1/14/2011

நான் ஏன் பதிவெழுத வந்தேன் (தொடர் பதிவு)

உவன் தம்பி சுதாக்கு வேலையில்ல சிவனே எண்டு இருந்த என்ன மாட்டிவிட்டிடான்

தம்பி சுதா வின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த கட்டுரை. இதுதான் கடைசி. எனது பிளாக்கரில் இனி கவிதை மட்டுமே வெளியிடப்படும். இது சத்தியம். (ஏனெண்ட அது தான் இலகு பந்தி பந்தியா அடிக்க தேவையில்லை ).

வன்னியில் இருந்து ஒரு கடிதம் வந்தது பிளாக்கர் ஆரம்பிகச்சொல்லி.

2008 மார்கழி மாதம் இந்தியா சென்றபோது பிளாக்கர் சமந்தமாக கனடாவில் இருந்தது வந்த அண்ணா coumputer தெரிஞ்ச மச்சானோட கதைத்தார். அப்பொழுது ஒன்றும் புரியவில்லை. நான் சும்மா பக்கத்தில கேட்டு கேட்டு கொண்டு தலையை ஆட்டி ஆட்டி கொண்டு இருந்தான். பெரிய பெரிய ஆக்கள் எல்லாம் பிளாக்கர் வைத்திருக்கிறார்கள் கவிதை போடுகிறார்கள் என்றார். அப்பவே மனதுக்குள்ள முடிவெடுத்திட்டன் நானும் ஒரு பிளாக்கர் திறக்குரதான் என்று .சிறுவயதில் இருந்து கொப்பியில் எழுதிவைத்த கவிதைகளை போடலாம் ஆனால் பெரியாட்களுக்கு முன் எனது கவிதை எடுபட வேண்டுமென்றால் பெயரிலாவது பெரியாள் போல் காட்டவேண்டும் என சிந்தித்தேன். சிந்த்திதுகொண்டே இலங்கை வந்தேன். அதனால் தான் கவி கிழவன் என பெயர் வைத்தேன்

இலங்கைக்கு வந்து அடுத்த நாள் அலுவலகம் சென்றேன். மேசையில் ஒரு கடிதம். இதோ கடிதம் . ஒரு சில காரணங்களுக்காக பெயர்கள் மறைக்கபட்டுள்ளது .

வன்னி வள்ளிபுனத்தில் இருந்து ஒரு கடிதம் வந்தது பிளாக்கர் ஆரம்பிகச்சொல்லி.கொஞ்சம் அதிகம் தான் அப்படியே தருகின்றேன் .




ஆச்சரியம் கணணி பாவனை குறைந்த வன்னியில் இருந்து இந்த இடம்பெயர்வுக்குளும் பிளாக்கர் சமந்தமாக Colombo இல் இருக்கும் எனக்கு எழுதுகிறார். ஆரம்பிதேன் 16 17 வயதில் இருந்து யாருக்கும் காட்டாது எழுதிவைத்த கவிதைகளும் பல்கலைகழக சுவர்களில் எழுதிய கவிதைகளும் புதிதாக எழுதுகின்ற கவிதைகளும் என கவிதைகளை பிரசுரிதேன்.

பாமினியில் மட்டும் type பண்ண தெரியும் அந்த துணிவில பிளாக்கர் ஆரம்பித்தான். நானே ஒன்று திறந்தேன் அது சரி வரல பிறகு மச்சானின்ட உதவியோட அவன கேட்டு கேட்டு துறந்தான். அவன் எங்கள் வீட்டில் இருந்து படிச்சபடியா வசதியா போட்டு. டெம்ப்ளேட் வடிவமைப்பு எல்லாம் சொல்லித்தந்தான்.எல்லா கவிதையையும் word ல அட்டிச்சன். நல்ல காலம் மச்சான் சொன்னான் unicod font தான் பிளாக்கர்ல போடலாம் என்று. அத எப்படி மாத்திரதென்ட்டு சொல்லித்தந்தான். ஒரு மாதத்திற்கு 10 கவிதை போடிரதுதான் அரம்பத்தில திட்டம் . அடுத்தடுத்து 10 கவிதையையும் போட்டன் . அப்படி 2 மாசம் போட்டன். thamilish ல இணைக்கவில்லை . இன்னும் என்ட கவிதைகள் சில தமிளிஸ்ல வராம இருக்கு . மச்சான் தான் எனக்கு thamilish இல இணைகிற முறை சொல்லித்தந்தான் . அவன் தான் vote போடுற கருத்து போடுற நுட்பங்கள் சொல்லித்தந்தான். எதாவது சந்தேகம் என்றால் உடனே தொடர்பு கொள்வது அவனைத்தான் . அவன் வேறு யாருமல்ல http://www.tamilhackx.com/ பிளாக்கர் உரிமையாளர் சயந்தன்.

என்ன பகிடி ஏன்டா விசிட்டர்ஸ் flag counter பொட்டுடன எங்க எங்க இருந்தெல்லாம் அகல் பக்கிரினம் எண்டு விழுந்திச்சு . எனகேண்டா சந்தேகம் அரம்பத்தில . என்ட கவிதையை இவ எல்லாம் பாபினமோ உது சும்மா பொய் சொல்லுது என்டு நினைச்சன் . பிறகு தான் கம்ப்யூட்டர் பொய் சொல்லாது எண்டு விளங்கிச்சு .

