4/25/2011

பிறந்தவர் இறந்தவர் - இறந்தவர் பிறந்தவர்


தோன்றலும் மறைத்தலும்
வாழ்கையின் நியதி
தோன்றினால் வாழ்வது
இயற்கையின் விதிப்படி

தோன்றமுன் இறப்பது
கருப்பையினுடன் முடிகிறது
வாழ்ந்தபின் இறப்பது
சுடலைவரை செல்கிறது

வாழ்ந்தபின் இறந்தவர்
பாவத்துடன் மறைகிறார்
தோன்றும்போதே இறந்தவர்
பாவமாகவே பிறக்கிறார்

வாழ்வதை நோக்கி
பிறந்திடும் உயிர்கள்
சாவது வரும்வரை
வாழ்வது இல்லை

விடுதலை வேண்டி
இறந்திடும் உயிர்கள்
இறந்த பின் கூட
சுதந்திரம் இல்லை

சுற்றுகின்ற சூட்சுமத்தில்
சிக்கிவிடும் உயிர்கள்
தத்தளிக்கும் நிகழ்வே
பிறப்புதும் இறப்பதும்

17 comments:

சி.பி.செந்தில்குமார் said...

>>சுற்றுகின்ற சூட்சுமத்தில்
சிக்கிவிடும் உயிர்கள்
தத்தளிக்கும் நிகழ்வே
பிறப்புதும் இறப்பது

kutகுட்

Mohamed Faaique said...

///விடுதலை வேண்டி
இறந்திடும் உயிர்கள்
இறந்த பின் கூட
சுதந்திரம் இல்லை ///
உண்மைதான்..
நல்ல கருத்து.. நல்லாயிருக்கு...

Anonymous said...

///வாழ்ந்தபின் இறந்தவர்
பாவத்துடன் மறைகிறார்
தோன்றும்போதே இறந்தவர்
பாவமாகவே பிறக்கிறார்

விடுதலை வேண்டி
இறந்திடும் உயிர்கள்
இறந்த பின் கூட
சுதந்திரம் இல்லை /// நிதர்சனமான வரிகள்...

குறையொன்றுமில்லை. said...

வாழ்ந்தபின் இறந்தவர்
பாவத்துடன் மறைகிறார்
தோன்றும்போதே இறந்தவர்
பாவமாகவே பிறக்கிறார்.

தோன்றும் போதே இறந்தவர் புண்ணியவான்.
இந்த உலகத்தில் பிறந்து கஷ்ட நஷ்டங்களை அனுபவிக்கும் அவல நிலமையில் இருந்து
தப்பித்துவிட்டாரே.

ஹேமா said...

தோன்றலும் மறைத்தலும்
வாழ்கையின் நியதி என்றாலும் விதைத்தலுக்கு கட்டாயம் ஒருநாள் பலனிருக்கு யாதவன் !

kowsy said...

வாழ்வதை நோக்கி
பிறந்திடும் உயிர்கள்
சாவது வரும்வரை
வாழ்வது இல்லை

புரியல்லையே. வாழ்க்கை என்hபது எந்த விதத்திலும் வாழ்வதுதானே. சாவதற்கெனப் பிறந்தாலும் சாகும்வரை வாழத்தான் வேண்டும்.

vanathy said...

super kavithai!

ம.தி.சுதா said...

/////வாழ்ந்தபின் இறந்தவர்
பாவத்துடன் மறைகிறார்
தோன்றும்போதே இறந்தவர்
பாவமாகவே பிறக்கிறார்/////

என்ன ஒரு ஆழம் நிறைந்த வரிகள் அண்ணா... மிகவும் அருமை...


அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
தேயிலை இன்றியும் அருமையான தேநீர் தயாரிக்கலாம் (வன்னி மக்கள் கண்டுபிடிப்பு)

நிரூபன் said...

தத்துவக் கவிதை அருமை சகா...

நிரூபன் said...
This comment has been removed by the author.
நிரூபன் said...

வாழ்வதை நோக்கி
பிறந்திடும் உயிர்கள்
சாவது வரும்வரை
வாழ்வது இல்லை//

எனக்கென்னவோ, இவ் வரிகளினூடாக
தாயகக் கனவுடன்...பாடலின் உணர்வினைத் தரிசிப்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது சகா.
’சாவரும் போதிலும்
தணலிடை வேகிலும்.....

மீண்டும் இதனை உங்கள் கவிதையில் தரிசித்த மன நிறைவு.

நிரூபன் said...

பிறப்பிற்கும், இறப்பிற்கும் இடையேயான யதார்த்தத்தை கவிதை தத்துவம் போல் சொல்லி நிற்கிறது.

தாமதமான பின்னூட்டங்களுக்கு மன்னிக்கவும்.

jgmlanka said...

என்ன கவிஞரே... தத்துவம் தணல் பறக்குது.. நல்ல சிந்தனை... வாழ்த்துக்கள்...

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

தத்துவம் நிறைந்த கவிதை யாதவன். பாராட்டுக்கள்

சுற்றுகின்ற சூட்சுமத்தில்
சிக்கிவிடும் உயிர்கள்
தத்தளிக்கும் நிகழ்வே
பிறப்புதும் இறப்பதும்

மனிதனுக்கு எழுதப்பட்ட விதியே தத்தளிக்கும் வாழ்வு..
அருமை

Unknown said...

படத்தெரிவு ஈர்க்கிறது. கவிதை வாழ்வின் சூட்சுமங்களை விடுவிக்க யத்தனிக்கிறது.

திரு.சி.நந்தகோபன்(ஆசிரியர்) said...

supper

Anonymous said...

சுற்றுகின்ற சூட்சுமத்தில்
சிக்கிவிடும் உயிர்கள்
தத்தளிக்கும் நிகழ்வே
பிறப்புதும் இறப்பதும்
good...