6/12/2011

உன்னையே நீ மறந்திடுவாய்


தடாகத்து தாமரையோ
தரணியில் பூத்த தேவதையோ
தங்கத்தில் கடைந்தெடுத்த
தளததளக்கும் பெண்தானோ

காதல் ரசம் சொட்டுகின்ற
கண்களில் காமம் இல்லை
தேவை தேடும் இதழ்களில்
தாகங்களின் சுவை எத்தனை

நீர் எடுத்து ஆடி வந்தால்
குளிர்கின்ற பூந்தளிர்
நெஞ்சோடு அணைத்தெடுத்து
முத்தம் தரும் சுவை தனி

பஞ்சு மெத்தை மிஞ்சிவிடும்
பதை பதைத்து கொஞ்சிவிடும்
வஞ்சி உன்னை காண்பதற்கு
கண்கள் இரண்டும் கெஞ்சிவிடும்

பாதம் தொட்டால் சிலிர்திடுவாய்
முத்தம் தந்து சுளுக்கெடுப்பாய்
உயிர் தேடும் நினைப்பினிலே
உன்னையே நீ மறந்திடுவாய்

41 comments:

மைந்தன் சிவா said...

முதலே வந்தான் பாஸ்..அப்போ காணவில்லை போஸ்ட்டை..என்னாச்சு??

மைந்தன் சிவா said...

ஹிஹி எனக்கு தான் வடையா???அவ்வவ்

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

kalakkal kabitahi..
sorry i am in mobile..

மைந்தன் சிவா said...

//தேவை தேடும் இதழ்களில்
தாகங்களின் சுவை எத்தனை//

கணக்கில்லை பாஸ்!!

மைந்தன் சிவா said...

அனுபவக்கவிதை???வாஸ்தவம் தானே..வயசு அப்பிடி!

பூங்கோதை said...

//வஞ்சி உன்னை காண்பதற்கு
கண்கள் இரண்டும் கெஞ்சிவிடும்//
யாரு சினேகாவையா... இது கொஞ்சம் ஓவர்டா...
காதலோட காமமும் சொட்டுது... கவிதை அருமை..

பூங்கோதை said...

யாது... vote பண்ணலாம் எண்டு பார்த்தன்...ஆனால் அந்த இடத்தையே காணலயே... என்ன ஆச்சு...??

சந்ரு said...

நல்ல வரிகள் எப்பவும் போல். இரசித்தேன்

நேசமுடன் ஹாசிம் said...

காதல் மணம் அருமையான வரிகள்

யாதவன் said...

மைந்தன் ப்லோக்கேரில் சின்ன பிரச்சனையா போட்டு அது தான் வரும் ஆனா வராது விளையாட்டு

யாதவன் said...

இன்ட்லி பிரச்சனையாய் இருக்கு போல அக்கா

சி.கருணாகரசு said...

காதல் சொட்டுகிறது.... பாரட்டுக்கள்.

அன்புடன் மலிக்கா said...

காதல் ரசம் கவிதையில்..

Mohamed Faaique said...

ம்ம்ம்..... ரொம்ப ஃபீல் பண்ணியிருக்கீங்க...
சூப்பரா இருக்கு பாஸ்..

யாதவன் said...

Mohamed Faaique இதுதானே நீங்க கேட்டது

Ramani said...

படமும் பதிவும் மிக மிக அருமை
ஒன்றை ஒன்று வெல்ல
போட்டிபோடுகிறார் போல உள்ளது
தொடர வாழ்த்துக்கள்

sarujan♥ ! ♥ ! (சாருஜன்)♥ ! ♥ ! said...

முதன் முதலாக வருகை தருகிறேன் அருமையான காதல் உணர்வை வெளிபடுத்தும் வரிகள் இனி பின் தொடருகிறேன்

vanathy said...

அழகிய வரிகள். அருமையான கவிதை.

கந்தசாமி. said...

///பஞ்சு மெத்தை மிஞ்சிவிடும்
பதை பதைத்து கொஞ்சிவிடும்
வஞ்சி உன்னை காண்பதற்கு
கண்கள் இரண்டும் கெஞ்சிவிடும்//// என்னே வர்ணனை ,, அசத்திரிங்க பாஸ்... காதல் வந்திடிச்சா ...)

ஹேமா said...

முத்தம் தந்து சுளுக்கெடுக்கிறது....புதுசாயிருக்கு யாதவன் !

சந்திரகௌரி said...

