நுரை தவழும் கடல் அலைகள்
தரை மீது மோதும்
மணல் தரையில் சிறு நண்டு
மறைந்து விளையாடும்
இருள் அகற்றும் சூரியன்
அந்தப்புறம் போகும்
எம் வாழ்வினிலே விடியல்
எப்ப வந்து சேரும்
நான் படகெடுத்து போகையிலே
பாவி உயிர் போகும்
இரவினிலே கடல் மடியில்
தனிமையில் உயிர் வாடும்
வழி அனுப்பியவள் காத்திருப்பாள்
கடவுளின் துணையோடு
நான் கடல் கிழித்து வரும்போதே
அவள் கண்களில் உயிர் சேரும்
Tweet | |||||
29 comments:
ஹலோ பாஸ்...
//இருள் அகற்றும் சூரியன்
அந்தப்புறம் போகும்
எம் வாழ்வினிலே விடியல்
எப்ப வந்து சேரும்//
ம்ம்ம் எப்போ எப்போ!??
வணக்கம் தலைவா
///அந்தப்புறம் போகும்
எம் வாழ்வினிலே விடியல்
எப்ப வந்து சேரும் ///
இது “அந்தப் புறமா????”
எப்பவுமே விரக்தியோடு எழுதுரீங்க.... காதல் ரசம் சொட்ட சொட்ட ஒரு கவிதை எழுதுங்க பாஸ்....
Kavithai super friend . .
Kalakal kavithai
விளங்குது விளங்குது கவிக்கிழவரே.இப்பத்தான் ஊரின்,உறவின்,காதலின் ஞாபகம் வலிச்சு இழுக்கும்.இதுதான் வெளிநாடு !
வெள்ளிநிலா விளக்கேற்றும் நேரம் ..........
வழி அனுப்பியவள் காத்திருப்பாள்
கடவுளின் துணையோடு
நான் கடல் கிழித்து வரும்போதே
அவள் கண்களில் உயிர் சேரும்/// காலம் ஒரு நாள் மாறும் நம் கவலைகள் எல்லாம் தீரும்
//இருள் அகற்றும் சூரியன்
அந்தப்புறம் போகும்
எம் வாழ்வினிலே விடியல்
எப்ப வந்து சேரும் //m suppar
உம் வாழ்வில் கூடிய சீக்கிரமே விடியல் வந்து சேரும்.
அலையோசை போல் கவிதை - பிடித்திருக்கிறது. Mohamed Faaiqueன் பின்னூட்டமும் :)
நெய்தல்நிலப் பெண்கள் வலியை அழகாகக் காட்டியிருக்கின்றீர்கள்
\\இருள் அகற்றும் சூரியன்
அந்தப்புறம் போகும்
எம் வாழ்வினிலே விடியல்
எப்ப வந்து சேரும்//
அருமை . வாழ்த்துக்கள்
நுரை தவழும் கடல் அலைகள்
தரை மீது மோதும்
மணல் தரையில் சிறு நண்டு
மறைந்து விளையாடும்
இருள் அகற்றும் சூரியன்
அந்தப்புறம் போகும்//
சகோ, இயற்கை வர்னணையும், எமது பிரதேசத்தின் வளச் சிறப்பினையும் அழகாக முதல் வரிகளில் கோர்வையாக்கியிருக்கிறீங்க.
எம் வாழ்வினிலே விடியல்
எப்ப வந்து சேரும்//
அட....இதனைத் தான் பல வருடங்களாகத் தேடிக் கொண்டிருக்கிறோம்.....
விடை தெரியாத வினாவாகி விட்டது.. கூடவே எம் வாழ்வும் தான்.
கடல் மடியில் உயிர் வாடும்//
நெய்தல் நில மக்களின் நம்பிக்கையால் கட்டியெழுப்பப்படும் நாளைய வாழ்விற்கான இருத்தலையும், மீனவர்க் குடும்பம் ஒன்றின் காத்திருப்பிற்கான புரிதல்களையும் விளக்கி நிற்கிறது உங்களின் இக் கவிதை.
நிரூபன் said...
நான் படகெடுத்து போகையிலே
பாவி உயிர் போகும்
இரவினிலே கடல் மடியில்
தனிமையில் உயிர் வாடும்
வழி அனுப்பியவள் காத்திருப்பாள்
கடவுளின் துணையோடு
நான் கடல் கிழித்து வரும்போதே
அவள் கண்களில் உயிர் சேரும்//
ஒரு காலத்தில் வெளி வந்திந்தால், எமது நாட்டின் அன்றைய சூழலுக்கேற்ப இக் கவிதையில் பல விடயங்கள் தொக்கி நின்றிருக்கும். அத்தோடு போர்க் காலங்களில் கடலுக்குச் சென்று வரும் மக்களின் உணர்வினை வெளிப்படுத்தும் கவிதையாகவும் இக் கவிதை இருந்திருக்கும் சகோ.
மீனவக் குடும்பங்களின் நடை முறை வாழ்வினையும் சுட்டி நிற்கிறது உங்கள் கவிதை, காலம் கடந்தாலும் எங்களூரின் கடந்த காலங்களை இப்போதும் கண் முன்னே கொண்டு வருகிறது உங்கள் கவிதை......
அசத்தலான கவிதை...
\\இருள் அகற்றும் சூரியன்
அந்தப்புறம் போகும்
எம் வாழ்வினிலே விடியல்
எப்ப வந்து சேரும்//
அருமையான வரிகள் யாதவன்.
வெள்ளி நிலா விளக்கேற்றும்...பாடல் ஞாபகம் வருகிறது யாது...கூடவே சில பழைய ஞாபகங்களும்...
அழகிய வரிகள்.. வாழ்த்துக்கள்
அண்ணனும் லவ்ல மாட்னாரு போல்
மிக அருமையாய் கடல்வாழ் வாழ்வியலை படம்பிடித்துகாட்டியுள்ளீர்கள் யாதவா.
விடியும்
விடியும் தருவாய்
வெகு அருகாமையில்..
பெயருக்குத் தகுந்த மாதிரி
கவியும் மிக அழகு
இயைபுத் தொடை மிக இயல்பாய்
உங்கள் கவியில் வெளிப்படுகிறது
நல்ல பதிவு தொடர வாழ்த்துக்கள்
அசத்தலான கவிதை யாதவன்.
ஃஃஃஃநான் படகெடுத்து போகையிலே
பாவி உயிர் போகும்ஃஃஃஃ
அண்ணா தொடரும் வலிகள் வரிகளாய்...
நல்ல கவிதை.
வாழ்த்துக்கள்.
நான் கடல் கிழித்து வரும்போதே
அவள் கண்களில் உயிர் சேரும்
True.....good!....
Http;//kovaikkavi.wordpress.com
vetha.
Denmark.
Post a Comment