2/14/2011

கோடித்தவிப்பை மூடிவைத்து


தேடி வந்த காதலும்
தேடிச்சென்ற காதலும்
மோதிக்கொண்ட இடமெது
மோத வைத்த மனமெது

கோடித்தவிப்பை மூடிவைத்து
கோடு போட்டு வாழ்ந்திருந்து
நாடிச்சென்ற நேரமெது
தாவிச்சென்ற இதயமெது

சோடி போட்டு வாழ்வதற்கு
சோடி சேர காத்திருந்து
செய்தி சொன்ன வார்த்தை எது
செய்தி வந்த உதடு எது

கூவிக் கூவி விற்பதற்கு
குவித்து வைக்கும் பொருளுமல்ல
தானாக வந்ததிது
தவிற்பவற்கே சொந்தமிது

16 comments:

அன்பரசன் said...

//கூவிக் கூவி விற்பதற்கு
குவித்து வைக்கும் பொருளுமல்ல
தானாக வந்ததிது
தவிற்பவற்கே சொந்தமிது//

ரசித்தேன்.

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

நல்லாயிருக்கு கவிதை....வாழ்த்துக்கள் யாதவன்.

நிரூபன் said...

கூவிக் கூவி விற்பதற்கு
குவித்து வைக்கும் பொருளுமல்ல
தானாக வந்ததிது
தவிற்பவற்கே சொந்தமிது//

சகோதரம் அருமை அருமை. இந்தக் காலத்திலை எங்கை சகோதரா இயல்பான காதல் வருது? எல்லாமே வேஷமாகத் தானே இருக்கிறது.

எஸ்.கே said...

கவிதைகள் அழகு! happy valentine's day!

Unknown said...

அழகான கவிதை...காதலர் தின நல்வாழ்த்துக்கள் நண்பரே!

Anonymous said...

//தானாக வந்ததிது
தவிற்பவற்கே சொந்தமிது//

so cute yathavan.. so nice. happy valentine's day

Sathish said...

//நாடிச்சென்ற நேரமெது
தாவிச்சென்ற இதயமெது//

superb...

kowsy said...

தவிற்க வைக்கும் சொந்தத்தை தேடிப் பெறத் தேவையில்லை. காதலது புனிதம். காந்தமாய்க் கவர்ந்திழுக்கும். கடைசிவரைத் தொடர்ந்திருக்கும். போராடி வெல்லவைக்கும். காதல் கவிதைக்குச் சொந்தமானவரே! காதலர்தின வாழ்த்துக்கள்.

சிந்தையின் சிதறல்கள் said...

அருமையான வரிகள் தோழா வாழ்த்துகள்

Priya said...

அருமையான வரிகளில் அழகான கவிதை, ரசித்து படித்தேன்.

Sriakila said...

nice one!!

Lingeswaran said...

சொற்களில் விளையாடுகிறீர்கள்.......சூப்பர்..

vanathy said...

nice.

ஜெயந்த் கிருஷ்ணா said...

கவிதை நல்லாயிருக்கு

நிலாமதி said...

excellent poem. Happy valentines day

ம.தி.சுதா said...

ஃஃஃஃஃகூவிக் கூவி விற்பதற்கு
குவித்து வைக்கும் பொருளுமல்லஃஃஃ

அப்படியா ? கலக்குங்க அண்ணாத்தை..