6/27/2011

தனியாக காத்திருப்பேன்


கருமேகம் புடைசூழும் நீலவானம்
சிறுபறவை கூச்சலிட்டு
ஓடித்திரியும்
இதமான குளிர்காற்று
உடல் வருடும்
எங்கோ இருக்கும் உன்னை
இதயம் தேடும்


சிறு துளி மழையாய்
நிலம் தழுவும்
சிலிர்திருந்த புல்லினம்
அதில் நனையும்
ஒருமுறை பார்பதற்க்கு
காத்திருக்கிறேன்
தோளிலே கைபோட்டு
நடக்கவுள்ளேன்


நெஞ்சை நிமித்தும் கோபுரங்கள்
வானைத்தொடும்
இயந்திரமாய் மனிதர் கூட்டம்
ஓடிப்போகும்
நெஞ்சிருக அணைத்து ஒரு
முத்தம் வைக்க
சன நெரிசலிலே தனியாய்
காத்திருப்பேன்


காற்றாக பறந்துவரும்
தொடரூந்தில்
கதவு தானாக திறந்த்ததும்
உன் வாசம்
பேசாமல் மென்மையாய் நீ
இறங்கிவர
கண் சோராமல் உனையே
பார்த்து நிற்பேன்


சூடாக்கும் உதடுகளை
தேநீர் கோப்பை
செய்தி தானாக சொல்லிவிடும்
கண்ணின் ஆசை
தனியாக இருக்கின்ற
ஒவ்வொருநாளும்
உனை தரிசிக்கும் சந்தர்ப்பம்
வேண்டுமடி

41 comments:

நிரூபன் said...

ஆஹா.....அண்ணருக்கு எங்கேயோ ஒரு ஆள் சிக்கிட்டா.....;-)))

நிரூபன் said...

கருமேகம் புடைசூழும் நீலவானம்
சிறுபறவை கூச்சலிட்டு
ஓடித்திரியும்
இதமான குளிர்காற்று
உடல் வருடும்
எங்கோ இருக்கும் உன்னை
இதயம் தேடும்//

சான்ஸே இல்லை பாஸ்,
இயற்கை வர்ணனை கவிக்கு அழகு சேர்க்கிறது,
கூடவே குளிரிலும், அவளினை விழிகள் தேடுவது காதலின் தவிப்பைக் காட்டுகிறது.

நிரூபன் said...

சிறு துளி மழையாய்
நிலம் தழுவும்
சிலிர்திருந்த புல்லினம்
அதில் நனையும்
ஒருமுறை பார்பதற்க்கு
காத்திருக்கிறேன்
தோளிலே கைபோட்டு
நடக்கவுள்ளேன்//

ஆஹா...காதல், அல்லது ஒரு பெண் மீது ஆண்களுக்கு ஈர்ப்பு வந்து விட்டால் நினைவுகள் எப்படி விரிந்து கொள்ளும் என்பதற்குச் சான்றாக இவ் வரிகள்...

நிரூபன் said...

நெஞ்சை நிமித்தும் கோபுரங்கள்//

மச்சி, இது உண்மையிலே நாட்டு வர்ணணைக்காக கையாளப்பட்டதா அல்லது....... அங்க வர்ணணைக்கக....இதில் சிலேடை ஏதும் இல்லையே

Lakshmi said...

இய்ற்கை வர்னனைகள் இயல்பாக வருகிரது உங்களுக்கு

நிரூபன் said...

காற்றாக பறந்துவரும்
தொடரூந்தில்
கதவு தானாக திறந்த்ததும்
உன் வாசம்
பேசாமல் மென்மையாய் நீ
இறங்கிவர
கண் சோராமல் உனையே
பார்த்து நிற்பேன்//

இலக்கியம் என்பது காலத்தின் கண்ணாடி என்பது போல,
நம்ம கவிக்கிழவரும்,
தான் வாழும் பிரதேசத்திற்கேற்றவாறு
இங்கே காதல் உணர்வுகளை வெளிப்படுத்தி நிற்கிறார்.

நிரூபன் said...

