5/31/2011

எங்கிருந்தாலும் தொடரும் நட்புறவு

நீண்டதோர் வாழ்கை பயணம்
நிலைத்திடா உயிர்கள் இணையும்
உறவுகளின் உச்ச சங்கமம் - தொடர்
கதையாய் போகும் உற்சவம்

இடையிலே சேரும் பல உறவு
பாதியிலே முறியும் சில உறவு
உயிருடன் சேரும் ஒரு கனவு - அது
இறுதி வரை வரும் ஒரு உறவு

பணத்தாலே சேரும் பல உறவு
குணத்தாலே சேரும் சில உறவு
ஆபத்தில் உதவுவது எந்த உறவு - அது
எங்கிருந்தாலும் தொடரும் நட்புறவு

22 comments:

சி.பி.செந்தில்குமார் said...

முதல் மழை எனை நனைத்ததே

Lakshmi said...

மிகவும் உண்மை. நல்லா இருக்கு

Ramani said...

இறுதி வரிகள் இரண்டும் மிக மிக அருமை
நல்ல பதிவு தொடர வாழ்த்துக்கள்

கந்தசாமி. said...

ரெயில் பயணம் வாழ்க்கை -அதில் கழட்டி விடப்படும் பெட்டிகள் உறவுகள் ,

கந்தசாமி. said...

நட்பை மையமாக வச்சு எழுதியிருக்கீங்க, நல்லாய் இருக்கு பாஸ் ,

Anonymous said...

awesome anna!!!!!!!!! brilliant

Mohamed Faaique said...

நல்லாயிருக்கு பாஸ்....

ஹேமா said...

அழகான நட்பின் பெருமை !

# கவிதை வீதி # சௌந்தர் said...

தொடரும் நட்புடன்...

சந்திரகௌரி said...

நட்புறவில் நீங்கள் கொண்ட நம்பிக்கைக்கும் அதைக் கவிதையாய் அலங்கரித்த அழகுக்கும் வாழ்த்துக்கள்

தோழி பிரஷா( Tholi Pirasha) said...

சூப்பர்
அருமையான வரிகள் யாதவன்.

மைந்தன் சிவா said...

நட்புறவுக்கு நாம இருக்கம் பாஸ்...

நிரூபன் said...
This comment has been removed by the author.
நிரூபன் said...

கபடமற்ற, பிரதியுபகாரம் எதிர்பார்க்காத உண்மை நட்பின் உன்னத நிலையினை உங்கள் கவிதை மூலம் வெளிப்படுத்தியிருக்கிறீர்கள். அருமையான கவிதை மாப்பு.

Lakshman said...

anna, ennaku romba pudichiruku. very nice words

பூங்கோதை said...

”உடுக்கை இழிந்தவன் கை போல்..” என்ற வரிகளின் கருத்தை அழகாக எளிய தமிழில் தந்திருக்கிறாய்... நன்றாக இருக்கிறது. வாழ்த்துக்கள்.

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

ஆபத்தில் உதவுவது எந்த உறவு - அது
எங்கிருந்தாலும் தொடரும் நட்புறவு

/// அருமையான வரிகள் சகோ..

"என் ராஜபாட்டை"- ராஜா said...

Super kavithai

vanathy said...

அழகு கவிதை.

kovaikkavi said...

ஆபத்தில் உதவுவது எந்த உறவு - அது
எங்கிருந்தாலும் தொடரும் நட்புறவு

Vetha. Elangathilakam. said...

உறவுகளின் உச்ச சங்கமம் - தொடர்
கதையாய் போகும் உற்சவம்.
இதில் தானே இனிமை உண்டு.
Vetha. Elangathilakam
http://www.kovaikkavi.wordpress.com

ஆகுலன் said...

கடைசி நான்கு வரிகள் உண்மையின் தரிசனம்...
மைக்ரோசொப்க்கு ஒரு நேரடி விசிட்...(பகுதி2)