11/28/2012

கார்த்திகை தெய்வங்களுக்கு ஒரு கவிதை


கார்த்திகை என்றதும் கண்களில் ஈரம்
மாவீர சொந்தங்களின் கல்லறை ஓரம்
களத்திலே காட்டிய வீரங்கள் எத்தனை – எம்
கண்மணிகள் தூங்கிடும் கல்லறைகள் அத்தனை

தீபங்கள் ஏற்றி பூசைகள் செய்வோம் – எம்
தேசத்தின் புயல்களை நெஞ்சிலே வைப்போம்
கார்திகை நாயகர்களின் கண்களில் எல்லாம்
ஈழத்தின் விடுதலை இலட்சியம் காண்போம்

தலைவனின் வழியில் காளத்திலே நின்று
கனவினை முடிக்கும் தைரியம்கொண்டு
புயலென பாய்ந்து போரினைசெய்தீர்
நெஞ்சிலே பாய்ந்த குண்டினால் மடிந்தீர்   

ஒருமுறை உங்களுடன் பேசிடவேண்டும்
மறுபடி கண்களை திறந்திட வேண்டும்
ஒரு பிடி சோற்றை உண்டிட வேண்டும்
என் விரல்களை சூப்பியே கைகளிவிட வேண்டும்

தெய்வங்களே

ஒருமுறை உங்களுடன் பேசிடவேண்டும்
மறுபடி கண்களை திறந்திட வேண்டும்
ஒரு பிடி சோறை உண்டிட வேண்டும்
என் விரல்களை சூப்பியே கைகளிவிட வேண்டும்

4 comments:

கவிதை வீதி... // சௌந்தர் // said...

வீழ்ந்தும் வீழாதவர்கள்...

என் அஞ்சலிகள்...

திண்டுக்கல் தனபாலன் said...

நெஞ்சம் கனத்த வரிகள்...

ஹேமா said...

கண்டோம் கதைத்தோம்.அவர்கள் நம்பிக்கைகள் இப்போ நம் கைகளில் !

மாலதி said...

உள்ளத்தை கல்லாக்கும் உன்னதமான வரிகள் மாவீரர்களின் சிறப்பு வரலாற்று சிறப்புவாய்ந்தவை ....வணங்கி நினைவு கூர்கிறோம்