1/24/2011

காதலியின் கவிதை

உந்தன் காதல் எந்தன் உள்ளே உரசி செல்லுதே
உரிமையோடு என்னை சுரண்டி இனிமை காணுதே
உந்தன் நெஞ்சில் தலை சாயந்து இருக்கும் நேரம்
எந்தனுள்ளே பட்டாம்பூச்சி பறந்து செல்லுதே

பக்கம் நின்று பேசும் பொது பரிதவிக்கிறேன்
தொட்டு விட்டு செல்லும் போது சிலிர்ப்படைகிறேன்
பார்வையாலே நூறு கோடி பரிசம் தருகிறாய்
பாவப்பட்ட உதட்டினிலே முத்தம் தருகிறாய்

வெட்கப்பட்டு நிற்கும்போது இறுக்கி அணைக்கிறாய்
இதழ்கலாலே எனைவருடி இணங்க வைக்கின்றாய்
மோகத்திலே சிக்கி கொண்டு முக்தி அடைகிறேன்
எனை சொர்கத்துக்கு கூட்டி செல்லும் கடவுளாகிறாய்

15 comments:

Jeyamaran said...

hmm asathunga..........

குறையொன்றுமில்லை. said...

ம்ம்ம்ம்ம்ம்,,, வயசுக்கோளாறு.

ஜெயந்த் கிருஷ்ணா said...

காதல் படுத்தும் பாடு.. நம்மளையும் பாடா படுத்துது.. கொஞ்சம் வெயிட் பண்ணுங்க ஒரு கவிதை எழுதணும் அப்புறமா வரேன்... ஆங் செல்ல மறந்திட்டேன்.. கவிதை கலக்கலா இருக்கு தலைவரே,...

எஸ்.கே said...

இனிமை! அருமை!

kowsy said...

இசை சேர்த்துப் பாட சிறப்பாக இருக்கும்

Lingeswaran said...

கடைசி நாலு வரியில...கவிப்பேரரசு பக்கத்துல வந்துடிங்க...

ஹேமா said...

வர வரக் கிழவர் படுமோசமாயிட்டார்.காதல் காதல் !

Unknown said...

நல்லா இருக்கு.

/பார்வையாலே நூறு கோடி பரிசம் தருகிறாய்/
அப்படின்னா என்னங்க?

Anonymous said...

காதலோ காதல்...

VELU.G said...

அருமை

Unknown said...

Nice man..keep rokn!!

முனியாண்டி பெ. said...

Good one

நிலாமதி said...

மோகத்திலே சிக்கி கொண்டு முக்தி அடைகிறேன்
எனை சொர்கத்துக்கு கூட்டி செல்லும்
கடவுளாகிறா.

இனிமை! அருமை

Anonymous said...

nice kavithai

arasan said...

அழகா சொல்லி இருக்கீங்க