10/01/2009

இன்று சர்வதேச சிறுவர்தினம்

பிள்ளை அப்பா எங்கே

முள்ளிவாய்க்காளில்

இறுதியாக போர்நடந்த இடம்


அப்பா இறந்துவிட்டார்

இல்லை நான் அவர்உடலை

பார்க்கவில்லை


இறைவனுக்கே தெரியாது

எத்தனை பேர் இறந்ததென்று

உன் அப்பா சாம்பலாகிவிட்டார்


இல்லை

மீளக்குடியேறும்போது

அப்பாவை சந்திப்பேன்


இன்று சர்வதேச சிறுவர்தினம்

கொண்டாடுகிறார்களா

கொண்டு ஆடுகிறார்களா


வாழ்த்து தெரிவிக்கிறார்களா

வாழ்த்தமுன் வாடிவிழும்

பிள்ளைகளுக்கு

9 comments:

Anonymous said...

மீண்டும் வலியோடு உணர்வுகள்

ஈரோடு கதிர் said...

//மீளக்குடியேறும்போது//

சீக்கிரம் நடக்கனுமே

கவிக்கிழவன் said...
This comment has been removed by the author.
கவிக்கிழவன் said...

எல்லாம் கனவுதான் தமிழரசி கதிர் - ஈரோடு

ஹேமா said...

சும்மா இருங்க யாதவன்.எத்தனை இளம் பிஞ்சுகள் வாழாமலே இல்லாமல் போனார்கள்.எந்த நாடாவது தட்டிக் கேட்டதா?சும்மா கொண்டாட்டம்.ஒரு வேளை தங்கள் தங்கள் பிள்ளைகளுக்காகவாய் இருக்கும்.

கவி அழகன் said...

ஹேமா தங்கள் பிள்ளைகளுக்கு சிறுவர் தினம் தமிழ் பிழைகள் தான் பலிக்கடா வா

M.Thevesh said...

இப்படி ஒரு நிலைவரும் என்று யாரும்
எண்ணியிருக்கவிலை.இந்நிலை இந்தியா
என்ற ஒரு தேசத்தால் எம்மில் தினிக்கப்
பட்டுள்ளது.

ஊடகன் said...

அருமை தோழா........!
நல்ல பதிவு தொடருங்கள் உங்கள் பணியை.........!

நிலாமதி said...

கொடியவர்களின் பரிசுகளில் ஒன்று .......இது ,
பேசமுடியாமல் அதிர்ச்சியில் எத்தனை குழந்தைகள்.