
தன் உயிர்
தான் நேசித்த உயிர்கள்
உறவுகள் சொந்தம் பந்தம் நட்பு
ஒன்றன் பின் ஒன்றாக
மடியும் போது
கண்ணீர் வற்றிய கதறல்கள்
அனுபவிதவனால் கூட
அதே உணர்வுடன்
திருப்பி சொல்ல முடியாது
பிறந்த பூமி
வாழ்ந்த வீடு
தோட்டம் துறவு வயல் இன்றி
அனாதையாய் அட்டிபட்டு
உணவுக்காய் கை ஏந்தி
உயிர் காக்க
உடைகள் உரிந்து காட்டி
உயிர் தப்பினவன்
இன்னொரு பிறப்பு கேட்க மாட்டான்
Tweet | |||||
7 comments:
சரியான சவுக்கடி..
வலிமிகுந்த கவிதை
//கண்ணீர் வற்றிய கதறல்கள்
அனுபவிதவனால் கூட
அதே உணர்வுடன்
திருப்பி சொல்ல முடியாது//
கண்டிப்பாக திருப்பி சொல்ல முடியாது
முற்றுகை இடப்படும் போது தான் சுதந்திரத்தின் அருமை புரியும்
பகிர்வுக்கு நன்றி
உயிர் காக்க
உடைகள் உரிந்து காட்டி
உயிர் தப்பினவன்
இன்னொரு பிறப்பு கேட்க மாட்டான்////
உண்மை... இன்னொரு முறை அடிபட விரும்ப மாட்டான்.
ஆழ உணர்ந்து அனுபவித்து வந்த வலி வரிகளில் தெரியுது !
Anna nan ippadi adipattal thirumpi piraka aasai Paducah .becoz saathika poraduvathuku..... Hi Anna your archu again........
மனிதப் பிறவி என்பது உயர்ந்தது இதில் இந்த பிறவியில் பாமரனாக ஏழையாக இருந்தால் அடுத்த பிறவியில் நான் பணக்காரனாக இருப்பான் என கடவுள் பற்றாளர்கள் கூறிக் கொள்வதுண்டு அனால் அடுத்த பிறவியை என்னமட்டன் என கூஉவது உண்மையில் நாங்கள் பட்ட வலி அவ்வளவு கொடுமையானது என கூறியமை உள்ளம் கவலை கொள்ளுகிறது தமிழர்களாக இறந்து விட்டதைத் தவிர நாங்கள் என்னசெய்தோம் என இல்லாத கடவுளையும் மனிதபி மனம் உள்ளவர்களையும் கேட்க தொன்றுகியது விடியும் ... காத்திருப்போம் தமிழரே உயர்ந்தவர் ஒற்றுமையுடன் இனியேனும் இருக்க பழகுவோம் ....
உண்மை தான்...கவிஅழகன்.
வேதா. இலங்காதிலகம்.
Post a Comment