5/15/2011

காதலிச்சவன் காத்திருக்கிறான் சிறைக்குள்ளே


புளியமரத்தடி பிள்ளையார் கோவில்
பொங்கல் பானையில் கட்டிய பட்டு
சின்னஞ்சிறுசுகளின் எட்டுக்கோடு
சிரித்துக்கொண்டே நீ சுடும் வடைகள்

தீர்த்த குளத்தின் தாமரை மலர்கள்
தீண்டாமல் தீண்டும் இலைகளில் நீர்கள்
பார்த்து விட்டு போகும் உன்னுடைய அம்மா
பார்த்துக்கொண்டே இருக்கும் என்னுடைய கண்கள்

படையல் முடிந்ததும் படிக்கும் தேவாரம்
உன்னை நினைத்தே பூசும் வீபூதி
சாம்பிராணி புகையின் நறுமண புகை
வென்றுவிடும் உன் கூந்தலின் வாசனை

காதலை சொல்ல காத்திருந்த தருணம்
கண்களால் பேச பாத்திருந்த புருவம்
காலம் கூடாமல் வந்த இடப்பெயர்வு
வாழ்வில் சேராமல் போன நம் காதல்

உன் இடுப்பிலே இப்பொழுது சிறுபிள்ளை
கைதியாய் இருக்கின்றேன் நான் சிறைக்குள்ளே
கட்டியவன் செத்தான் போரினிலே
காதலிச்சவன் காத்திருக்கிறான் சிறைக்குள்ளே

28 comments:

Unknown said...

தலைப்பில் ஏதேனும் அரசியல் உள்குத்து இருக்கிறதா?

Unknown said...

படையல் முடிந்ததும் படிக்கும் தேவாரம்
உன்னை நினைத்தே பூசும் வீபூதி

காதலை சொல்ல காத்திருந்த தருணம்
கண்களால் பேச பாத்திருந்த புருவம்

சின்னஞ்சிறு ஹைக்கூக்கள் இவை...

Unknown said...

உங்கள் எழுத்து நடையில் ஏதோ வித்தியாசம் தெரிகிறது. ஆனால் ரசிக்கும் படி இருக்கிறது.

சி.பி.செந்தில்குமார் said...

நீங்க ஜெயில்ல இருந்துக்கிட்டே எப்படி கவிதை எல்லாம் எழுதி போஸ்ட் போட முடியுது? #டவுட்டு

ம.தி.சுதா said...

ஃஃஃஃகாதலை சொல்ல காத்திருந்த தருணம்
கண்களால் பேச பாத்திருந்த புருவம்
காலம் கூடாமல் வந்த இடப்பெயர்வு
வாழ்வில் சேராமல் போன நம் காதல்ஃஃஃ

என்ன ஒரு பொருத்தமான வரிக் கோர்ப்பு அண்ணா... உண்மை உணர்வை வெளிப்படையாக பகிர்ந்துள்ளீர்கள் நன்றிகள்...

Anonymous said...

///சாம்பிராணி புகையின் நறுமண புகை
வென்றுவிடும் உன் கூந்தலின் வாசனை/// காதல் காதல் ..

Anonymous said...

///உன் இடுப்பிலே இப்பொழுது சிறுபிள்ளை
கைதியாய் இருக்கின்றேன் நான் சிறைக்குள்ளே
கட்டியவன் செத்தான் போரினிலே
காதலிச்சவன் காத்திருக்கிறான் சிறைக்குள்ளே // உருக வைக்கும் வரிகள் பாஸ்.

Mohamed Faaique said...

///தலைப்பில் ஏதேனும் அரசியல் உள்குத்து இருக்கிறதா? ///

இது சொந்த குத்து போல் இருக்கு.... கைதி என்பது சூழ்னிலைக் கைதியாக இருக்க முடியுமுள்ள.....

கவி அழகன் said...

பாரத்... பாரதி... said...
தலைப்பில் ஏதேனும் அரசியல் உள்குத்து இருக்கிறதா?

