6/19/2011

உடல் இல்லாமல் உயிர் வாழ்வது


உடல் இல்லாமல் உயிர் வாழ்வதும்
உயிர் இல்லாமில் உடல் வாழ்வதும்

சிறை இல்லாமல் சிறை ஆவதும்
சிறைக்குள்ளேயே விடுதலை ஆவதும்

பிணம் இல்லாமல் கிரிகை செய்வதும்
இறுதி வரை பிணமாக இருப்பதும்

கண்கள் இல்லாமலே கண்ணீர் விடுவதும்
கண்ணீர் வற்றிய கண்ங்கள் இருப்பதும்

உணர்வில்லாமல் ஊமையாவதும்
ஊமையே உணர்வாவதும்

வன்னி மண்ணில்

அல்லது

தமிழ் இனத்தில்

அல்லது

மேற்கூறிய இரண்டிலும்

25 comments:

rajamelaiyur said...

Very painful kavithai

rajamelaiyur said...

Endru thaaneum enkal tamilan sokam?

சி.பி.செந்தில்குமார் said...

வலிகள்

vidivelli said...

நண்பா நேரில் அனுபவித்த கொடூரமான காட்சிகள் படமாய் இதயத்தைக் கிழிக்கிறது..
அந்த நாள் நினைவுகள் அழியாத வடுக்களாய்...
அருமையான கவிதை..
ரொம்ப ரொம்ப வாழ்த்துஇக்கள்...

vidivelli said...

காதல் கவிதைகளில் விட இப்படியான கவிதைகள் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் நண்பா..
நான் எனது வலைப்பதிவை உருவாக்கியதே இந்த வலிகளை ஆற்றத்தான்...
பகிர்ந்து கொள்வோம்..எமக்குள்ளே

கவி அழகன் said...

நிச்சயமாக செம்பாக நண்பா

Unknown said...

கொடுமை....

Yaathoramani.blogspot.com said...

அருமையான கவிதை
"மேற்கூறிய இரண்டில் மட்டுமே
நிச்சயம் சாத்தியம் " என
முடிந்திருக்கலாமோ ?
நல்ல பதிவு தொடர வாழ்த்துக்கள்

கவிதை வீதி... // சௌந்தர் // said...

என்ன கொடுமை...

இது என்று மாறும் என்று ஏங்கி தவிப்பதை தவிர வேறு வழித் தெரிய வில்லை...

சிந்தையின் சிதறல்கள் said...

நிச்சயம் நிறைவேறும்

சோகமே என்றும் வாழ்வாவதில்லை
சரித்திரங்கள் மாற்றப்படும்
காலம் பதில் சொல்லும்

அருமையான கவிதை நன்றிகள்

Mohamed Faaique said...

no comments

ஹேமா said...

ஏதோ செய்யவேணும் என்று மட்டும் மனதிற்குள் உருத்துது யாதவன் !

Anonymous said...

தமிழினத்தின் தலை விதி என்று விட்டுவிட்டு போக முடியாது நண்பா...படம் கொடூரம் அருகில் இருந்தவர்களது மனநிலை எப்படி இருந்திருக்கும் என்று கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை ..((

குறையொன்றுமில்லை. said...

வலி சுமந்த வரிகள். மனதை பாரமாக்கி விட்டன.

அப்பாதுரை said...

கனமான கவிதை. ஹேமாவின் கருத்தும்.

நிரூபன் said...

எங்களின் கடந்த காலங்களைப் போலவே இக் காலத்திலும் நகர்ந்து கொண்டிருக்கும் அடக்கு முறையின் கீழான வாழ்க்கையினைப் படம் பிடித்துக் காட்டுகிறது உங்கள் கவிதை.

சக்தி கல்வி மையம் said...

valigal niraintha kavithai..

மாலதி said...

//பிணம் இல்லாமல் கிரிகை செய்வதும்
இறுதி வரை பிணமாக இருப்பதும் //கனமான கவிதை.

Admin said...

சொல்ல வார்த்தைகள் இல்லை

Anonymous said...

<<>>


நிதர்சனம்.

கனமான & அருமையான கவிதை.

நிகழ் கால இயலாமை & கடந்த கால சோகம்.

மறக்க இவை தின பத்திரிக்கையின் வெற்று வரிகள் அல்லவே.

தொடர்ந்து எழுதுங்கள்.

sarujan said...

உண்மை ....வலி என்னால் மூச்சு விட முடில்ல

குணசேகரன்... said...

என்று இந்த நிலை மாறும்?

Anonymous said...

ஒவ்வொரு வரியிலும் உட்(ள்)பொருள் வைத்தே
செவ்வரி கவிதை செப்பினீர் அழக
தேனென இனிக்கும் தீந்தமிழ் மொழியே
தீயெனமாற கசிந்தனநீரும் என்னிரு விழியே

புலவர் சா இராமாநுசம்
புலவர் குரல்

Admin said...

கொடுமையிலும் கொடுமை

PUTHIYATHENRAL said...

கலங்காதே தமிழா! காரிருள் அகலும்! விடியல் தோன்றும்! சிங்கள பேரினவாத கயவர்கள் தண்டிக்கப்படும்வரை தமிழினம் உறங்காது!
ரொம்பவும் வலியான கவிதை! பெயருக்கு தகுந்தால் போல் உங்கள் தளம் முழுவதும் கவிதைகள் கொட்டிக்கிடகிறது. பணிகள் தொடரட்டும் வாழ்த்துக்கள். அன்புடன்- புதியதென்றல். சிந்திக்கவும்.நெட்.