
மழை வேண்டாம் அகதி முகாம் வெள்ளத்தில்மூழ்க வேண்டாம்
வெய்யில் வேண்டாம்
பச்சைக் குழந்தைகள் அகதி முகாமில்
சிறுவீட்டுக்குள் காயவேண்டாம்
காற்றுவேண்டாம்
அகதி முகாமில்
தொற்றுநோய்பரவி சாகவேண்டாம்
உணவு வேண்டாம்
விருந்தோம்பும் தமிழன்
கையேந்தி நிற்கவேண்டாம்
கனவு வேண்டாம்
கனவு முழுக்க இறந்த உறவுகளின்
நினைவுவேண்டாம்
கடவுள் வேண்டாம்
பெற்றோரை இளந்து
ஆனாதைகளான பிள்ளைகள் வேண்டாம்
தண்ணீர்வேண்டாம்
குடிக்கும்தண்ணீர் எல்லாம்
தமிழனின் கண்ணீராக வேண்டாம்
கத்திவேண்டாம்
சிசுக்களை கருவிலேயே
கொல்ல வேண்டாம்
பாக்கிஸ்தான் இந்தியா சீனா வேண்டாம்
தமிழரை அளிக்க
ஆயுதம் அனுப்பவேண்டாம்
சர்வதேசம் வேண்டாம்
சதிதீட்டி தமிழரை
கொல்ல வேண்டாம்

தேவதையே நான் கேட்பது என்ன என்பது
உனக்கு புரியவேணும்
நான் தேவதையை அனுப்புகிறேன் இவர்களுக்கு
சுமஜ்லா
சக்தி
தியாவின் பேனா
அகல் விளக்கு
தமிழரசி