எனது கவிதைகளை பார்க்க உயிருடன் வருவாரா வந்தாலும் முகாமில் இருந்து எப்ப வந்து எப்ப பார்பார் என்ற ஏக்கம் மனதுக்குள் இருந்துகொண்டே இருந்தது .

வந்தார் குடும்பத்துடன் ஒருவித பிரச்சனையும் இன்றி. முகாமில் இருந்தார் தொடர்பு கொண்டார். இப்பொழுது முகாமில் இருந்து வெளியில் வந்து எனது 100 வது படைப்புக்கு ஆசியும் எழுதி தந்தார் . அவர் வேறு யாருமில்லை பூங்கோதை படைப்புகள் http://www.poonka.blogspot.com/ பளோகரின் சொந்தகாரி .இப்பொழுது லண்டன் சென்றுவிட்டார் . அவரது ஆசி கவிதையை பார்க்க

http://kavikilavan.blogspot.com/search/label/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%95%E0%AE%A4%E0%AF%௮௮

இந்த லிங்குக்கு செல்லவும். ஒரு மாதிரி 161 கவிதை எழுதிட்டன். நிலா மதி அக்கா தான் முதன் முதலில் தனிபட்ட முறையில் தொடர்பு கொண்டவர். வாழ்த்தினவர். அவரையே இதை தொடர அழைக்கிறேன் .
நிலா மதி அக்கா நிலா மதி அக்கா எங்கிருந்தாலும் உடனே கரியாலியதுக்கு வரவும் உங்களுக்கு பொங்கல் காத்திருக்கிறது . இப்படிக்கு ஆலய பரிபாலன சபையினர்

14 comments:

Unknown said...

என்ட கவிதையை இவ எல்லாம் பாபினமோ உது சும்மா பொய் சொல்லுது என்டு நினைச்சன் . பிறகு தான் கம்ப்யூட்டர் பொய் சொல்லாது எண்டு விளங்கிச்சு .
//
ஏன் சார்??நல்லாத்தானே எழுதுறீங்க??மொதல்'ல உங்க மேல நம்பிக்க வையுங்க சார்!!
வாழ்த்துக்கள் யாதவன்...தொடருங்கள்...

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

கஸ்ரத்திலும் கல்வியை கைவிடாத உறவுகள் பலர் நம்மண்ணில் உள்ளனர் போற்றப்படவேண்டியவர்கள்..
அருமை மேலும் உங்கள் கவிதைகள் பிரபல்யமாக எனது வாழ்த்துக்கள்.. அத்துடன் பொங்கல் வாழ்த்துக்கள் யாதவன்

Anonymous said...

முயற்சி வெற்றி தரும்.

Anonymous said...

ரொம்ப நல்லாருக்கு

Anonymous said...

http://sathish777.blogspot.com/2011/01/cyber-cafe-18.html
என் பக்கமும் வாங்க

ஹேமா said...

சரியான சோம்பேறித் தம்பியா இருப்பீங்கள் போல இருக்கு !

எம் அப்துல் காதர் said...

ரொம்ப நல்லாருக்கு. வாழ்த்துக்கள்!! தொடருங்கள்.

Jeyamaran said...

hmm nalla story innum thodara vaalthugal

vanathy said...

super! well written.

ம.தி.சுதா said...

நன்றி அண்ணா உங்கள் கவிதைகளில் எப்போதும் ஒருவித ஈரமிருக்கும் அது தான் என்னை உங்கள் ரசிகனாக்கியது...
தாங்கள் இன்னும் ஜெயிப்பிர்கள் அதற்கு என் வாழ்த்துக்கள்...

நிலாமதி said...

வந்தேன் வந்தேன் ..........ஆலயத்தில் (பரிபலனசபையில் ) எனக்கென்ன் வேலை ..

..தம்பி மாட்டி விட்டியே அக்காவை.

jgmlanka said...

தம்பி... உன்னுடைய திறமையும் தற்துணிவும் உன்னை எப்பொழுதும் சிகரத்திற்கு கொண்டு செல்லும்.. அதை உன் பிளாக்கரை தரிசித்த எல்லோருமே அடித்துக் ‍‍‍௬றுவார்கள். ஆமா... அது என்ன நிலாமதி அக்காவுக்கு மட்டும் பொங்கல்... பொங்கலில் எதாவது விசேஷமா? நிலாமதி அக்கா.. ஜாக்கிரதை... பொங்கலில் ஏதாவது போட்டு வைக்கப் போகிறான். (சும்மா பகிடி தான்)

இனிப்பான உன் கவிப் பொங்கல் பொங்கு...
இனிப் பேனா ஓயாது பொங்கட்டும்
பனிப் பெய்யும் தேசத்தில் உறையாது உன் உணர்வு
பாலாறாய் பொங்கி கவியாறாய் பாயட்டும்
வாழ்க நீ நீடூழி
நீழ்க நின் கவிப்பயணம்
அன்புடன் அக்கா

Mohamed Faaique said...

நல்லாயிருக்கு...உங்க கவிதைகளுக்கும் நான் விசிறி...

அம்பலத்தார் said...

எனக்குக் கவிதை எழுதவராது நல்ல கவிதைகளைத் தேடிப்படிக்கமட்டும் தெரியும் உங்கள் கவிதைகள் மனதிற்கு இதமாக இருக்கு. தங்கை நிலாமதியிற்கு ரொம்ப நல்லமனது எல்லோரையும் தட்டிக்கொடுத்து உற்சாகப்படுத்திறதிலை கில்லாடி