8/01/2012

வாணம் தாண்டிய – என் மனசு உனக்கு


கிழக்கு வானில்

உதிக்கும் சூரியன்

சிறகை விரித்து

பறக்கும் தாமரை


குளத்தில் மீன்கள்

குளித்து முடித்து

கூந்தல் ஒதுக்க

குளிரும்காற்று


நனைந்த படிகளில்

நதியின் ஓட்டம்

நெளியும் நீருக்கு

புடவை மாற்றம்


இளமை அடைக்கும்

புடவைத் தலைப்பு

நனைந்த கூந்தலில்

புதுப்பூ சிரிப்பு


காற்றில் பறக்கும்

மேனி அழகு

மேனி தாங்கும்

ஆடை குழைவு


வெட்கம் தின்ற

கண்கள் உனது

வெட்டி வைத்த

கன்னம் சிவப்பு


உச்ச ஸ்தாயியில்

ஓடும் கால்கள்

பக்க வாத்தியம்

பாடும் கொலுசு


மிச்ச ஸ்தாயியை

கேட்கும் மனசு

குச்சுபிடியாய்

துள்ளும் இதயம்


நனைந்த கூந்தல்

நனைத்த முதுகு

நடக்கும் போது

பறக்கும் இடுப்பு


குனிந்த தலையில்

சிரிக்கும் உதடு

விரிந்த கண்கள்

தேடும் அழகு


கைகள் கூப்பி

கடவுள் வணக்கம்

கண்கள் மூடி

மனசின் விருப்பம்


வரங்கள் கேட்கும்

கரங்கள் நடுங்கும்

வார்த்தை சொல்ல

உதடு துடிக்கும்


உதடு தட்டி

கண்கள் ஒத்தி

கடவுள் பார்பதாய்

என்னை பார்த்து


வரங்கள் தரும்

கண்கள் அழகு

வாணம் தாண்டிய – என்

மனசு உனக்கு

20 comments:

sathishsangkavi.blogspot.com said...

அழகான மனசு....

சிவரதி said...

வானம் தாண்டவைத்த _ அந்த மனசை
வார்த்தைகளாக்கி வரிவடிவில்
வடித்த விதம் அழகு...

திண்டுக்கல் தனபாலன் said...

அருமையாக முடித்துள்ளீர்கள்....
வாழ்த்துக்கள்...
நன்றி...

குறையொன்றுமில்லை. said...

கவிதை நல்லா இருக்கு வாழ்த்துகள்

ஹேமா said...

’நெளிந்த நீருக்கு புடவை மாற்றம்....’அழகாயிருக்கு யாதவன் !

Anonymous said...

''..வானம் தாண்டிய – என்

மனசு உனக்கு...'''

நல்ல சொற் கட்டு. இனிய காதற் கவிதை. நல்வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.

செய்தாலி said...

ம்ம்ம்... அருமை

MARI The Great said...

நீங்க கவிஞன் பாஸ் கவிஞன்!

MARI The Great said...

தூள கிளப்புங்க!

ஆத்மா said...

அழகாக இருக்கிறது வரிகள்.....
//
வெட்கம் தின்ற

கண்கள் உனது

வெட்டி வைத்த

கன்னம் சிவப்பு
///

vimalanperali said...

நல்ல கவிதை .வாழ்த்துக்கள்.

மாதேவி said...

அழகிய காதல் கவிதை.

mycollections said...
This comment has been removed by the author.
mycollections said...

அழகா உன் கவிதை என்றும் அழகுதான்.

வரங்கள் தரும்

கண்கள் அழகு

வானம் தாண்டிய – என்

மனசு உனக்கு

Anonymous said...

அருமையான கவிதை .. இயற்கை பெண்ணானதா அல்லது பெண் இயற்கையானாளா இந்த கவிதையில் .

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

ஒரு நல்ல திரைப்பட பாடலின் வரிகள் போல உள்ளது அழகு,

கவி அழகன் said...

Thnk you very much all for ur comments

ம.தி.சுதா said...

////உச்ச ஸ்தாயியில்

ஓடும் கால்கள்

பக்க வாத்தியம்

பாடும் கொலுசு////

மனதை தொட்டுப் போன இடம் சகோ..

இந்த இடத்தில் ஒரு முறை நின்று ரசித்துப் போனேன்..

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

அழகான வரிகளுடன் அழகான காதல் கவிதை அருமை

கோமதி அரசு said...

வரங்கள் தரும்

கண்கள் அழகு

வாணம் தாண்டிய – என்

மனசு உனக்கு//

அழகாய் காதலை சொல்லும் கண்கள்.
அதற்கு பரிசு வாணம் போன்ற விரிந்த மனசு.
வாழ்த்துக்கள்.