Mohamed Faaique said...
///தலைப்பில் ஏதேனும் அரசியல் உள்குத்து இருக்கிறதா? ///

இது சொந்த குத்து போல் இருக்கு.... கைதி என்பது சூழ்னிலைக் கைதியாக இருக்க முடியுமுள்ள.....

தலைப்பில் உள்குத்தும் இல்லை வெளிக்குத்தும் இல்லை சொந்த குத்தும் இல்லை தொப்பி அளவான ஆக்கள் போட்டுகொல்லுன்கப்பா

கவி அழகன் said...

பாரத்... பாரதி... said...
உங்கள் எழுத்து நடையில் ஏதோ வித்தியாசம் தெரிகிறது. ஆனால் ரசிக்கும் படி இருக்கிறது.

எழுத்து நடையில் மாற்றம் தெரிகிறது தான்
அது தானாக வந்தது எப்படி என்று தெரியவில்லை
ஒரு வேலை என்னால் இயன்றது இவ்வளவுதானோ தெரியாது

கவி அழகன் said...

சி.பி.செந்தில்குமார் said...
நீங்க ஜெயில்ல இருந்துக்கிட்டே எப்படி கவிதை எல்லாம் எழுதி போஸ்ட் போட முடியுது? #டவுட்டு

மனச்சிறையில் இருந்தால் முடியும்தானே போஸ்

கவி அழகன் said...

ம.தி.சுதா♔ கந்தசாமி.

நன்றி செல்லங்களா உங்கள் கருத்துகளுக்கு

அப்பாதுரை said...

காதலி யார்? தமிழமா? (அழகான வரிகளுக்குப் பின் அரசியல் உள்குத்தைக் காணுதே மனம்?)

நிரூபன் said...

புளியமரத்தடி பிள்ளையார் கோவில்
பொங்கல் பானையில் கட்டிய பட்டு
சின்னஞ்சிறுசுகளின் எட்டுக்கோடு
சிரித்துக்கொண்டே நீ சுடும் வடைகள்//

சகோ, இந்தக் கவிதை பற்றி நிறையச் சொல்லலாம், நிறைய நினைவுகளை இந்தக் கவிதை அலசுகிறது.
வரிக்கு வரி சிலாகிக்க வேண்டும், இதோ வருகிறேன்.

நிரூபன் said...
This comment has been removed by the author.
நிரூபன் said...

காதலிச்சவன் காத்திருக்கிறான் சிறைக்குள்ளே//

காதலிச்சவன் காத்திருக்கிறாந் இங்கே இரு பொருட்கள் தொக்கி நிற்கின்றன சகோ.

காதலில் விழுந்தவன் காதலித்த குற்றத்திற்காக சிறையிருக்கிறானா/

இல்லை காதலித்தவன் சிறை சென்ற பின்னர் தன் காதல் கூடும், சிறை மீள்வேன் எனும் நம்பிக்கையில் காத்திருக்கிறான எனப் பொருள் உரைக்கிறது உங்கள் கவிதையின் தலைப்பு.

நிரூபன் said...

புளியமரத்தடி பிள்ளையார் கோவில்
பொங்கல் பானையில் கட்டிய பட்டு
சின்னஞ்சிறுசுகளின் எட்டுக்கோடு
சிரித்துக்கொண்டே நீ சுடும் வடைகள்//

புளியமரத் தடியில், வடை சுடும் பெண்ணை நீங்கள் ரசிக்கும் போது, உங்களின் பின் புலம் எப்படி இருந்தது என்பதனை அழகாக வர்ணித்துள்ளீர்கள்.

நிரூபன் said...

தீர்த்த குளத்தின் தாமரை மலர்கள்
தீண்டாமல் தீண்டும் இலைகளில் நீர்கள்
பார்த்து விட்டு போகும் உன்னுடைய அம்மா
பார்த்துக்கொண்டே இருக்கும் என்னுடைய கண்கள்//

சந்த நயம் கவிதைக்கு அழகு சேர்க்கிறது.

அவங்க அம்மா அடிக்க வரலையா;-))

நிரூபன் said...

