
முடிவு செய்யப்பட மூச்சுக்காற்று
வரையறுக்கப்பட்ட மூக்குத்துவாரம்
வாயைத்திறந்தால் மரண வெடி
மனிதர்களை மந்தையாக்கும்
மாண்புமிகு அரசியல்
மனித உரிமையின் பிறப்பிடத்தில்
கருச்சிதைவு
மறக்கமுடியா மனித படுகொலையை
வரவேற்க்கும் நாடுகள்
என்றைக்கும் சுயநலத்தில்
உயிர் குடிக்கும்
ஊணமுற்ற நிர்வாணம்
Tweet | |||||
16 comments:
உண்மைநிலையை எடுத்துரைக்கும் கவிதை
உங்கள் தளம் மிகவும் நன்றாக உள்ளது.வாழ்த்துகள் .
இன்றைய எங்களின் கையறு நிலை.என்ன செய்யலாம் யாதவன்.கங்கணம் கட்டிக்கொண்டு எங்களை அழிக்கவென்றே நினைக்கிறார்கள்.
போர்க்குற்றங்களுக்கு இத்தனை ஆதாரங்கள் கிடைத்தபிறகும் ஐநாகூட என்ன செய்கிறது !
ஊனமுற்ற நிர்வாணம் !
மனிதர்களை மந்தையாக்கும்
மாண்புமிகு அரசியல்
இதைப் புரிந்தும் ஏன் மளிதர் அரசியல்வாதிகளின் பின்னும் அரசியல் பேசியபடியும் அலைகின்றார்கள் என்பதே கேள்விக்குறி
வயைத்திறந்தால் மரண வெடி//
வாயைத் திறந்தால் மரண வெடி...
கவிதை எழுதும் பயத்தில் ஒரு எழுத்து தவறி விட்டதோ?
முடிவு செய்யப்பட மூச்சுக்காற்று//
வீதிகள் தோறும் நிற்கும் சட்டித் தொப்பிகளால் ஒரு வரையறைக்குள் வாழும் எங்களின் வாழ்க்கையினை விளக்க அழகான சொல்லாடலைக் கையாண்டுள்ளீர்கள்.
//வரையறுக்கப்பட்ட மூக்குத்துவாரம்
வயைத்திறந்தால் மரண வெடி
மனிதர்களை மந்தையாக்கும்
மாண்புமிகு அரசியல்//
மந்தைகளே அரசியல் மேடையில் நாடகமாடுவதால் அவர்களின் கீழ் உள்ள மக்களும் மந்தைகளாக வேண்டும் எனும் எண்ணத்தில் அரசியல்வாதிகளின் செயற்பாடுகள்... இதனை விளக்க அரசியலை..மனிதர்களை மந்தையாக்கும் அரசியலை உயர்த்தி, அழகாக மான்பு மிகு அரசியல் என விளித்திருக்கிறீர்கள்.
வயைத்திறந்தால் மரண வெடி//
கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், வாயைத் திறந்தால் வாழ்க்கை போய் விடும் என்று வாழும் எங்களை அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள்.
மனித உரிமையின் பிறப்பிடத்தில்
கருச்சிதைவு//
எங்களூர் மனித உரிமை மீறல்களை விளக்க இதனை விட வேறு வார்த்தைகளே தேவையில்லை.
மக்களை மந்தையாக்கும் அரசியலையும், வரையறைக்குள் வாய் திறக்க முடியாதபடி வாழும் எங்களின் நிலமையினையும் ஊனமுற்ற நிர்வாணத்தினூடாக உணர்ச்சிகளின் வெளிப்பாடாய் உரைத்துள்ளீர்கள்.
ஊனமுற்ற நிர்வாணம்- எங்களூர் யதார்த்தத்தை விளக்கி நிற்கும் ஓர் கவிதை.
கவிக்கிழவன் கவி அழகன் ஆகியாச்சா? கவிதை உண்மையாக, நல்லா இருக்கு...
நம்ம கிழவன் அழகன் ஆகிட்டார்............ஊனம் என் திருத்தி விடுங்க. நியாயமான் கோபம். உணர்வுகளில் தர்மம் மறுபடி வெல்லும் காத்திருப்போம்.
உண்மையை ஆழமாக சொல்லியுள்ளீர்கள்..
சூப்பர் கவிதை!!
தர்மம் என்றும் வெல்லும்...கவிதை நல்லரயிருக்கு யாதவன்.
எல்லோர; மனதையும் நிர;வாணமாக்கிவிட்டன வரிகள்...
Thodarum Thunpam...
Vetha. Elangathilakam
http://www.kovaikkavi.wordpress.com
Post a Comment