தனியாக இருக்கின்ற
ஒவ்வொருநாளும்
உனை தரிசிக்கும் சந்தர்ப்பம்
வேண்டுமடி//


ஆஹா...சான்ஸே இல்லை மச்சி....
காதலின் காத்திருப்பினையும்,
மனதிற்குப் பிடித்தமானவர்களையும் எப்படியெல்லாம் கண்டு தரிசிக்கலாம் என்பதனை தத்ரூபமாகச் சொல்லியிருக்கிறீங்க.

கவி அழகன் said...

நிருபன் உங்கள் கருத்தை பார்த்ததும் காதல் கூடுது
நன்றி வாழ்த்துக்கள்
--

கவி அழகன் said...

நன்றி Lakshmi அம்மா வாழ்த்துக்கள்

இராஜராஜேஸ்வரி said...

சிறு துளி மழையாய்
நிலம் தழுவும்
சிலிர்திருந்த புல்லினம்
அதில் நனையும்//

அருமையான வரிகள். பாராட்டுக்கள்.

நிரூபன் said...

தனியாக காத்திருப்பேன்: காத்திருத்தலின் பின்னரான நினைவுகள் தரும் சுகத்தினை/ இனிமையினைக் கவிதையினூடாக வெளிப்படுத்தி நிற்கிறது.

Ramani said...

லட்சுமி மேடம் சொல்வதுபோல
இயற்கை வர்ணனை இயல்பாய் வருகிறது
அப்படியே இளமைத் துள்ளலும்....
நல்ல பதிவு தொடர வாழ்த்துக்கள்

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

எளிமையான தமிழில் ஒரு அற்புதமான கவிதை. நன்றி சகோ..

புலவர் சா இராமாநுசம் said...

உங்களை நிருபன் விடாம விரட்டி
உண்மையை கறக்க பாக்கிறாரு
ஏமாந்திடாதீங்க அவர் ரொம்ப பொல்லாவரு
தம்பீ
கவி அழகா தனிமையிலே இருந்து இனிமை
காண்கிற நீங்க எங்கிட்ட மட்டும்
சொல்லுங்க நான் ஒருத்தர்கிட்ட--சொல்ல
மாட்டேன் சரியா

எண்ணதில் இருக்கிற இளமை எழுத்துலே
ஊஞ்சலாடுது நன்றி

புலவர் சா இராமாநுசம்

Anonymous said...

என்ன பாஸ் நீங்களும் காதல்ல விழுந்துட்டீங்களா?

Anonymous said...

வரிகள், வர்ணனைகள், உவமைகள் அத்தனையும் அருமை... சொல்வதற்கு என்ன இருக்கு அது தான் நிரூபன் பாஸ் வரி வரியாக வர்ணித்து விட்டாரே...

மாலதி said...

சிறு துளி மழையாய்
நிலம் தழுவும்
சிலிர்திருந்த புல்லினம்
அதில் நனையும்
ஒருமுறை பார்பதற்க்கு
காத்திருக்கிறேன்
தோளிலே கைபோட்டு
நடக்கவுள்ளேன்//இளமை எழுத்துலே
ஊஞ்சலாடுது நன்றி

மாலதி said...

காற்றாக பறந்துவரும்
தொடரூந்தில்
கதவு தானாக திறந்த்ததும்
உன் வாசம்
பேசாமல் மென்மையாய் நீ
இறங்கிவர
கண் சோராமல் உனையே
பார்த்து நிற்பேன் //நல்ல பதிவு தொடர வாழ்த்துக்கள்

Lakshman said...

சிறு துளி மழையாய்
நிலம் தழுவும்
சிலிர்திருந்த புல்லினம்
அதில் நனையும்
ஒருமுறை பார்பதற்க்கு
காத்திருக்கிறேன்

பயணி said...

காற்றாக பறந்துவரும்
தொடரூந்தில்
கதவு தானாக திறந்த்ததும்
உன் வாசம்
பேசாமல் மென்மையாய் நீ
இறங்கிவர
கண் சோராமல் உனையே
பார்த்து நிற்பேன்.
மிகவும் அருமை.நல்ல பதிவுகள் மென்மேலும் தொடர வாழ்த்துக்கள்

Rathnavel said...

நல்ல கவிதை.
வாழ்த்துக்கள்.

