மூச்சு காற்று
உடல் பரவி திரும்பும்
அசுத்த காற்று
உடலுக்குள் அசுத்தமா
உலகமே அசுத்தமா
அசுத்த உலகில்
சுத்த காற்றை
மூக்கு துவாரம்
வடிகட்டும்
மனித உடம்பில்
சுத்த காற்று
அசுத்தங்களை
வெளித்தள்ளும்
உடலுக்குள் அசுத்தமா
உலகமே அசுத்தமா
அசுத்த ஆட்சிகள்
சுத்தத்தை அசுத்தமாகி
வெளுத்து கட்டும்
சுத்தங்கள்
சுத்தமாக வாழமுடியாமல்
அசுத்ததுக்குள்
சுத்தம் தேடும்
சுத்தங்களின் சுவையை விட
அசுதங்களின் சுவை அதிகம்
அதிகாரம் கையில் இருந்தால்
அசுத்தங்களெல்லாம் சுத்தம்
சுத்தமான கீழ்தட்டு
அசுத்தமாக வாழ்வதும்
அசுத்தமான மேல்த்தட்டு
சுத்தமாக வாழ்வதும்
மரணித்த மனிதங்களின்
உலகமயமான உலகு
என்பதை உறுதிப்படுத்தும்
Tweet | |||||
11 comments:
அருமையான கவிதை
சுத்தமான தண்ணீர்
திரும்பும் போது
சிறுநீராக முடைநாற்றத்துடன்
நன்றி சகோ
சுத்தமான கீழ்தட்டு
அசுத்தமாக வாழ்வதும்
அசுத்தமான மேல்த்தட்டு
சுத்தமாக வாழ்வதும்
மரணித்த மனிதங்களின்
உலகமயமான உலகு
என்பதை உறுதிப்படுத்தும் //
அருமையான வித்தியாசமான அழகான சிந்தனை
மனம் கவர்ந்த பதிவு வாழ்த்துக்கள்
வித்தியாசமான நல்ல கவிதை ! நன்றி !
நல்ல கவிதை.
வாழ்த்துகள்.
மரணித்த மனிதங்களின்
உலகமயமான உலகு
என்பதை உறுதிப்படுத்தும்
அருமையான கருத்து..
வித்தியாசமான சிந்திக்க தூண்டும் கவிதை
வணக்கம் நண்பா,
அசுத்தம் எங்கே என அறிந்திட முடியாது தேடல் கொள்ளும் மனதின் உணர்வுகளைச் சொல்லி நிற்கிறது இக் கவிதை.
''..சுத்தமான கீழ்தட்டு
அசுத்தமாக வாழ்வதும்
அசுத்தமான மேல்த்தட்டு
சுத்தமாக வாழ்வதும்
மரணித்த மனிதங்களின்
உலகமயமான உலகு
என்பதை உறுதிப்படுத்து..''
நல்ல வரிகள், வாழ்த்துகள்.
வேதா. இலங்காதிலகம்.
http://kovaikkavi.wordpress.com
நல்ல கவிதை.
ரொம்ப சுத்தம்
ஹிந்தியாவே முடிவு செய்.
தமிழ்நாடு வேண்டுமா? சிங்கள நாடு வேண்டுமா?
-------------------
தறுதலை
(தெனாவெட்டுக் குறிப்புகள் - மார் '2012)
Post a Comment