5/01/2011

தொடருகின்ற மௌனம்


பனி படர்ந்த வானம்
முகில் புக முனையும்
யன்னல் கதவு


சில நிமிட யோசனை
சிலிர்க்வைக்கும் நினைப்பு
சிலையென நீ

ஒருநிமிட மௌனம்
ஓரக்கண் பார்வை
ஒரு விரல் ஸ்பரிசம்

கனத்திடும் கனவு
கலைந்திடும் கூந்தல்
கால்களால் கோலம்

வியக்கவைக்கும் அழகு
வியர்த்துகொட்டும் குளிர்
விடை தேடும் விழிகள்

சொல்லிவிடவா காதலை
சொல்லிவிடவா காதலை
சொல்லிவிடவா காதலை

மூன்று முறை முயற்ச்சித்தும்
மூச்சு விட முடியாமல்
தொடருகின்ற மௌனம்

12 comments:

சி.பி.செந்தில்குமார் said...

சொல்லாத காதல்கள் சொர்க்கத்தில் சேராது.. சென்று விட்ட பொழுதுகள் மீண்டும் வாராது.

Anonymous said...

காதல் அவஸ்தைகளும் அழகானது தான் அண்ணா கவி நன்றாக இருக்கிறது .....

மைந்தன் சிவா said...

நீங்க சொல்லப் போறது இல்ல பாஸ்..
கவனம் உங்க ப்ரெண்டு யாரும் முந்திக்க போறாங்க.ஹிஹிஹி
நல்லா இருக்கு கவிதை

சந்திரகௌரி said...

முதல் காதல் உண்மைக் காதல் வெளியிட மனதில் அச்சம் தோன்றும். இவ் உணர்வுகள் துளிர்க்கும். ஆனால், பழக்கப்பட்டவர்களுக்கு இது எல்லாம் ஒரு ஜுஜுபி. வாழ்த்துக்கள் யாதவன்.

Mohamed Faaique said...

சூப்பர் தல...
எப்பவுமே ஒரு விரக்தியோட எழுதுவீங்க... இன்று காதல் ரசம் சொட்டுது..
சொல்லிடவா???? 3 தடவை????
மைந்தன் சிவா கமெண்ட்’அயும் கொஞ்சம் அலசி ஆராயுங்கள்..
உங்கள் கவிதையை காற்று வெளி இதழில் பார்ர்த்தேன், அதுவும் முதலிலேயே உங்கள் கவிதைதான் இருந்தது. பார்க்க சந்தோசமாக இருந்தது.

பூங்கோதை said...

ஒவ்வொரு வரியும் சுவை சொட்டுகிறது.. மிக அருமை.. வாழ்த்துக்கள் யாது...

பாரத்... பாரதி... said...

//சில நிமிட யோசனை
சிலிர்க்கவைக்கும் நினைப்பு
வியர்த்துகொட்டும் குளிர்

மூச்சு விட முடியாமல்
தொடருகின்ற மௌனம்//
இந்த வரிகளில் காதலுக்கே உரிய பிரத்யேக உணர்வுகளை உங்கள் சொல்லாடல்கள் வெளிப்படுத்துகின்றன.

பாரத்... பாரதி... said...

சொல்லாத காதலுக்கு கவிதைகள் மட்டுமே ஆறுதலாக இருக்கமுடியும்...

vanathy said...

வழக்கம் போலவே கவிதை அசத்தல்

நிரூபன் said...

காதலின், அழகான தருணங்களில் தோன்றும் அவஸ்தைகளை கவிதையில் கோர்த்திருக்கிறீர்கள்.
கவி வடிவம்..புதிய ஒரு வடிவில் வந்திருக்கிறது.
வைரமுத்துவின் இது போதும் எனக்கு கவிதையினையும் இவ் வடிவம் எனக்கு ஞாபகமூட்டுகிறது.

Lakshman said...

Anna, சில நிமிட யோசனை சிலிர்க்வைக்கும் நினைப்பு
சிலையென நீ..

ஒருநிமிட மௌனம் ஓரக்கண் பார்வை
ஒரு விரல் ஸ்பரிசம்

impressing words.. very nice

Anonymous said...

அப்பப்பா இவ்வளவு பாடு தான் ..ரெம்பக் கஷ்டம் தான் சொல்லிவிட...நல்லா யோசிச்சுச் செய்யுங்க...
Vetha.Elangathilakam
http://www.kovaikkavi.wordpress.com