வானம் கண்மூடியதால்
மேகம் இருட்டானதோ
மேகம் கைவிட்டதனால்
மழை நீர் நிலம் தொட்டதோ
பூமி அணைக்காததால்
வெள்ளம் நதி சென்றதோ
நதிகள் வளைவென்றதால் - அது
வழுக்கி கடல் சென்றதோ
கடலில் அலை செல்வதால் - என்
காதலும் அலைகின்றதோ
அலைகள் கரை தட்டுவதால் - நான்
கரையில் காத்து நிற்பதோ
Tweet | |||||
9 comments:
நல்ல சிந்தனை நண்பரே ...!
அணைக்காததாள்->அணைக்காததால், தட்டுவதாள்->தட்டுவதால் --- இவைகளை மாற்றி விடவும். வாழ்த்துக்கள்... நன்றி...
Nanri thilare
நல்ல படைப்பு...நியாயமான கேள்விகள்.இந்த சிந்தனைகள் தான் வாழ்தலை அழகுபடுத்துகிறது.வாழ்த்துக்கள் சொந்தமே.!
ஒரு மரணவிரும்பியின் கடைசி நிலாச்சந்திப்பு!!! ..!!!!
வித்தியாசமான சிந்தனை
அருமையான படைப்பு
தொடர வாழ்த்துக்கள்
நல்ல கவிதை வாழ்த்துகள்
''...பூமி அணைக்காததால்
வெள்ளம் நதி சென்றதோ
நதிகள் வளைவென்றதால் - அது
வழுக்கி கடல் சென்றதோ ..'
நல்ல வரிகள். நல்வாழ்த்து. வேதா. இலங்காதிலகம்.
ஓர் அழகிய சிந்தனை வாழ்த்துக்கள் சகோ தொடருங்கள் .
அலைகள் கரை தட்டுவது இயற்கை,நாம் கரை காத்து நிற்பது நம் தேவைக்காக,
காத்து நிற்பதும்,கரை தட்டுவதும் வெவ்வேறாகவே சொல்லிச்
செல்லப்படுகிறது.நன்றி வணக்கம்.நல்ல் கவிதை. வாழ்த்துக்கள்.
நல்ல சிந்தனை..அருமையான கவிதை.
Post a Comment