9/02/2012

கசக்கிபோட்ட மலராய் ஆனேன்


உன்னை எண்ணி உருகித்தவிக்கும்

எந்தன் இதயம் என்ன கேட்கும்

கண்களிரண்டில் கண்ணீர் வந்து

காதல் என்று சொல்லித் துடிக்கும்


வானவெளியில் நிலவு ஒன்று

தன்னந்தனியாய் காத்து நிற்கும்

வங்கக்கடலின் அலைகள் நடுவே

வண்ணச்சூரியன் மெல்ல மறையும்


இரவின் விளிம்பில் இதயம் கனக்கும்

பெருமூச்சு எல்லாம் புயலாய் மாறும்

நெருப்பின் நடுவே காத்து நிற்கும் – என்

நினைவுகள் எல்லாம் பொசுங்கி போகும்


ஒற்றை நிமிடம் காத்து நின்று

உன் ஒற்றை வார்த்தை கேட்பதற்கு – நீ

சுற்றும் இடமெல்லாம் பின்தொடர்ந்தேன் – நான்

கசக்கிபோட்ட மலராய் ஆனேன்

5 comments:

ஹேமா said...

ஒற்றை வார்த்தையில்தானே உயிர்மூச்சும் தங்கியிருக்கிறது.காத்திருப்பின் ஏக்கம் வரிகளில்....அருமை !

MARI The Great said...

//
இரவின் விளிம்பில் இதயம் கனக்கும்

பெருமூச்சு எல்லாம் புயலாய் மாறும்

நெருப்பின் நடுவே காத்து நிற்கும் – என்

நினைவுகள் எல்லாம் பொசுங்கி போகும்
//

நல்ல வரிகள் கவி அழகன்!

திண்டுக்கல் தனபாலன் said...

முடிவில் ஏங்க வைக்கும் வரிகள்...

கவி அழகன்-பெயருக்கேற்ற உங்களின் கவிதை வரிகளும் அழகாக உள்ளன... வாழ்த்துக்கள்...

விரல்களின் நாதம் said...

இதயத்தை தொட்ட அருமையான வார்த்தைகள் ....

அம்பாளடியாள் said...

இரவின் விளிம்பில் இதயம் கனக்கும்

பெருமூச்சு எல்லாம் புயலாய் மாறும்

நெருப்பின் நடுவே காத்து நிற்கும் – என்

நினைவுகள் எல்லாம் பொசுங்கி போகும்

அருமையாக உள்ளது வார்த்தைப் பிரயோகம் !...

வாழ்த்துக்கள் சகோ மேலும் தொடர .

மன்னிக்க வேண்டும் சகோ இன்றுதான்
அவதானித்தேன் உங்கள் பின்தொடர்வோர் பட்டியலில் நான் இணையவில்லை என .