8/24/2012

அடியேய் என் செல்லக்குட்டிஅடியேய் என் செல்லக்குட்டி – உன்

கண்கள் என்னைக் கொல்லுதடி

விடியும்வரை காத்திருந்து

விழிகள் இரண்டும் வேர்க்குதடி


உடையாய் உன் இடை வருடி - உன்

கால்கள் இரண்டிலும் நடை பழகி

விடையே தெரியா காதலுக்காய்

காத்திருப்பேன் என் கன்றுகுட்டி


சுவரே இல்லா சித்திரமாய் –என்

காதல் சுழன்று துடிக்குதடி

கலரே இல்லா என் வாழ்வில்

தூரிகை தந்து உதவிடடி


படியே தாண்டா பத்தினியாய் – உன்

பார்வை ஏன் கீழே போகுதடி

தவியாய் கிடந்தது தவிக்கின்றேன்

கொஞ்சம் பாசம் தந்து கொன்றுடடி

14 comments:

Anonymous said...

''...அடியேய் என் செல்லக்குட்டி – உன்

கண்கள் என்னைக் கொல்லுதடி...''
வரிகள் நன்றாக உள்ளது.
இரு சொற்கள் மாற்றியுள்ளேன் சரியாக.
நல்வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

அழகான காதல் கவிதை.
பாராட்டுக்கள்.

//காத்திருப்பேன்
என் கன்றுகுட்டி//

என்ற இடத்தில்

காத்திருப்பேன்

”கன்னுக்குட்டி
என்
செல்லக்கன்னுக்குட்டி”

என்று இருந்தால் இன்னும்
நல்லாயிருக்குமோ?

அன்புடன்
vgk

வை.கோபாலகிருஷ்ணன் said...

"அடியேய் என் செல்லக்குட்டி"

என்ற தலைப்புக்கு பதிலாக

“கன்னுக்குட்டி
என்
செல்லக்கன்னுக்குட்டி”

என்று கூட வைத்திருக்கலாம்.

வாழ்த்துகள்.

vgk

மிங்கி said...

அசத்தலான கவிதை

அடியேய் என் செல்லக்குட்டி – உன்

கண்கள் என்னைக் கொல்லுதடி

விடியும்வரை காத்திருந்து

விழிகள் இரண்டும் வேர்க்குதடி

அன்பு உள்ளம் said...

படியே தாண்டா பத்தினியாய் – உன்


பார்வை ஏன் கீழே போகுதடி

தவியாய் கிடந்தது தவிக்கின்றேன்

கொஞ்சம் பாசம் தந்து கொன்றுடடி

அய்யய்யோ கொலையா?.... வேணாம் ...

கவிஞரே நீங்கள் பல்லாண்டு வாழ வேண்டும் என்று
வாழ்த்துகின்றோம் :) மிக்க நன்றி பகிர்வுக்கு .முடிந்தால் அன்பு உள்ளத்திற்கும் தங்கள் ஆதரவை நல்குமாறு அன்போடு அழைக்கின்றேன் .

வரலாற்று சுவடுகள் said...

நல்ல கவிதை நண்பா!

ஹேமா said...

விழிகளுக்குள் வியர்வை....அப்பாடி...காதல் இது காதல் !

விமலன் said...

நல்ல் கவிதை.வாழ்த்துக்கள்.

நிரூபன் said...

வணக்கம் கவி அழகரே,
அருமையான கவிதை, சந்தம் தப்பாது ஒரு பாடல் போல மெட்டுக் கட்டி எழுதியிருக்கிறீங்க.
காதல் படுத்தும் பாட்டை ரொம்பத் தான் அனுபவிக்கிறீங்க என்று கவிதை சொல்லுது.
வாழ்த்துக்கள் சார்.

ரிஷபன் said...

விழிகள் இரண்டும் வேர்க்குதடி

arumai

திண்டுக்கல் தனபாலன் said...

நல்ல வரிகள்... பாராட்டுக்கள்...

பகிர்ந்து கொண்டதற்கு வாழ்த்துக்கள்... நன்றி...

எல்லா 'டி' யும் இப்பவே சொல்லிடுங்க.. அது தான் நல்லது... (சும்மா நகைச்சுவைக்காக...)

தொழிற்களம் குழு said...

செல்லமாய் ஒரு காவிதை...

வாழ்த்துகள்...

தொழிற்களம் உதவி ஆசிரியர் பணி

Anonymous said...

Nalama?..
vetha.Elangathilakam

காயத்திரி said...

வணக்கம் கவி அழகரே,நல்ல கவிதை.வாழ்த்துக்கள்.கண்கள் என்னைக் கொல்லுதடி...''
வரிகள் நன்றாக உள்ளது. கவிஞரே நீங்கள் பல்லாண்டு வாழ வேண்டும் என்று வாழ்த்துகின்றோம்