7/15/2009

ஊரைப்பிரிந்து

பிணங்களும்
பிணவாடைகளும்
கழுகளின் காரியாலயங்களும்
வட்டில்லா தென்னைகளும்
பற்றைமண்டிய வீடுகளும்
கோபுரம் இடிந்தகோயில்களும்
பள்ளம் விழுந்த வீதிகளும்
இது எந்தன் கிராமமா
இல்லை செவ்வாய்க்கிரகமா
ஊரைச்சுற்றி சோலைகள்
கைகூப்பவைக்கும்
மணிஓசைகள்
விளைச்சல் தரும் வயல்கள்
பாலரிவிபோல் கால்நடைகள்
ஆங்காங்கே அழகிய கூரைவீடுகள்
குளைதள்ளும் வாழைகள்
பனைதரும் நொங்குகள்
பாட்டி சொல்லும் கதைகள்
இதுதான் என் கிராமம்
எப்போ செல்வோம்
எங்கள் இறுதிமூச்சைவிட

2 comments:

நிலாமதி said...

"ஊரை பிரிந்து " பதிவை படிக்க சற்று தெளிவின்றி காணப்படுகிறது . ஆவன செய்வீர்களா? உங்கள் முயற்சிக்கு பாராடுக்கள். நிலாமதி

கவிக்கிழவன் said...

நன்றி உங்கள் கருத்துக்களுக்கு நிலாமதி. உங்களின் கருத்துக்கள் என் கவிதை அமைப்புக்களை மேலும் வலுப்படுத்துமு; ஆதரவுக்கு நன்றி