மைந்தன் சிவா said...

//நிரூபன் said...
ஆஹா.....அண்ணருக்கு எங்கேயோ ஒரு ஆள் சிக்கிட்டா.....;-)))//
மறுபடியும் முதல்லே இருந்தா???

சந்திரகௌரி said...

அடேங்கப்பா போதுமா ஆசை........ காதலில் கலந்துவிட்டால் கவிதை மிக களைகட்டும்.

sarujan♥ ! ♥ ! (சாருஜன்)♥ ! ♥ ! said...

காதலில் விழுந்த ஒரு இளைஞனின் கற்பனை கலந்த சிந்தனை வரிகள், வர்ணனைகள், உவமைகள் அத்தனையும் அருமை.

சி.பி.செந்தில்குமார் said...

ஆஹா.. அண்னனுக்கு ஃபிகர் சிக்கிக்குச்சு டோய்

அரசன் said...

அழகான வரிகள் .. அற்புதம் வாழ்த்துக்கள்

அழகி said...

நல்ல கவிதை.
வாழ்த்துக்கள்.

vanathy said...

mm... super kavithai! well written.

தோழி பிரஷா( Tholi Pirasha) said...

கவிதை அருமை.. யாதவன்.

vidivelli said...

சகோ அற்புதமான கவிதை..
வாழ்த்துக்கள்

kaanal said...

கவிக்கோர் பாரதி என்பர் ஆனால் நீர் தான் என்று இப்பொழுது நான் சொல்வேன்

Vetha. http://kovaikkavi.wordpress.com said...

காதல் ரசம் சொட்டுது....

♔ம.தி.சுதா♔ said...

ஃஃஃஃகாற்றாக பறந்துவரும்
தொடரூந்தில்
கதவு தானாக திறந்த்ததும்
உன் வாசம்ஃஃஃஃ

அண்ணன் ஒர மார்க்கமா தான் எழுதறாரு பாப்பம் பாப்பம்..

சி.பி.செந்தில்குமார் said...

காத்திருந்த மல்லி மல்லி

சுசி said...

நல்லா எழுதி இருக்கிங்க.

யாழ். நிதர்சனன் said...

ஒவ்வொருநாளும்
உனை தரிசிக்கும் சந்தர்ப்பம்
வேண்டுமடி...........

என்னங்க இது சாமி சிலையா.
உங்க அனுபவம்தானா ?

PUTHIYATHENRAL said...

உங்கள் தளம் முழுவதும் அழிகிய கவிதைகள் கொட்டிக்கிடகிறது. உங்கள் பெயருக்கு தகுந்தால் போல் கவிகள் எல்லாம் அழகாக இருக்கின்றன. வாழ்த்துக்கள் கவி அழகன். கவிதைக்கு சொல் அழகு! அழகிய கவிதைக்கு கவி அழகன்! நன்றி. நட்புடன் - புதியதென்றல். சிந்திக்கவும்.நெட்.

சித்தாரா மகேஷ். said...

//எங்கோ இருக்கும் உன்னை
இதயம் தேடும்//
கவி அருமை சகோதரா.


சிந்திக்க வேண்டிய சில விடயங்கள்.I

பிரணவன் said...

தனியாக இருக்கின்ற
ஒவ்வொருநாளும்
உனை தரிசிக்கும் சந்தர்ப்பம்
வேண்டுமடி. . .தனிமையில் தான் காதல் சிந்தனை அதீதமாகின்றது. . . அருமையான வரிகள். . .வாழ்த்துக்கள் நண்பரே. . .

"என் ராஜபாட்டை"- ராஜா said...

வலைசரத்தில் உங்களை பற்றி எழுதி உள்ளேன் நேரம் இருந்தால் பார்க்கவும்

கூட்டான்சோறு...

உலக சினிமா ரசிகன் said...

இந்தக்கவிதையில் க[வி]தை இருக்கிறது.தூய காதலின் [க]விதை இருக்கிறது.

நடிகர் சிவக்குமாரும்,நாஞ்சில் நாடனும் மோதிக்கொண்டதை பதிவிட்டுள்ளேன்.
வருகை தாருங்கள்.