படையல் முடிந்ததும் படிக்கும் தேவாரம்
உன்னை நினைத்தே பூசும் வீபூதி
சாம்பிராணி புகையின் நறுமண புகை
வென்றுவிடும் உன் கூந்தலின் வாசனை//

சகோ கொன்னுட்டீங்க சகோ...

அவளை அருகே வைத்து அவளை நினைத்துப் பூசும் விபூதி..அருமையான வார்த்தைகளின் கோர்வை.
சாம்பிராணியின் நறு மணத்தினையே வென்று விடும் கூந்தல்,இது உயர்வு நவிற்சி அணியா, இல்லை உண்மையான வார்த்தைகளா என்று எண்ணத் தோன்றுகிறது சகோ.
கவிதையின் முதல் பாதியில் நகைச்சுவை உணர்வும், கலகலப்பினையும் இவ் வரிகள் தருகின்றன சகோ.

நிரூபன் said...

காலம் கூடாமல் வந்த இடப்பெயர்வு
வாழ்வில் சேராமல் போன நம் காதல்//

இடப் பெயர்வின் மூலம் இருப்பிடம் தொலைத்த காதல்கள் தான் எத்தனை,
காலவோட்ட மாற்றத்தில் கரைந்து போன வலி கலந்த நினைவுகளாயினும், இன்றும் கண் முன்னே நிற்பது போன்ற உணர்வு.

நிரூபன் said...

கட்டியவன் செத்தான் போரினிலே
காதலிச்சவன் காத்திருக்கிறான் சிறைக்குள்ளே//

இவ் வரிகளுக்கு எப்படி விளக்கமளிப்பது என்று புரியவில்லை சகோ, இவை கவிதைகளாக இருக்கட்டும் என்று சொல்லித் தேற்றினாலும், கடந்த கால அவலங்களால் ஒரு சிலரின் வாழ்வும் இதே நிலையில் தானே இருக்கிறது சகோ.

நிரூபன் said...

கவிதை வித்தியாசமான மொழி நடையில், சந்த நயத்துடன் அமைந்திருக்கிறது. முதல் பாதியில் அழகான நகைச்சுவை கலாய்ப்பு நிறைந்த காதல் வரிகள் வந்து விழுந்திருந்தாலும், இறுதி இரண்டு வரிகளும் கவிதையின் போக்கினை மாற்றி, மனதின் உணர்வுகளைக் கொன்று விடுகிறது சகோ.

ஹேமா said...

போர்,சிறை,இடப்பெயர்வு நம்மூர்க் காதலா....!

கவி அழகன் said...

நிருபன் நீங்க கவிதைக்குள்ள பூந்து விளையாடிங்க
புல்லரிக்குது உங்கட கருத்துகளை வாசிக்க

vetha (kovaikkavi) said...

படையல் முடிந்ததும் படிக்கும் தேவாரம்
உன்னை நினைத்தே பூசும் வீபூதி
சாம்பிராணி புகையின் நறுமண புகை
வென்றுவிடும் உன் கூந்தலின் வாசனை ....nalla vatikal...
Vetha.Elangathilakam.
Denmark.

கவி அழகன் said...

நன்றி அன்பு உள்ளங்களே
உங்கள் கருத்துகளுக்கு

kowsy said...

வித்தியாசமான கவி வரிகளுக்குள் மறைந்திருக்கும் அற்புதமான கதையொன்று வாசித்தேன். பல வரிகளில் வரவேண்டியதை சில வரிகளில் கவிதையாய்த் தந்த கவிவன்மைக்குப் பாராட்டுக்கள்.
இந்த வரிகள் முன்னமே தந்திருந்தேன் யாதவன். ஏன் உங்கள் வலைக்கு வரவில்லை என்று தெரியவில்லை.

அன்புடன் மலிக்கா said...

வரிகளில் வித்தியசம். குடிகொண்டிருக்கும் ஒருவித சோகம் என படிக்கும்போதே மனதை கனத்து ஈர்த்தது..