11/06/2011

வெட்கம் இன்றி வெளிநாடு வந்து



நீல வானில் வெள்ளை மேகம்
நீந்தி திரியும் பஞ்சுக்கூட்டம்
திரத்தி சென்று சேரும் நேரம் - நான்
காதல் கொண்ட கதையை சொல்லும்

உயர மரத்தில் ஒற்றைக்குருவி
ஊரூ முழுக்க பாட்டு சொல்லி
சிறகடிக்கும் காலைப்பொழுதில் - என்
மனசு முழுக்க உவகைகொள்ளும்

கூதல் காற்றில் உடல் விறைத்துப்போக
இரட்டைப்போர்வையை இழுத்து மூட
வெட்க்கப்படும் நினவுத்தோட்டம்
வேர்த்துக்கொட்டும் இருமனசுக் கூட்டம்

காலைப்பொழுதில் கடைக்கு சென்று
பாலும் வெதுப்பியும் வாங்கிவந்து
சூடாய் கோப்பி குடிக்கும் போது - அவள்
ஸ்பரிசம் என்று நா உணர்ந்துகொள்ளும்

சொந்தம் விட்டு வெளிநாடு வந்து
இரவை மறந்து உடல் உழைக்கும் போது
பட்ட துன்பம் மாறிப்போகும்
தொலை பேசி ஓசை கேட்க்கும்போதே


32 comments:

இராஜராஜேஸ்வரி said...

சொந்தம் விட்டு வெளிநாடு வந்து
இரவை மறந்து உடல் உழைக்கும் போது
பட்ட துன்பம் மாறிப்போகும்
தொலை பேசி ஓசை கேட்க்கும்போதே


நிதர்சன கருத்துக்களின் பகிர்வுக்குப் பாராட்டுக்கள்>.

ம.தி.சுதா said...

////திரத்தி ///

எந்த நாடு போனாலும் எங்கள் ஊர் தமிழை வாழ வைக்க உங்கள் போல பல கூட்டம் தேவைப்படுது அண்ணே..

இம்முறை எதுகை முனை துள்ளி விளையாடுதே... அக்காச்சி (பூங்கோதை) உங்களை மாதிர 2 ரீச்சேர் அடிக்கடி வரணும்...

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
இலங்கைப் பதிவர்களின் முதல் குறும்படம் - ஒரு பழைய முயற்சி

SURYAJEEVA said...

// வாழ்வதற்காக சாவதும் வாழ்ந்துகொண்டே சாவதும் தமிழ் இனம் ஒன்றுதான் //

செத்த பிறகும் வாழ தெரிந்து கொள்ளா இனமும் நாம் தான்

கவிதை வீதி... // சௌந்தர் // said...

நாடுகடந்து வாடும் பிரிவின் துயரம் மிகவும் கெர்டுமைதான்....


தன்நாட்டின் சுகங்கள் விட்டுவிட்டு செல்லும் அத்தனை உள்ளங்களின் குமுறல்...

கவிதையில் அழகாக சொல்லியுள்ளீர்கள்...

சக்தி கல்வி மையம் said...

இரவை மறந்து உடல் உழைக்கும் போது
பட்ட துன்பம் மாறிப்போகும்
தொலை பேசி ஓசை கேட்க்கும்போதே..// தாய்நாட்டை விட்டு வந்து வேலை சிவோரின் துன்பங்கள் இந்த வரிகளில் தெறிக்கிறது..

மகேந்திரன் said...

தூர தேசத்தில் தூர் வாரி நீரருந்த துடிக்கும்
எம் போன்றவர்களுக்கான ...
பிரிவுத் துயரை நித்தமும் சுவாசிக்கும்
எம் போன்றோருக்கான
நிதர்சனக் கவிதை...

Yaathoramani.blogspot.com said...

அருமையான படைப்பு
ஈற்றடி படிக்கையில் எம்மையும் அறியாது
சந்தோஷம் மனதில் நிறைகிறது
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்க

goma said...

தாய்நாட்டில் அலட்சியமாய் பார்த்த விஷயங்களெல்லாம் அற்புதமாய் தெரிவது அயல்நாட்டில்

MANO நாஞ்சில் மனோ said...

சொந்தம் விட்டு வெளிநாடு வந்து
இரவை மறந்து உடல் உழைக்கும் போது
பட்ட துன்பம் மாறிப்போகும்
தொலை பேசி ஓசை கேட்க்கும்போதே//

ஆஹா அருமையா சொல்லி இருக்கீங்க மிகவும் ரசித்தேன்...!!!

முனைவர் இரா.குணசீலன் said...

உணர்வு கலந்து சொல்லியிருக்கிறீர்கள் நண்பா..

முனைவர் இரா.குணசீலன் said...

தொடர்புடைய
துபாயா? அபுதாபியா? என்ற

http://gunathamizh.blogspot.com/2010/03/blog-post_26.html

இந்த இடுகையைக் காணத் தங்கைள அன்புடன் அழைக்கிறேன் நண்பா.

settaikkaran said...

