உன் ஈர விழியில்
ஒரு துளி
நான் ஏங்கி தவிக்கிறேன்
தனிமையில்
என் தனிமை தாங்கும்
மர நிழல்
உன் சோகம் சொல்லும்
கார்முகில்
ஊஞ்சல் ஆடும்
இருமனங்கள்
சேர துடிக்கும்
இரு நிறங்கள்
பாசத்தோடு
அருகில் இருந்து
உச்சி நெத்தி கோதும்
உண்மை காதல்
கரம் பிடித்து
இதழ் குவித்து
சோடி சேரும்
நாளை எண்ணி
Tweet | |||||
16 comments:
ராசா என்ன சொல்ல வர்றீங்கே
புரியாலே...முடியாலே
படங்களும் அதற்கான விளக்கப் பாடல்களாக அமைந்த
கவித்துவமிக்க வரிகளும் அருமை
தொடர வாழ்த்துக்கள்
காத்திருப்புக்கள் என்றும் இனிமையானவை தோழா.வாழ்த்துக்கள்.
அழகான துளிப்பாக்கள்..
இதெல்லாம் யாருக்கு சொல்ல வர்ரீங்க நண்பரே...? anyway..நல்லாருக்கு..
நல்ல கவிதை வாழ்த்துகள்
மனதில் குமையும் ஏக்கம் !
காத்திருப்பின் வலியை கவிதையில் அழகா சொல்லி இருக்கீங்க. வாழ்த்துகள்.
அருமையான கவிதை நண்பா
கவிதைப் பாடல் -அதை
காட்டும் படங்கள்
கவிதை காதல்-இரண்டு
கண்களின் மோதல்
கவிதை சாரம்-நல்ல
கற்பனை ஊரும்
கவிதை அழகன்- சொல்லும்
காதலும் அழகே!
புலவர் சா இராமாநுசம்
படமும், உங்களின் கவிதை வரிகளும் அருமை! நன்றி நண்பரே !
காத்திருப்பின் அவஸ்த்தையைச் சொல்லி ஏங்க வைக்கின்றீர்கள் கவி அழகனே.
சில இடைவெளியின் பின் தொடர்கின்றேன் நலம்தானே?
என்னையா ஒரே பீலிங்கு???
ஓவரா பீல் பண்ணாதீங்கப்பா.
என்ஜாய்....!!!
ஏனய்யா இந்த ஏக்கம்? காலம் வரும் போது கனியும் தானே வாழ்த்துகள்.
வேதா. இலங்காதிலகம்.
http://kovaikkavi.wordpress.com
வணக்கம் நண்பரே,
சோடி சேரும் நாளை எண்ணித் தவிக்கும்/
எண்ணி வாடும் கவிக் கிழவனின் உள்ளத்து உணர்வுகளை கவிதை சொல்லி நிற்கிறது.
அழகிய கவி.
என் தனிமை தாங்கும்
மர நிழல்
உன் சோகம் சொல்லும்
கார்முகில்
அழ்கான கவிதை.. பாராட்டுக்கள்..
Post a Comment