காலையில் உன்னை
கைபிடித்து எழுப்பி
சோம்பல் முறிக்கையில்
கட்டி அனணத்து
குளியலறை போக
சண்டை பிடித்து
குளித்து முடித்து
சாமி கும்பிட்டு
உன் நெத்தியில் நானும்
என் நெத்தியில் நீயும்
திருநீறு பூசிவிட
நீ கண்களை மூட நான் ஊத
நான் கண்களை மூட நீ ஊத
அப்படியே நான்கு கண்களும்
நடனமாடி பின்னி பிணைய
நேரம் போவதை எண்ணி
சுதாரித்து முழித்து
அவசரமாய் அடுப்படி சென்று
நீ ஆத்திவரும் தேநீருக்காய்
தொலோக்காட்சி முன் தவமிருந்து
உன்கையில் தேநீர் வாங்கி
உனக்கே பருக்கி விட
அப்படியே அதை நீ
எனக்கு பருக்கி விட
எனது காலை விடிகிறது
அன்புள்ள காதலுடன்
Tweet | |||||
11 comments:
நல்ல ரசனையான கவிதை.
ஆஹா... ரொம்ப தான் ஆசை... ஹா.. ஹா...
நல்ல சிந்தனை...
வாழ்த்துக்கள்... நன்றி…
ஒரு காதல் காலை எவ்வளவு அழகாய் இருக்கிறது.காதலிக்காதவர்களையும் தூண்டிவிடுறமாதிரி இருக்கு யாதவன் !
காதலும் அழகு!
அழகிய காதலால் காலையும் அழகு !
ஒவ்வொரு காலையும் காதலுடன் விடியட்டும்............
அழகான விடியல்!
புதுமண தம்பதிகளின் காலை காதல் விடியல் அருமையான கவிதைதான் ஓய்...!!!
அன்புள்ள காதலுடன் விடியும் காலை நன்று கவி அழகன்.
பணி தொடரட்டும். நல்வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.
காதலை சிறப்பாக பதிவு செய்து உள்ளீர் முரண்படாமல் ம்னகளுடன் தொடங்கும் உண்டா வாழ்வு ஊடலும் கூடலும் தான் சிறப்பான இன்பத்தை தருகிறது பாராட்டுகள்
எனது காலை விடிகிறது
அன்புள்ள காதலுடன்//
அழகான கவிதை.
வாழ்த்துக்கள்.
ஐஐஐஐஐஐ!!!ஆஹா!!!!!!!!!நல்லாருக்கே.அருமை நண்பா..!
இன்னும் சொல்லுவேன் சத்தமாய்! ..!!!!
காதலுடன் காலை விடியல் அருமை கவிதை!பின்னுகின்றீங்க காதல் ரசனையில்!ம்ம்
Post a Comment