1/17/2011

எனை ஏங்க வைக்கும் ஊடலென்ன


வயலோர வரப்பினிலே
சிலையாக நடந்தவளே
அலையாக காற்று வர
உன் அசைவாலே பாட்டுவர
நான் புயலான மாயமென்ன
புடம்போட்ட தேகமென்ன

ஏர் பிடித்த மாடுகளோ
சீர்படுத்தி நிலம்பிளக்க
தேனான மழைத்துளிகள்
உடல் முழுக்க பரவிவிழ
கோடான விளைச்சலுக்கு
ஏங்கிநிற்க்கும் ஏழை என்ன

கந்தாங்கி சேலை கட்டி
கை நிறைய வளையளிட்டு
பெண் தாங்கும் இடையாலே
பந்தாடி செல்கையிலே
உரம் போடா வயலினிலே
நெல் தானாக முளைத்தென்ன

10 comments:

vanathy said...

கவிதை அருமை.
( எப்ப பாத்தாலும் ஊடல் ஊடல் என்றே கவிதை எழுதுறீங்க!!! என்ன பிரச்சினை என்று சொல்லுங்கோ தீர்த்து வைக்க முயற்சி செய்கிறேன். ஹாஹா )

யாதவன் said...

ஊடலின் பின்தானே காதல் வரும் வானதி
எனக்கு காதல் என்றால் ரொம்ப பிடிக்கும்
உங்கள் வருகைக்கும் வாக்குக்கும் நன்றிகள் ஆயிரம்

தோழி பிரஷா said...

கவிதை அருமை யாதவன்....

ஆகாயமனிதன்.. said...

நிதியும் நித்தியும் ஒன்று தான்
http://aagaayamanithan.blogspot.com/2011/01/blog-post_6104.html

Lakshman said...

கந்தாங்கி சேலை கட்டி
கை நிறைய வளையளிட்டு..... very nice combination anna.

ஹேமா said...

ஊர்விட்டு ஊர் மாறினாலே ஊடல்தான்.ஆனா அன்பு மாறாது கிழவரே !

பூங்கோதை said...

//உரம் போடா வயலினிலே
நெல் தானாக முளைத்தென்ன//
காதல் முளைத்த விதம் அழகோ அழகு... மிக அழகிய வரிகள்...
சின்ன சந்தேகம்... பெண் தாங்கும் இடை.. என்றால் என்ன அர்த்தம்? அல்லது எழுத்து பிழையா?

ம.தி.சுதா said...

தருணத்திற்கேற்ற கவிதை அண்ணா மிக்க நன்றி..

அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
தமிழின் “ழ” வும் உச்சரிப்பு உபத்திரமும்.

kaanal said...

மிகவும் அற்புதமான படைப்பு உங்கள் கவிப் பணி தொடர வாழ்த்துக்கள்

Lingeswaran said...

'புடம் போட்ட தேகமென்ன....' ஆகா....அர்த்தமுள்ள வரிகள்..