கானல்வரி போல மனதை நெகிழச்செய்யும் கவிதை

ஹேமா said...

காதல்,கடமையென ஆதங்கம் கலந்த கவிதை !

Anonymous said...

தாய்ப்பாலூட்டல் தாழ் குருதி அமுக்க நோயை தடுக்கும்.

Unknown said...

ஊர் விட்டு ஊர்வந்தாலே
தாங்க முடியவில்லை
நாடு விட்டடு நாடு போனால்..
துன்பம் தான்

கற்பனை வளம் சிறப்பு உண்மை!

புலவர் சா இராமாநுசம்

Mohamed Faaique said...

//வெதுப்பி///
தமிழ் விளையாடுது பாஸ்.. இதற்குறிய அர்த்தம் அனைவரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை.. கீழே குறிப்ப்பிட்டிருக்கலாமே!!!!

Suresh Subramanian said...

nalla karuthu.. rishvan... www.rishvan.com

குறையொன்றுமில்லை. said...

ஆதங்கம் நிறம்பிய கவிதை

கோகுல் said...

பிறந்தகம் கடந்து, உறவுகள் தொலைத்து,
நட்புகள் கலைந்து
தொலைதூரம் வசிக்கும் பலரின்
உள்ளதிளிருக்கும் வார்த்தைகள் அல்ல வலிகள்!

நிலாமதி said...

பட்ட துன்பம் மாறிப்போகும்
தொலை பேசி ஓசை கேட்க்கும்போதே.....

எதுவும் கடந்து போகுமிந்த துன்பமும் தான்...துன்பங்களின்பத்தின் வாயில்படி ...

Anonymous said...

வார்த்தை ஜோடனைகள் இல்லாத யதார்த்த உணர்வுகள்!!

தனிமரம் said...

பாலும் வெதுப்பியிம் வார்த்தை ஜாலம் பிரமாதம் வெளிநாட்டு தொலைபேசி ஒசை என கவிதையை சிறப்பாக்கி இருக்கின்றீர்கள்!

சுதா SJ said...

வலிகளை அழகாய் வார்த்தைகளில் கொண்டு வாறீங்க பாஸ். நிஜம் சொல்லும் கவிதை... உண்மையில் வெளிநாட்டில் இருப்போர் பாவபட்டோர்..

ADMIN said...

///சொந்தம் விட்டு வெளிநாடு வந்து
இரவை மறந்து உடல் உழைக்கும் போது
பட்ட துன்பம் மாறிப்போகும்
தொலை பேசி ஓசை கேட்க்கும்போதே///


அருமை. உறவை பிரிந்து வெளிநாட்டில் வசிக்கும் ஒவ்வொரு மனசும் இப்படித்தான் நினைக்கும்..!!

நிரூபன் said...

வணக்கம் பாஸ்,
நலமா இருக்கிறீங்களா?

ஊர் நினைவுகள் மனதை வாட்ட,
ஊரைப் பிரிந்திருந்தாலும் உற்றோரின் தொலைபேசி அழைப்புக் கேட்டு உவகை கொள்ளும் உள்ளத்தின் உணர்வுகளை கவிதை தன்னில் சொல்லியிருக்கிறீங்க.

Rathnavel Natarajan said...

நல்ல கவிதை.
வாழ்த்துக்கள்.

sarujan said...

காலத்துக்கு ஏற்ற யதார்த்தமான வரிகள்

vetha (kovaikkavi) said...

''..பட்ட துன்பம் மாறிப்போகும்
தொலை பேசி ஓசை கேட்க்கும்போதே..'''
மிக உண்மை. வாழ்த்துகள் கவி அழகன்.
வேதா. இலங்காதிலகம்.
http://www.kovaikkavi.wordpress.com

Anonymous said...

11.11.11 நூறுவருடத்திற்கு ஒருமுறை வரும் இந்த அபூர்வ நாளில்... தங்களுக்கும், தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.. வசந்தங்கள் வீசட்டும்... வாழ்வு செழிக்கட்டும்... மகிழ்ச்சி என்றும் பொங்கட்டும்... வெற்றிகள் குவியட்டும்... மனம் கனிந்த வாழ்த்துக்கள்...

அன்புடன் நான் said...

கவிதையை வெகுவாய் ரசித்தேன்.
பாராட்டுக்கள்.

ரிஷபன் said...

சொந்தம் விட்டு வெளிநாடு வந்து
இரவை மறந்து உடல் உழைக்கும் போது
பட்ட துன்பம் மாறிப்போகும்
தொலை பேசி ஓசை கேட்க்கும்போதே

முத்தாய்ப்பாய் இந்தவரிகள் எல்லாவற்றையும் சொல்லி விடுகிறது..

அம்பலத்தார் said...

உங்கள் கவி வரிகள் 25 வருடங்களிற்கு முந்தைய எனது புலம்பெயர் ஞாபகங்களை இரைமீட்கச்செய்கிறது. Thanks