
வேலியும் இல்லை
கூரையும் இல்லை
நரிகளிடம் இருந்தது தப்ப
நாய் வளர்க்கும் நிலைமை
நாய்க்கு வைக்க கூட
மிச்ச சோறு இல்லை
ஏன் மனுசருக்கே ஒருவேளைதான்
அதுவும் வேலை கிடைத்தால் மட்டும்
ஆனாலும் நாய் நன்றி உள்ள நாய்
கூரை வழியே வெளிச்சம் தெரியும்
வேலி இல்லாததால் வீடே தெரியும்
போர்க்கும் போர்வைதான்
அந்தரங்கச்சுவர்
உயிரை கையில் பிடித்துக்கொண்டு
உறங்கும்நிலை .
வேறை என்னத்தை பிடிக்க .
அதுமட்டும்தானே மிச்சம் இருக்கு
எச்சத்திலும் ஏதோ ஒன்றை தேடி
அலையும் நரிகள்
கேவலம் கெட்டவனுக்கு
கிடைப்பதெல்லாம் அமிர்தம்தானே
ஆம்பிளை என்ற பெயருக்கு
அப்பா இருப்பதால்
மூத்த அக்கா இரண்டுபேரும்
ஓரளவுக்கு தூங்குகின்றார்கள்
அண்ணா மட்டும் இருந்திருந்தால்
நானும் தூங்கியிருப்பேன்
இப்படிக்கு சின்னதம்பி
Tweet | |||||
11 comments:
வித்தியாசமாக யோசித்து
இயல்பான வார்த்தைகளில் மிக நேர்த்தியாக
தொடுக்கப் பட்ட மலர் சரம் அருமை
தொடர வாழ்த்துக்கள்
வலிதரும் வாழ்வின் யதார்த்தமதை உணர்ச்சிமிக்க வார்த்தைகளில் தந்திருக்கிறீர்கள்.
யாதார்த்தம் ஒவ்வோரு எழுததிலும். ஈழத்தமிழன் ஈனததமிழனாக வாழும நிதர்சனம் வரிகளில். ஆழப் பாதித்துவிட்டது மனதை. எங்கள்அண்ணன் இருந்திருந்தால்.......
மனதில் உள்ளதை அப்படியே சொன்னமாதிரி இருக்கு.அவலம் எப்போதீரும் என்கிற ஆதங்கத்தோடுதான் எல்லோரும் !
//அண்ணா மட்டும் இருந்திருந்தால்
நானும் தூங்கியிருப்பேன்
இப்படிக்கு சின்னதம்பி//
நல்லா இருக்கு. கீப் இட் அப் !
nice...vaalththukkal
so nice ....to read
அருமை சார் !
உள்ளத்தை கனக்கச் செய்யும் பதிவு இன்றய சூழலை படம் பிடித்து கட்டுகிறீர் விடிவு ஒருநாள் கிட்டாமலா போகும்?
இதே போன்ற படைப்புகளை தங்களிடம் என்றும் எதிர்பார்க்கிறேன்..
அருமையான கவிதை.
வாழ்த்துகள்.
Post a Comment