

உயிருக்குள் உயிரான உறவே - என்
உறவுக்குள் தாயான அமுதே
நிலவுக்குள் ஒளியான அழகே - /

அழ்கான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

குறையொன்றுமில்லை. said...

கவிதை நல்லா இருக்கு. வாழ்த்துக்கள்.

arasan said...

சிறந்த ஆக்கம் நண்பரே .. வாழ்த்துக்கள்

ஹேமா said...

எப்பவும்போல காதல்ரசம் !

காட்டான் said...

வணக்கம் கவியழகா!

பிறக்கின்ற போது நீ குழந்தை - காதல்
பிறந்திட்ட போது நீ குமரி
கலக்கின்ற போது என் மனைவி
கடைசிவரை நீயே என் துணைவி

யதார்த்தத்துடன் கூடிய அழகான வரிகள்...!
வாழ்த்துக்கள்..

Unknown said...

என்ன தம்பி நலமா!
காதலோ காதல்!
கவிதை களை கட்டுது
தங்களுக்கு என் வலைவழி
வருவதே அருகிவிட்டது
நன்றி!

புலவர் சா இராமாநுசம்

Anonymous said...

கவிதை நல்லா இருக்கு... வாழ்த்துக்கள்...

நிலாமதி said...

தொடங்கிட்ட போது காதல் இளமை
தொடர்கின்ற போது காதல் இனிமை
புரிகின்ற போது காதல் வாழ்க்கை
புன்னகையே நீ காதல் சேர்க்கை.........excellent.

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

ம் ...

kowsy said...

இப்போதெல்லாம் அற்புதமாக கவிதைகள் எழுதுகின்றீர்கள். இதைத்தான் சொல்வது பயிற்ச்சிகள் பலனளிக்கும் என்று. தொடருங்கள் எண்ணங்கள் சிறகு விரிக்கட்டும்

ம.தி.சுதா said...

////பிறக்கின்ற போது நீ குழந்தை - காதல்
பிறந்திட்ட போது நீ குமரி////

பழையபடி தொட்டுட்டாருய்யா... தொட்டுட்டாரு...

அருமையப்பா அருமை..

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
மழை காலச் சளித் தொல்லைக்கு வீட்டில் ஒரு சிக்கன மந்திரம் Nuisance cold solution

Priya said...

அழகான கவிதைக்கு வாழ்த்துக்கள்!

Yaathoramani.blogspot.com said...

அருமையாக இதயத்தை
மிக மெலிதாக வருடிப் போகும் படைப்பு
தொடர வாழ்த்துக்கள்

அம்பலத்தார் said...

சித்தர்கள் சொன்னதுபோல வாழ்வின் அர்த்தங்கள் சிலதை சொல்லிவிட்டீர்கள் அருமையான வரிகள்.

ரிஷபன் said...

பிறக்கின்ற போது நீ குழந்தை - காதல்
பிறந்திட்ட போது நீ குமரி
கலக்கின்ற போது என் மனைவி
கடைசிவரை நீயே என் துணைவி

ஆஹா..

vetha (kovaikkavi) said...

மிக நல்ல சொல்லாட்சி நிறைந்த கவிதை. வாழ்த்துகள் கவி அழகள்.
வேதா. இலங்காதிலகம்.
http://www.kovaikkavi.wordpress.com