7/12/2012

காதல் என்னை கொன்றிடும்

பூக்களில் மகரந்தம் – உன்

புண்ணகையில் சிறு காந்தம்

வண்டுகள் மொய்திடும் -உன்

வார்த்தைகள் தின்றிடும்


புற்களில் பனித்துளி – உன்

கண்களில் சிறு ஒளி

வெப்பத்தில் உருகிடும் – உன்

வெட்கம் உயிர் தொடும்


குருவிகள் கீச்சிடும் – உன்

குரல்களில் இசைவரும்

மரக்கிளை அசைந்திடும் – உன்

மனசிலே மழை வரும்


சூரியன் கண் முழிக்கும் – உன்

நெஞ்சிலே பெண் சிரிக்கும்

காலை அது விடிந்திடும் – உன்

காதல் என்னை கொன்றிடும்

4 comments:

Chamundeeswari Parthasarathy said...

nice...

Athisaya said...

மரக்கிளை அசைந்திடும் – உன்

மனசிலே மழை வரும் ஃஃஃஃஃஃஃஃ

வலிகளிலே மழை வருகிறது மனதோடு.வாழ்த்துக்கள்

Lakshmi said...

கவிதை நல்லா இருக்கு வாழ்த்துகள்.

அம்பாளடியாள் said...

அடடா இதுவல்லவோ கவிதை!!!.....சூப்பர் சகோ .
பகிர்வுக்கு மிக்க நன்றி வாழ்த்துக்கள் .