11/17/2012

வாராயோ மழையே நான் நனைய



அப்பனும் ஆத்தாளும் நினைத்ததில்லை
தாங்கள் பெத்து போட்டது எனக்கேண்டு
அம்மணமாய் அலையும் போதும் தெரியவில்லை
நான் தான் உனக்கு அவனெண்டு

பள்ளியிலும் உன்னை பார்க்கவில்லை
பழகி பேச நீ பக்கத்தில் இல்லை
எனக்கெண்டே உன்னை அலங்கரிக்கவில்லை -  இருந்தும்
வர்ணிக்காமல் இருக்க முடியவில்லை

முழு நிலவுக்குள் ஒரு பிறை நுதல்
பிறைகளின் கீழ் இரு நட்சத்திரம்
நட்சத்திர தோட்டத்தில் ரோஜா இதழ்
நாணத்தில் கவுளும் கன்ன மடல்

வளைந்திட்ட நதியாய் உடல் நெளிய
நொடிகின்ற அளவில் இடை தெரிய
கலைந்திட்ட முகிலாய் முடி தழுவ
வாராயோ மழையே நான் நனைய

5 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

ஆஹா... ரசிக்க வைத்தது வரிகள்...

Yaathoramani.blogspot.com said...

கவி மழையில் நாங்கள் நனைந்து குளிர்ந்தோம்
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்

ஹேமா said...

நினைக்காமல் கிடைத்தவளோ...அருமை !

மாலதி said...

காதல் என்றாலே இப்படித்தான் பல நிலைகளைக் கடந்து தான் தூரம் சென்றடைய வேண்டி இருக்கிறது ....

Anonymous said...

''...முழு நிலவுக்குள் ஒரு பிறை நுதல்
பிறைகளின் கீழ் இரு நட்சத்திரம்
நட்சத்திர தோட்டத்தில் ரோஜா இதழ்
நாணத்தில்...''

நல்ல வருணிப்பு கவிஅழகன்.
இனிய நல்வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.