வேதனையின் வடுக்கள்
கொடுமையின் ஆட்சி
சின்னபின்னமான உயிர்கள்
சிவந்து நிற்கும் கண்கள்
கேவலம்
எம்மால் முடியவில்லை
பிச்சை ஏந்தும் கைகள்
சாகவும் மனமில்லை
வாழவும் பிடிக்கவில்லை
நப்பாசையில் நகரும்
நாகரிகமற்ற வாழ்க்கை
நாளைய தலைமுறைக்கு
விட்டுச்செல்ல ஒன்றுமில்லை
Tweet | |||||
14 comments:
இனவாதமும் யுத்தமும் தந்தவடுக்கள்..
///நாளைய தலைமுறைக்கு
விட்டுச்செல்ல ஒன்றுமில்லை//// வலி மிகு வரிகள் நண்பா
யாதவன்...ஆதங்கம்.இனி எல்லாமே அகதித் தமிழன் கையில்தான்.விட்டுச்செல்ல ஏதுமில்லாவிட்டாலும் விட்டதையாவது எடுக்க வழி செய்வோம் !
வேதனையின் ஆழத்தை நல்லா சொல்லி இருக்கீங்க.
புது விடியல் வரும் என்று நம்புவோம்
எங்களின் கடந்த கால ஒப்பீடுகள் ஊடாக நகரும் உங்களின் யதார்த்தம் நிறைந்த கவிதை அருமை சகோ. உண்மையில் நாம் கையாலகாதவர்களா அல்லது கைகள் அற்றவர்களா என்று தான் இதனைப் படிக்கையில் எண்ணத் தோன்றுகிறது தோழா.
எதை கொண்டு வந்தோம் விட்டு செல்ல....
தன்னம்பிக்கை இருக்கு நன்பா.....
நாளைய தலைமுறைக்கு
விட்டுச்செல்ல ஒன்றுமில்லை
ஏன் ஒன்றுமில்லை. நல்ல பழக்கவழக்கங்கள், சகிப்புத்தன்மை, பொறுமை, விட்டுக்கொடுக்கும் மனப்பாங்கு, ஜீவராசிகள் அனைத்திலும் பாசம், கொல்லாமை, வாய்மை இப்படி எத்தனையோ இருக்கிறது.
சுமந்த தோள்கள் துவண்டு போச்சோ...
சுதந்திரம் எங்கள் கனவாகிப் போச்சோ...
நத்தைகள் போன்ற நம் வாழ்வு - இங்கே
நாகரீக வாழ்வின் விலை என்னவோ???
வடுக்கள் என்றும் அழியாது யாதவன்.
நாளைய தலைமுறையாவது தலைநிமிர்ந்து வாழனும் வாழும் என நம்பிக்கை கொள்வோம்
மனதை கனக்கச் செய்யும் கவிதை.
அருமையாக உள்ளது
Thanks every body
பாஸ், ஒவ்வோர் ஞாயிறும் கவிதை போடுவீங்களே, இன்றைய கவிதையைக் காணேல்லையே. எங்கே சகோ.
சின்னபின்னமான உயிர்கள்
சிவந்து நிற்கும் கண்கள்
வேதனை நிலை தான். வெல்ல இறைவன் சக்தி தரட்டும். Vetha.Elangathilakam.
http://www.kovaikkavi.wordpress.com
Post a Comment