4/03/2011

கொதித்திடும் இரத்தம் கொள்

உயிர் கொண்டு எழும்பு
உன் உரத்தினை கூட்டு
எதிர்கொள்ளும் தடைகளை
எதிர்த்து நீ தாக்கு

நெஞ்சத்தில் உறுதிகொள்
உன் நேர்மையை உணர்ந்துகொள்
பஞ்ச்சத்தில் இருந்தாலும்
உன் பாதையை நினைவுகொள்

சிவந்திடும் கண்கள் வை
சீறிடும் சொற்கள் செய்
நரம்புகள் நாடிகள் எல்லாம்
கொதித்திடும் இரத்தம் கொள்

நீண்டதோர் பார்வை காண்
நிலைத்திடும் சிந்தை கேள்
நினைப்பதை செய்துமுடி
நிமிர்ந்திடும் உந்தன் கொடி

20 comments:

நிரூபன் said...

வணக்கம் சகோதரம், மிகவும் நீண்ட நாளின் பின்னர், உலகக் கிண்ணத்தைப் பார்த்து வலையுலகை மறந்தவராய் இன்று வந்திருக்கிறீர்கள். ஒரு அருமையான தத்துவக் கவிதையுடன் வாழ்வியலையும் அழகுறச் சொல்லியிருக்கிறீர்கள்.

நிரூபன் said...

உயிர் கொண்டு எழும்பு
உன் உரத்தினை கூட்டு//

மேற் கூறிய இரண்டினையும் இலகுவாக நிறைவேற்றலாம். ஆனால்............

//எதிர்கொள்ளும் தடைகளை
எதிர்த்து நீ தாக்கு//

கூர்வாளோடு சட்டித் தொப்பியில் சந்தியில் பல அங்கிகள் நிற்கையில் இப்படிச் செய்தால் அடுத்த நிமிடமே சங்கினை அறுத்திடுவார்கள்....

நிரூபன் said...

பஞ்ச்சத்தில் இருந்தாலும்
உன் பாதையை நினைவுகொள்//

இக் காலத்திற்கு இவ் வரிகள் பொருந்தாது என நினைகிறேன். காரணம் பட்டினி கிடந்து பசியால் வருந்தி..... பாதையினை மறந்து வலைஞர் மடத்தில் இருந்த போது ஏற்பட்ட அவலங்களால் என் பாதையே மறந்து விட்டது சகோ.

நிரூபன் said...

நரம்புகள் நாடிகள் எல்லாம்
கொதித்திடும் இரத்தம் கொள்//

என்னுடலில் இருந்த வீரியமுள்ள இரத்தமெல்லாம் இரண்டு வருடங்களுக்கு முன்னர் புது மாத்தளன் வைத்தியசாலைக்கு அருகில் ஒரு காலில் சிதைவு ஏற்பட்ட போதே போய் விட்டது. இனியெல்லாம் கொதித்திடும் இரத்தம் பிளட் குறூப்பை மாற்றி புது ரத்தத்தை ஏற்றினாலும் வரவே வராது சகோதரம்.

நிரூபன் said...

நினைப்பதை செய்துமுடி
நிமிர்ந்திடும் உந்தன் கொடி//

கவிதையில் இவ் வரிகள் மட்டும் இரண்டு பொருளில் சந்த நடையில் அமைந்துள்ளது.

வாழ்க்கைக்கான அர்த்தமாகவும், புரட்சியினை நோக்கிய புதிய பாதைக்கான அறை கூவலாகவும், கவிதை சந்த நடையில் அமைந்துள்ளது.

♔ம.தி.சுதா♔ said...

ஃஃஃஃநரம்புகள் நாடிகள் எல்லாம்
கொதித்திடும் இரத்தம் கொள்ஃஃஃஃ ஏன்யா வரும் போதே இந்தளவு வெறியோட வாறியள்...

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
ஈழத் தமிழனுக்கு கருணாநிதியில் பிடித்த ஒரே சம்பவம்

♔ம.தி.சுதா♔ said...

மிக நீண்ட நாளுக்குப் பின் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி....

Mohamed Faaique said...

ரொம்ப நாளைக்கு அப்புறம்... வாங்க..

maruththuvam said...

After long time <i meet u

ஹேமா said...

கவிக்கிழவரே....கவிதையின் வீராவேசம் ஒரு பக்கம் இருக்கட்டும்.எங்கள் இனத்தின் அடையாளம் இது.நீங்கள் எங்கே சுகம்தானே !

அப்பாதுரை said...

உற்சாகமும் முனைப்பும் ஊட்டும் வரிகள். சேமிப்பில் வைக்கிறேன்.

அப்பாதுரை said...

மூச்சிழுக்க மூக்கிருந்தும்... மிகவும் தைக்கிறது நண்பரே.

தோழி பிரஷா said...

மிக நீண்ட நாளுக்குப் பின் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.... நலமா யாதவன்?

நினைப்பதை செய்துமுடி
நிமிர்ந்திடும் உந்தன் கொடி

அருமை..

சி.பி.செந்தில்குமார் said...

வாங்க சார்.. ரொம்ப நாளா காணோம்?

யாதவன் said...

அன்பு நெஞ்சங்களுக்கு நன்றி பல கோடி
புதிய கற்றல் நடவடிக்கையால் வலை உலகுகுக் வர முடிய வில்லை
இபொழுது கொஞ்சம் நேரம் கிடைத்துள்ளது
இனி தொடருவேன்

Lakshman said...

ennaku entha kavithai pidika illai anna

sakthi said...

உணர்வு மிகு கவிதை தொடருங்கள்

நிலாமதி said...

நீண்டதோர் பார்வை காண்
நிலைத்திடும் சிந்தை கேள்
நினைப்பதை செய்துமுடி
நிமிர்ந்திடும் உந்தன் கொடி.........


தொடருங்கள்.

சந்திரகௌரி said...

சிரித்தபடி இருந்துகொண்டு சீறிடும் வார்த்தைகளைப் பொழிகின்றீர்கள். அமைதிக்கும் அன்புக்கும் எப்போதும் வலிமையுண்டு. அவற்றையே வரவேற்கவேண்டும். இருப்பினும் வரிகள் சிறப்பு.

பூங்கோதை said...

நீண்ட நாட்களின் பின் உற்சாகமான கவிதை யாதவன்..
நிரூபனுக்கு.... நண்பா..... கேட்பவனை விட குட்டப்பட்டவனுக்குத் தான் அதன் வலியின் கொடுமை புரியும்.... உன் வலி நியாயமானது தான். ஆனாலும்..
சிதைந்து போனது காலாக மட்டும் இருக்கட்டும்..
உணர்வுகள் அல்ல...
வெளியேறியது உதிரமாக‌ மட்டும் இருக்கட்டும்...
உத்வேகம் அல்ல...
மிதிக்கப்படும் போது உன்னால்
கொதிக்காமல் இருக்க முடியாது...
ஏனென்றால்..நீ
உதித்தது தமிழன் பரம்பரையில்...