காதல் கவிதையின் காட்சியும் கவியும் இனிமையே.

சி.பி.செந்தில்குமார் said...

வந்தேன் மறந்தேன்

நிரூபன் said...

காதல் ரசம் சொட்டுகின்ற
கண்களில் காமம் இல்லை
தேவை தேடும் இதழ்களில்
தாகங்களின் சுவை எத்தனை//

பாஸ்..இந்தக் கவிதையில் உணர்வின் உச்சத்தைக் காட்டும் ஹைலைற் வரிகள் இது தான்...

அருமையாகக் கோர்த்திருக்கிறீங்க. சொல் அலங்காரமும் அருமை.

நிரூபன் said...

ஒரு உயிருக்குள் இன்னோர் உயிர் புகுந்த பின் ஏற்படும் உணர்வுகளையும் கவிதையில் அழகாக வடித்திருக்கிறீங்க.


உன்னையே நீ மறந்திடுவாய்//

மனதிற்குள் காதல் ரசம் தந்து நினைவுகளைக் கிளறி விடுகிறது.

உலக சினிமா ரசிகன் said...

எழுத்தாளர் சுஜாதா கதையை திருடி வெள்ளைக்காரர்கள் ஹாலிவுட் படமாக்கியிருக்கிறார்கள்.முழு விபரம் அறிய எனது வலைப்பக்கம் வாருங்கள்.

Anonymous said...

wonderful lines :)

Lakshmi said...

அழகாக வரிகளைக்கோர்த்து அருமையா கவிதை
தந்திருக்கீங்க. வாழ்த்துக்கள்.

Lakshman said...

Super anna. wow... wonderful poem

மாலதி said...

//பாதம் தொட்டால் சிலிர்திடுவாய்
முத்தம் தந்து சுளுக்கெடுப்பாய்
உயிர் தேடும் நினைப்பினிலே
உன்னையே நீ மறந்திடுவாய்//அருமையாகக் கோர்த்திருக்கிறீங்க. சொல் அலங்காரமும் அருமை.

போளூர் தயாநிதி said...

//நீர் எடுத்து ஆடி வந்தால்
குளிர்கின்ற பூந்தளிர்
நெஞ்சோடு அணைத்தெடுத்து
முத்தம் தரும் சுவை தனி//அழகாக வரிகளைக்கோர்த்து அருமையா கவிதை
தந்திருக்கீங்க. வாழ்த்துக்கள்.

மாலதி said...

உளம் கனிந்த பாராட்டுகள் நண்பரே தொடருங்கள்...

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

இன்றுதான் முதல்தடவையாக வருகிறேன்! கவிதை அருமையாக இருக்கிறது! ப்ளாக் டிசைன் சூப்பர்! வாழ்த்துக்கள்! இனி தொடர்ந்து வருவேன்!

Lingeswaran said...

கவிதையும் அழகு......கன்னியின் படமும் அழகு...

♔ம.தி.சுதா♔ said...

////பஞ்சு மெத்தை மிஞ்சிவிடும்
பதை பதைத்து கொஞ்சிவிடும்/////

உங்க எதுகை மோனைக்க என்றைக்குமே குறைச்சல் இல்லை அண்ணா அருமை...

Tamil Unicode Writer said...

அன்பானவரே, இப்போது தங்கள் வலைபதிவின் வாசகர்கள் தமிழிலேயே கமெண்ட் இட வசதியாக பிளாக்கருக்காக தமிழ் யூனிகோடு வந்துவிட்டது, இதைப் பயன்படுத்துவதன் மூலம் அதிக மறுமொழிகளை தமிழில் பெறமுடியும். மேலும் விவரங்களுக்கு இங்கே சொடுக்கவும்

மைந்தன் சிவா said...

புது படம் கலக்குது...வெளிநாடு போல!!!???

vidivelli said...

very very nice..........
supper poem..


can you come my said?

kaanal said...

மிகவும் அருமை

சி.பி.செந்தில்குமார் said...

>>பாதம் தொட்டால் சிலிர்திடுவாய்
முத்தம் தந்து சுளுக்கெடுப்பாய்

ஹி ஹி ஹி

kovaikkavi,Denmark) said...

நல்ல காதல் வரிகள் வாழ்த்துகள்.

இராஜராஜேஸ்வரி said...

http://blogintamil.blogspot.com/2011/06/2_23.html

தங்களை வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன். பார்த்து தங்கள் கருத்துக்களைத் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி.