1/30/2013

நீ என்னவள் ஆனதிற்காய் என்னை தருகிறேன்


பொங்குகின்ற மனசு
காந்தமாகுது
காதல் உன்னை தேடி
ஈர்த்து கொள்ளுது
வாழுகின்ற வாழ்க்கை
அர்த்தமாகுது
வாடாத வதனம்
கொள்ளை கொள்ளுது

அலை பாயும் தலைமுடிகள்
வாவென்று அழைக்குது
அழகுக்கு அடிமையாக்கி
கட்டி போடுது
நடை போடும்   கால்கள் என்னை
ஆட்டி வைக்குது
இல்லாத இடையை தேடி
கண்கள் அலையுது

பெண்ணாக பிறந்ததுக்கு
நன்றி சொல்லுறேன்
என் கண் முன்னே வந்ததுக்கு
கடவுளை நம்புகிறேன்
என்னோடு பேசியதுக்கு
பெருமைகொள்கிறேன்
நீ என்னவள் ஆனதிற்காய்
என்னை தருகிறேன்

3 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

இப்படியே கல்யாணம் முடிந்து, 2/5/10/15/20 வருடம் கழித்து சொல்ல வாழ்த்துக்கள்...

Easy (EZ) Editorial Calendar said...

கவிதை மிக மிக அருமை......உங்கள் பகிர்வுக்கு மிக்க நன்றி....

நன்றி,
மலர்
http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

நிலாமதி said...

அழகான கவிதை .வாழ்வு என்றும் வள மானதாக இருக்கட்டும்.

என்றும் மறவாத அக்கா