
கோவப்பட ரோஜா முகம் சிவந்து போனதோ
கஷ்டப்பட்டு கோவப்பட்டால் உதடு சிரிக்குதோ
முகத்தை திருப்பி முறைத்து பாத்தால் கோவமாகுமோ
முத்தம் ஒன்று தந்துவிட்டால் கோவம் போகுமோ நித்தம் உன்னை காதலிக்கவே கனவு காண்கிறேன்
நிம்மதியை தரத்தானே சேவை செய்கிறேன்
அன்புகொண்ட நெஞ்சில் கோபம் ஏன் முளைத்தது
ஆரதழுவ வேண்டும் எண்டு மனசு சொல்லுதுஉன்னை மட்டும் நினைப்பதற்கே ஜீவன் கேட்கிறேன்
உண்மை உள்ள காதல் நெஞ்சை அள்ளித்தருகிறேன்
அன்பில் வளர்ந்த காதலையே சொல்லத் துடிக்கிறேன்
உன்னை காதலித்தே காதலித்தே கொல்லப்போகிறேன்Tweet | |||||
18 comments:
//காதலித்து காதலித்து கொல்லப்போறேன்//
இப்படி டைட்டில் வச்சா யாரு தைரியமா காதலிப்பா? ஓஹோ! 'அன்பு' அது கூட வெறித்தனமாக இருந்தால் கஷ்டம் தான்.
இருந்தாலும் கவிதையாக 'நச்'.
அருமை கவிதை..
where are u?
இரசித்துச் சிரித்தேன். அருமை.
இ.பி.கோ.வில் இதற்கெல்லாம் தண்டனை கிடையாது தானே... ஆதலால் தொடரட்டும்...
அன்பின் சுகம் கவிதையின் அத்தனை வரிகளிலும் ஒளிர்கிறது...
அருமை...எனக்கும் எழுதோணும் போல இருக்கு..நீங்க தொடருங்கோ!!
migavum arumai nanbaaaaaaaaa
ஐயோ அவ பாவம்........சும்மா சொன்னேன். உயிரையும் தருவது காதல்.
இப்பிடியெல்லாம் திட்டம் இருக்கோ...அவங்களுக்கும் தெரியுமோ !
super kavithai!
ஃஃஃஃஃஉன்னை மட்டும் நினைப்பதற்கே ஜீவன் கேக்கிறேன்
உண்மை உள்ள காதல் நெஞ்சை அள்ளித்தருகிறேன்ஃஃஃஃ
அவங்க கொடுத்து வச்சவங்க... அருமை அண்ணா..
அடியாத்தி என்ன தலைப்பு இது... பயங்கரமா இருக்கே..
கவிதை காதலா இருக்கு...
அந்த கடைசி லைன் ரொம்ப வித்தியாசம்!
கவிதை கிழவரின் கவிதை வரிகள் , மிகவும் இளமை .
கவி அழகன் --> உங்கள் கவி மிக அழகு !!
அருமை யாதவன் பாஸ்..
ரொம்பத்தான் பீல்'ல இருக்கீங்க போல!!
அருமை அருமை தோழா....
பின்னிட்டிங்க.
தம்பி நீ காதலித்துக் கொல்கிறாயோ இல்லையோ... அழகிய கவிதைகளால் எம்மைக் கொல்கிறாய்... திரும்ப திரும்ப வாசித்து அசந்து போகிறேன். ஒவ்வொரு வரியிலும் காதல் துடிக்கிறதடா... வாழ்த்துக்கள்
Post a Comment