
திரும்பிப்பார்த்தேன்
சரிகை சருசருக்கநடக்கிறார்கள்
எத்தனை வீடுகள் ஏறிஇறங்கியிருப்பர்
என் அகராதியில் எழுதப்பட்டுவிட்டது
எனக்கு ஏமாற்றம்தானென்று
இருந்தும் ஒரு நப்பாசை
என்னையும் பிடிக்குமென்று
என் உழைப்பில்தான்
எங்கள் குடும்பம்
ஒவ்வொறுமுறையும்
தட்டங்கள் நிரப்பவே
சேமித்தபணம் செலவளிந்துவிடும்
சிரித்தமுக்துடன்
வாசல்படிஏறிவந்து
கதைத்துப்பேசி
பலகாரங்களைத்தின்றுவிட்டு
பசுமையான எங்கள் குடும்பம்போன்ற
வெற்றிலையை கையிலெடுத்து
என்வாழ்க்கை போன்ற
காய்ந்த பாக்கை அதற்குள் போட்டு
வெள்ளைமனசு சுண்ணாம்பை
மெதுவாகத்தடவி
ஒரேசுருட்டுசுருட்டி
வாய்க்குள்போட்டு அரைத்துவிட்டு
போகுமபோது வாசலில் துப்பிவிடுவர் சிவப்பாய்
என் வாழ்க்கையையும் சேர்த்து.
Tweet | |||||
11 comments:
வாய்க்குள்போட்டு அரைத்துவிட்டு
போகுமபோது வாசலில் துப்பிவிடுவர் சிவப்பாய்
என் வாழ்க்கையையும் சேர்த்து.
அசத்தல்
Thanks Sakthi
//போகுமபோது வாசலில் துப்பிவிடுவர் சிவப்பாய்
என் வாழ்க்கையையும் சேர்த்து.//
கவிதை சிந்திக்க வைக்கிறது. அழகு.
ஒரு முறை என் வலையத்துக்கு வாருங்கள். ஒரு செய்தி காத்திருக்கிறது.
அழகான கவிதை. தங்களின் படைப்புகள் அனைத்தும் மிக அழகாக உணர்ச்சிப் பூர்வமாக வடித்துள்ளீர்கள்.வாழ்த்துக்கள்!
பெண் பார்க்க வந்து மறுதலித்து போகும் , மாப்பிள்ளை வீட்டுக்காரராக இருக்கவேணும் .இக்கவிதை. பெண்ணின் மன ஏக்கத்தை காட்டுகிறது
Thnaks நிலாமதி த.பிரகாஷ் ஜெஸ்வந்தி sakthi
வணக்கம் கவிக்கிழவரே.இன்றுதான் உங்களைக் கவனித்தேன்.அதுவும் நீங்கள் என்வீடு தேடி வந்திருந்தபடியால்.
அருமையாக இருக்கிறது உங்கள் வீடு.
பெண்பார்க்கும் படலத்தை அற்புதமாகச் சொல்லியிருக்கு கவிதை வரிகள்.இன்னும் வருவேன்.
ரொம்ப ரொம்ப ரொம்ப ரசித்தேன்
கன்னியின் கனவு வலியை
வாழ்த்துக்கள்
விஜய்
உணர்வுப்பூர்வமான கவிதை...
மனதை கனக்கச் செய்கிறது நண்பா....
Post a Comment