1/10/2011

பெண்ணுக்கு தேவை எப்பொழுதும் ஊடல்

இருதயம் என்பது இடைவிடாத் துடிப்பு
இதழ்களின் ஓரம் உதிர்ந்திடும் சிரிப்பு
கண்ணினை இமை காத்திடும் பொறுப்பு
காதலில் விழுந்தோர் வாழ்வினில் நெருப்பு

பார்க்கத்துடிக்கும் எண்ணத்தின் வேகம்
பார்த்த உடனே கன்னத்தில் ஈரம்
பேசநினைத்த உதடுகள் போட்டி
வார்த்தை இல்லாமல் நடந்திடும் சூழ்ச்சி

கைகள் இரண்டிலும் விரல்களின் ஆட்சி
வெட்கம் என்பது காதலின் சாட்சி
தூர நிற்பது பெண்மைக்கு அழகு
துரத்தி செல்வது ஆண்களின் இலக்கு

சொல்லவருவதை மெல்வது காதல்
சொல்லாததை செய்வது கூடல்
பெண்ணுக்கு தேவை எப்பொழுதும் ஊடல்
ஆண்களின் வெற்றி டலில் ஆள்தல்

15 comments:

சிந்தையின் சிதறல்கள் said...

நல்ல ரசனை உங்களுக்கு அருமையான படைப்பு

பழமைபேசி said...

அருமை...

//நிப்பது // நிற்பது!

ம.தி.சுதா said...

ஃஃஃஃகைகள் இரண்டிலும் விரல்களின் ஆட்சி
வெட்கம் என்பது காதலின் சாட்சிஃஃஃஃ

உங்க வரி பார்த்தால் காதல் வராதவனுக்கும் காதல் வரும் போல இருக்கே அண்ணா...

கவி அழகன் said...

நேசமுடன் ஹாசிம் sபழமைபேசி ம.தி.சுதா நன்றி உங்கள் கருத்துக்களுக்கு
நன்றி பழமை பேசி திருத்திவிடேன்

vanathy said...

very touching lines. Super.

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

அருமைான கவிதை யாதவன்......

வினோ said...

செம நண்பரே...

ஹேமா said...

யாதாவா...காதல்...ஊடல் எண்டு ஒரு முடிவோடதான் இருக்கிறீங்க !

நிலாமதி said...

ஜாமாயுங்கள் வாழ்க்கை வாழ்வதற்கே....
.......நல்ல கவிஞன்... நல்ல ரசிகன்.

Anonymous said...

//ஆண்களின் வெற்றி ஊடலில் ஆள்தல் //

பெண்களின் பலவீனம்..இது தான் இல்லையா யாதவன்

கவிதை காதலோடு..

அழகி said...

அருமையான வரிகள்.

Priya said...

அழகான வரிகள் கொண்ட கவிதை...அழகு!

suba said...

suprrrrrrr........ anna

suba said...

SUPERRRRRR....... ANNA
ENAKKE LOVE PANNANUMNU THONUDU

கவி அழகன் said...

Thank you very much suba , unkaludaya karuthukkal ennai mikavum ukappaduthukinrau, unkal varukaikkum karusanaiyaana karutthukkum nanrikal